Published:Updated:

“ஓ.டி.டியால் சினிமா அழியாது!”

கே.எஸ்.ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.ரவிக்குமார்

‘புரியாத புதிர்’ல இருந்து நான் நடிக்க வேண்டிய கட்டாயம் உருவாச்சு. அதன் பிறகு என் எல்லாப் படங்கள்லேயும் நான் தலையைக் காண்பிச்சாலே படம் ஹிட்னு சென்டிமென்ட் ஆகிடுச்சு.

“ஓ.டி.டியால் சினிமா அழியாது!”

‘புரியாத புதிர்’ல இருந்து நான் நடிக்க வேண்டிய கட்டாயம் உருவாச்சு. அதன் பிறகு என் எல்லாப் படங்கள்லேயும் நான் தலையைக் காண்பிச்சாலே படம் ஹிட்னு சென்டிமென்ட் ஆகிடுச்சு.

Published:Updated:
கே.எஸ்.ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.ரவிக்குமார்
சினிமாவில் 31வது ஆண்டு காண்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 21 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தயாரிப்பாளராக ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் களம் இறங்கியிருப்பவரிடம் பேசினேன்.

``ஒரு இயக்குநரா உங்க பயணம் எப்போ ஆரம்பிச்சதுன்னு எல்லாருக்குமே தெரியும். நடிகரா அவதாரம் எடுத்தது எப்போதிலிருந்து..?’’

“உண்மையில் எண்பது, தொண்ணூறு காலகட்டங்கள்ல இருந்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே என் டைரக்டர்கள் பண்ற படங்களில் ‘ஏம்ப்பா ரவி, நீ அந்த டயலாக்கைச் சொல்லிடு’ன்னு நடிக்க வச்சிருப்பாங்க. அப்படித்தான் ‘ஆயிரம் பூக்கள்’ படத்துல மோகன்கிட்ட ஓடி வந்து காதுல சொல்ற மாதிரி ரோல் பண்ணியிருப்பேன். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வில் நாகேஷ் சார் ‘அந்த மிருதங்க வித்வான் கேரக்டரை நீயே பண்ணிடு’ன்னு பண்ண வச்சார். அதைப் போல என்கிட்ட ஒர்க் பண்ணின சேரன், ரமேஷ்கண்ணா, ஈரோடு சௌந்தர்னு எல்லா அசிஸ்டென்ட்களையுமே நடிக்க வச்சிருப்பேன்.

‘புரியாத புதிர்’ல இருந்து நான் நடிக்க வேண்டிய கட்டாயம் உருவாச்சு. அதன் பிறகு என் எல்லாப் படங்கள்லேயும் நான் தலையைக் காண்பிச்சாலே படம் ஹிட்னு சென்டிமென்ட் ஆகிடுச்சு. சக இயக்குநர்களான சுந்தர்.சி, ஹரின்னு இவங்க முதல் படம் பண்ணும்போதும் என்னை நடிக்க வச்சாங்க. அதைப் போலதான் என் இயக்குநர்களும் என்னை நடிக்க வச்சாங்க. எல்லாமே ஃப்ரீயா நடிச்சுக் குடுத்தேன். ஏன்னா எல்லாமே ஒருநாள், ரெண்டு நாள் படப்பிடிப்புகள்தான் இருந்துச்சு. செல்வா இயக்கின படத்துல டபுள் ஆக்‌ஷன் பண்ணினேன். அப்படி சம்பளம் வாங்காமல் நடிக்க ஆரம்பிச்சது இன்னிக்குத் தொழிலா வளர்ந்து நிக்குது. என் வயசுக்கேத்த கேரக்டர்களா பார்த்துப் பண்ணிட்டிருக்கேன்.”

“ஓ.டி.டியால் சினிமா அழியாது!”

`` ‘கூகுள் குட்டப்பா’... ஒரு ரீமேக்கைத் தயாரிக்க விரும்பியது ஏன்?’’

“நான் கடைசியாத் தயாரிச்ச படம் ‘தெனாலி’தான். அதுக்கப்புறம் டைரக்‌ஷன்ல பிஸி ஆகிட்டேன். என் அசிஸ்டென்ட்கள் சபரியும், சரவணனும்தான் இந்தப் படத்தை இயக்குறாங்க. அவங்க ஒருநாள் என்கிட்ட வந்து, ‘சார் நீங்க நிறைய படங்கள் நடிக்கிறீங்க. எங்களுக்கும் ஒரு படம் நடிச்சுக் கொடுங்க’ன்னாங்க. அவங்ககிட்ட கதை பத்திக் கேட்கும்போது, ‘ஒரு மலையாளப் படம் வந்திருக்கு. அதுல வரும் லீடு ரோலை தமிழ்ல நீங்க பண்ணினா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்கும் படம் பிடிச்சிருந்தது. நடிக்க சம்மதிச்சேன்.

அவங்க தயாரிப்பாளரா ஒருத்தரை அழைச்சிட்டு வந்தாங்க. ஆனா, அவர் அந்தப் படத்தின் ரைட்ஸைக்கூட வாங்காமல் இருந்தார். பொதுவா ரைட்ஸ் வாங்கின பிறகுதான் அதுக்கான நடிகர்களை புக் பண்ணியிருக்கணும். ‘ஹீரோவை கமிட் பண்ணின பிறகு பிசினஸ் ஆகும். அதன்பிறகு ரைட்ஸை வாங்கிக்கலாம்’னு நினைச்சிருக்கார். இப்படிப் பல விஷயங்கள் முறையா அமையாததால் ‘நானே தயாரிக்கறேன்’னு சொல்லிட்டேன். படத்துல தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபுன்னு பலர் நடிச்சிருக்காங்க. ரீமேக்குன்னாலும் அதே மாதிரி பண்ணல. ஒருதடவ ஒரிஜனல் வெர்ஷனைப் பார்த்தேன். அந்தக் கதை மைண்ட்ல இருக்கு. திரைக்கதை நாமதான் பண்ணியிருக்கோம். யோகிபாபுல இருந்து நடிகர்கள் எல்லாருமே ‘இயக்குநர்கள் நல்ல செலக்‌ஷன் சார்’னு பாராட்டினது சந்தோஷமா இருக்கு.

முக்கால்வாசி போர்ஷன் ஷூட்டும் முடிஞ்சிடுச்சு. ஒரே ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் ஷூட் மட்டும் மிச்சமிருக்கு. அதையும் முடிச்சிட்டா படம் ரிலீஸுக்கு ரெடியாகிடும்”

``இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை எப்போ பார்க்கலாம்..?’’

“இப்ப ‘கோப்ரா’, ‘மாளிகை’ன்னு நடிப்பில் பிஸியாகிட்டேன். டைரக்‌ஷன் சான்ஸ் அமையும்போது இயக்க ஆரம்பிச்சிடுவேன். இப்ப நான் சின்ன பட்ஜெட் படங்கள் இயக்க முடியாது. பெரிய புராஜெக்ட் அமையும்போது இயக்குவேன்!”

“ஓ.டி.டியால் சினிமா அழியாது!”

``சினிமா இப்ப ஓ.டி.டி கலாசாரத்துக்கு மாறிடுச்சே..?’’

“அப்படி மாறினதா தெரியல. இப்ப தியேட்டர்கள் மூடியிருக்கறதால அப்படி நினைக்கலாம். சினிமா வியாபாரத்துல அடுத்த கட்டம் இது. ஒருகாலத்தில் ஞாயிற்றுக்கிழமை டி.வி-யில மதியம் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பாகும். அதுக்கே தியேட்டர்ல கூட்டம் வரமாட்டேங்குதுன்னு சொன்ன காலங்களும் உண்டு. ஆனாலும் அதுக்காக சினிமா தேயலை. அப்புறம் சீரியல் வந்ததால் பெண்கள், ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர்றதில்லைன்னு சொன்னாங்க. முன்னாடி தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் கவுன்சில்கள்ல ‘என் படத்தை பஸ்ல போட்டுட்டாங்க’ன்னு புகார்கள் வரும். அந்தந்தக் காலகட்டங்களுக்குத் தக்க மாற்றங்கள் இருந்துகிட்டே இருந்திருக்கு. அப்படித்தான் இப்ப ஓ.டி.டி-யைப் பாக்குறேன். அதைத் தடுக்க முடியாது; தடுக்கவும் கூடாது. ‘கூகுள் குட்டப்பா’வை தியேட்டர்லதான் ரிலீஸ் பண்ற ஐடியால இருக்கோம். அதுக்கப்புறம்தான் ஓ.டி.டி ரிலீஸ்.’’

``நீங்க சினிமாவுக்குள் வந்து 31 வருஷம் ஆகிடுச்சு. எப்படி இருக்கு இந்தப் பயணம்..?’’

“நான் ‘புரியாத புதிர்’ பண்றதுக்கு முன்னாடியே உதவி இயக்குநரா கிட்டத்தட்ட பத்து வருஷம் இருந்திருக்கேன். அதையும் சேர்த்தா 41 வருஷம். இத்தனை வருஷத்துல நிறைய காலகட்டங்களைப் பாத்திருக்கேன். காலங்கள் உருண்டோடினாலும் அதுல நானும் பயணிச்சுவந்திருக்கேன். இந்தப் பயணம் திருப்தியா இருக்கு. ஒரு இயக்குநரா நிறைய நடிகர்களையும், டெக்னீஷியன்களையும் பார்த்த மகிழ்ச்சி இருக்கு. சினிமாவுல நான் கற்றது கை மண் அளவுதான். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்ல முடியாது. ஏதோ தெரிஞ்சுக்கிட்டேன். நான் பெரிய சாதனையெல்லாம் படைக்கல. நல்ல இயக்குநர்னு பெயரை சம்பாதிச்சிருக்கேன். இத்தனை வருஷ பயணத்துல திரும்பிப் பார்த்தால் என் பசங்க வளர்ந்து நிற்குறாங்க. எல்லாரும் கல்யாணமாகிப் போகும்போது நமக்கு வயசாகிடுச்சுன்னு ஃபீல் வருது. அவங்க குழந்தைப்பருவத்துல அவங்களோடு நேரம் செலவழிக்காமல் பிஸியா நான் ஓடிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் திரும்பிப் பார்த்து அவங்களை கவனிச்சிருக்கலாம். அவங்களோட சந்தோஷமான தருணங்கள்ல கூட இருந்திருக்கலாம். அதை ரொம்ப மிஸ் பண்ணிட்டேனோன்னு இப்ப தோணுது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism