Published:Updated:

சூர்யாவுடன் `நேருக்கு நேர்' மோதும் இயக்குநர் ஹரி... நீண்டுகொண்டே போகும் `அருவா' பிரச்னை!

சூர்யா, ஹரி

"`வேல்' படத்தின் பார்ட் -2 போலவே ஹரி கதை சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸான அந்தப் படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்யவேண்டும், இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் சில விஷயங்களைச் சேர்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் சூர்யா.''

சூர்யாவுடன் `நேருக்கு நேர்' மோதும் இயக்குநர் ஹரி... நீண்டுகொண்டே போகும் `அருவா' பிரச்னை!

"`வேல்' படத்தின் பார்ட் -2 போலவே ஹரி கதை சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸான அந்தப் படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்யவேண்டும், இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் சில விஷயங்களைச் சேர்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் சூர்யா.''

Published:Updated:
சூர்யா, ஹரி
இலைமறைவு காய்மறைவாக இருந்து வந்த நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக புலம்புகிறார்கள் சினிமாதுறையினர்.

ஹரி தனது மைத்துனர் அருண் விஜய் நடிக்க 'யானை' என்ற படத்தை இயக்கி வருகிறார். சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வரும் கிறுஸ்துமஸ் நாளில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது தயாரிப்புத் தரப்பு. இதற்கு போட்டியாக இயக்குநர் ஹரியும் தான் இயக்கும் 'யானை' படத்தை சூர்யா படத்துடன் நேருக்கு நேர் மோதும் வகையில் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுவருவதுதான் இப்போது மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பாண்டிராஜ் படத்துக்கு முன்பாக இயக்குநர் ஹரிக்குத்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார் சூர்யா. 'அருவா' எனப்பெயரிடப்பட்டு ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் நடந்தது. ஹரி ஏற்கெனவே சூர்யாவை வைத்து 'ஆறு', 'வேல்' சிங்கம்', 'சிங்கம் 2', 'எஸ்-3' (சி-3) என 'சிங்கம்' சீரிஸ் படங்களை இயக்கினார். 'எஸ் 3' படத்தின் வெற்றியை பாராட்டி ஹரிக்கு ஃபார்ச்சூனர் காரையும் சூர்யா பரிசளித்திருந்தார். 'அருவா' படம் மூலம் ஆறாவது முறையும் இந்தக் கூட்டணி இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 'அருவா' திடீரென யாரும் எதிர்பாராதவகையில் டிராப் ஆனது.

ஹரியுடன் சூர்யா
ஹரியுடன் சூர்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

" 'வேல்' படத்தின் பார்ட் -2 போலவே ஹரி கதை சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸான அந்தப்படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்யவேண்டும், இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் சில விஷயங்களைச் சேர்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் சூர்யா. ஆனால், ஹரியோ கதையில் ஒரு சின்ன மாற்றம்கூட செய்யத் தயாராக இல்லை. சூர்யா சொன்ன எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என சொன்னதோடு, கதையில் தலையிடுவதாக வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். இந்த ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி யோசிக்கத் தெரியல என்ற சூர்யா தரப்பு 'அருவா' படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் கோபமான ஹரி, 'என் கதையை ஹிட் ஆக்கி காட்டுறேன்' என சபதம் எடுத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே கடந்தாண்டு தியேட்டர்கள் திறக்கப்படாததால் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் ஒடிடியில் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஹரி "தியேட்டர்களில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்" எனச் சொல்லியிருந்தார். இதில் சூர்யா தரப்பு இன்னும் கோபமானது.

சிங்கம் 2
சிங்கம் 2

இதனால் மீண்டும் சூர்யா - ஹரி இணைவது சாத்தியமேயில்லை என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் ஹரி தனது மைத்துனர் அருண் விஜயை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார். 'யானை' எனப்பெயரிட்டு இப்போது படத்தை முடித்துவிட்டார். 'சூர்யா நடிக்க வேண்டிய கதையில் அருண் விஜய் நடித்திருப்பதாகவும், இதன் வெற்றி சூர்யாவுக்கு ஒரு பாடமாக இருக்கும்' என்றும் 'யானை' யூனிட்டினரிடம் ஹரி சொல்லி வருவதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், சூர்யாவுக்குச் சொன்ன அதே கதையைத்தான் ஹரி படமாக்கி இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது.

சூர்யாவின் படம் எப்போது வெளியானாலும் அதனுடன் போட்டி படமாக தனது 'யானை'யையும் களத்தில் இறக்க ஹரி முடிவு செய்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இருவரும் திறமையான கலைஞர்கள். எனவே ஈகோவை விட்டுவிட்டு, மீண்டும் கைகோக்க வேண்டும்" என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism