Published:Updated:

"விக்ரமுடன் ஒரு படம்; `மாமன்னன்'ல மாரி செல்வராஜ்..." - சுவாரஸ்யங்கள் பகிரும் கிருத்திகா உதயநிதி

இயக்குநர் கிருத்திகா உதயநிதி

"இன்னும் நிறைய பெண் இயக்குநர்கள் வரணும். அது அவ்வளவு பெரிய சவால். எனக்கு ரெட் ஜெயின்ட்னு ஒரு சப்போர்ட் இருந்தது. அதுக்குப் பிறகு, மேல வர்றது என் கையிலதான் இருந்தது." - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

"விக்ரமுடன் ஒரு படம்; `மாமன்னன்'ல மாரி செல்வராஜ்..." - சுவாரஸ்யங்கள் பகிரும் கிருத்திகா உதயநிதி

"இன்னும் நிறைய பெண் இயக்குநர்கள் வரணும். அது அவ்வளவு பெரிய சவால். எனக்கு ரெட் ஜெயின்ட்னு ஒரு சப்போர்ட் இருந்தது. அதுக்குப் பிறகு, மேல வர்றது என் கையிலதான் இருந்தது." - இயக்குநர் கிருத்திகா உதயநிதி

Published:Updated:
இயக்குநர் கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை', 'காளி' படங்களைத் தொடர்ந்து, தன்னுடைய மூன்றாவது படைப்பை வெப் சீரிஸாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கியிருக்கும் 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் சீரிஸ் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கிறது. அவரின் சினிமாப் பயணம், குடும்பம் எனப் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

வெப் சீரிஸ் பக்கம் போகலாம்னு எப்போ முடிவெடுத்தீங்க?

உங்களுக்குத் தோணுற கதைகளை உங்க கணவர் உதயநிதிகிட்ட சொல்வீங்களா?

இன்பநிதி, தன்மயா ரெண்டு பேருக்கும் ஒரு அம்மாவா கிருத்திகா எப்படி?

நீங்க வொர்க் பண்ணணும்னு நினைக்கிற ஹீரோயின்கள்?

உதயநிதி - அன்பில் மகேஷ் சேந்திருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவுல வைரலாகுது. அவங்களுடைய நட்பு பற்றி?

இப்போ எந்தப் பெரிய படம் வந்தாலும் அதை ரெட் ஜெயின்ட் மூவீஸ்தான் வெளியிடுறாங்க. அதை எப்படிப் பார்க்கிறீங்க?

ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெப் சீரிஸ்னாலே பெரும்பாலும் த்ரில்லர் ஜானர்லதான் வருது. அப்படியான சூழல்ல, ஃபீல் குட்டான கன்டென்ட் இதுக்குள்ள வொர்க்கவுட்டாகும்னு நினைச்சீங்களா?

"நீங்க சொல்றது உண்மைதான். வெப் சீரிஸ்னாலே க்ரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் நிறைய இருக்கு. நான் இந்த ஜானர்ல பண்ணலாம்னு சொன்னபோது, ஜீ5 டீம்ல இருந்து சப்போர்ட் பண்ணினாங்க. அதுதான் எனக்கு ரொமபப் பிடிச்சிருந்தது. இதுதான் இப்போ ட்ரெண்ட். அதனால, இந்த ஜானர்ல ஸ்கிரிப்ட் சொல்லுங்கன்னு அவங்க சொல்லலை. இறப்பை யாராலும் தவிர்க்கமுடியாது. எல்லோரும் கடந்துதான் ஆகணும். அதனால, இந்தக் கதையை எல்லோராலும் கனெக்ட் பண்ணிக்க முடியும்னு நினைக்கிறேன். ட்ராவல் பண்ணும்போது நாம நிறைய இடங்களுக்குப் போய் நம்மை எக்ஸ்ப்ளோர் பண்றோம் அப்படிங்கிறதைத் தாண்டி நமக்குள்ள நம்மைப் பத்தி நிறைய புரிய ஆரம்பிக்கும். அந்தப் பயணம் முடியும்போது நமக்கே தெரியாமல் ஒரு புரிதல் வரும். அப்படி இந்த சீரிஸ்ல இருக்கிற கேரக்டர்கள் ஒவ்வொருத்தரும் அவங்களைப் புரிஞ்சு, புதுப்பிச்சுக்கிறதுக்கு இந்தப் பயணம் எந்த அளவுக்குக் காரணமா இருக்குன்னு முடியும்போது தெரியும்."

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் கூடதான் ஆரம்பத்துல இருந்து வொர்க் பண்றீங்க. உங்களுக்கும் அவருக்குமான தொழில் ரீதியான நட்பு?

"நான், ரிச்சர்ட், ஆர்ட் டைரக்டர் சக்தி, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்னு எல்லோரும் ஒரு குடும்பமாவே மாறிட்டோம். நான் ஸ்பாட்ல கத்தவேமாட்டேன். அது எனக்கு வராது. ஒருவேளை நான் ஒரு இயக்குநர்கிட்ட வொர்க் பண்ணிட்டு வந்திருந்தால் அந்தப் பழக்கம் வந்திருக்குமோ என்னவோ! அதனால, நான் ஸ்பாட்ல ரொம்ப சைலன்ட் அண்ட் பொலைட். கொஞ்சம் சவுண்ட் கொடுத்து எல்லோரையும் கன்ட்ரோல் பண்றது ரிச்சர்ட்தான். அந்த வேலையை அவர்கிட்ட கொடுத்திடுவேன். இதுல நிறைய ரிஸ்கான ஷாட்ஸ் எடுத்திருக்கோம். நிறைய ஃபன் அதே சமயம், நிறைய அட்வெஞ்சர் இருந்தது. நான் என்ன எதிர்பார்க்கிறேன்னு ரிச்சர்டுக்கு நல்லாவே தெரியும். இந்த மாதிரி தொழில்ரீதியான புரிதலோட இருக்கும்போது, வேலை சிறப்பாகவும் முடியுது; சீக்கிரமாகவும் முடியுது. தரன், சைமன், வேத் ஷங்கர்னு மூணு இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பாடல் இருக்கும். எல்லாமே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகும். இது ஒரு மியூசிக்கல் ட்ராவல் படம்னுகூட சொல்லலாம்."

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி

'காளி' முடிஞ்ச சமயத்துல ஒரு ரொமான்டிக் டிராமா பண்ணப்போறதா சொல்லியிருந்தீங்களே!

"அதுதான் என்னுடைய அடுத்த படமா இருக்கும். அதுக்கான வேலைகள்தான் இப்போ ஆரம்பிச்சுப் போய்க்கிட்டிருக்கு. அந்தப் படம் பார்க்கும்போது எல்லாப் பெண்களும் தங்களை அந்தக் கேரக்டரோடு கனெக்ட் பண்ணிப்பாங்க."

விக்ரமை வெச்சு ஒரு படம் பண்ண ஆசைன்னு பல இடங்களில் சொல்லியிருக்கீங்க. அதை எப்போ எதிர்பார்க்கலாம்?

"இப்போவும் அதேதான் சொல்றேன். விக்ரம் சாருக்குப் படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஒருநாள் அது நடக்கும்னு நம்புறேன்."

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்துல 'மாமன்னன்' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கார் உதயநிதி. அந்தப் பட அனுபவம் பத்தி உங்ககிட்ட ஏதும் சொன்னாரா?

"நிறைய சொன்னார். ஆனா, அதெல்லாம் எந்த அளவுக்கு இப்போ சொல்லமுடியும்னு தெரியலை. மாரி செல்வராஜ் சார் பயங்கரமா பிழிஞ்சு எடுக்கிறார்னு கேள்விப்பட்டேன். என்னால பண்ண முடியாததை அவர் பண்றார்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு."

இப்போ உதயநிதி எம்.எல்.ஏ. வீட்ல அதிகம் சினிமா பத்தி பேசுறாரா, இல்லை, அரசியல் பத்திப் பேசுறாரா?

"என்கிட்ட அரசியல் பத்தி யாருமே பேசமாட்டாங்க. எங்க குடும்பத்திலேயே அரசியல் பத்தி நான்தான் பேக்வேர்டா இருப்பேன். சினிமா, அரசியல்ன்னு ரெண்டிலும் பயணிக்கிறதால உதய் ரொம்ப பரபரப்பாவே இருக்கார். ஆனா, அதை ரொம்ப அழகா சமாளிக்கிறார்."

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி

உங்களுடைய வீக் எண்ட் எப்படியிருக்கும்?

"நாங்க ரெண்டு பேருமே ரொம்ப பிஸியா இருக்கிறதனால, வீட்டுல இருக்கிறதே ரொம்ப ஹேப்பிதான். உங்க வீட்டுல என்ன நடக்குமோ அதுதான் இங்கே எங்க வீட்டுலயும் நடக்கும். வேற எதுவும் வித்தியாசமா இருக்காது. நானே, கல்யாணம் பண்ணிட்டு உதய் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி 'அவங்க எல்லாம் செலிபிரட்டி. அவங்க வீடு, ரிலேஷன்ஷிப், என்ஜாய்மென்ட் எல்லாம் வேற மாதிரியிருக்கும் போல'ன்னு நினைச்சேன். ஆனா, இங்கே வந்ததுக்குப் பிறகுதான் இதுவும் எல்லாருடைய வீடு மாதிரிதான்னு தோணுச்சு."

உங்க குடும்பத்தோட ஃபிட்னஸ் ரகசியம் என்ன?

"நாம சந்தோஷமா இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. அதுக்கு ஃபிட்னஸ் பெரிய காரணம். யாராவது என்கிட்ட உடல்நிலை, மனசு குறித்து நெகட்டிவா பேசுனா 'முதல்ல ஜிம் போங்க, வொர்க்கவுட் பண்ணுங்க. இதுலயே பாதி பிரச்னை தீர்ந்துபோயிரும்'ன்னு சொல்லுவேன். நாம வொர்க்கவுட் பண்ணும் போது ஹேப்பி ஹார்மோன்கள் சுரக்கும். இதனால, மனரீதியாகவும் ஆரோக்கியமான சில மாற்றங்கள் நடக்கும். எல்லார்கிட்டயும் ஃபிட்டா இருங்கன்னு சொல்லுவேன். எங்க குடும்பமும் இதைத்தான் ஃபாலோ பண்றோம்."

இயக்குநர்கள் சுதா கொங்கரா, ஹலிதா ஷமீம், மதுமிதா இவங்க எல்லோரும் சூப்பரா படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட பேசுறதுண்டா?

"அப்பப்போ பேசிக்குவோம். சுதா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். பெண் இயக்குநர்கள் ரொம்ப மைனாரிட்டியா இருக்கிறதனால எங்களுக்குள்ள பேசி நாங்களே எங்களை உற்சாகப்படுத்திக்குவோம். இன்னும் நிறைய பெண் இயக்குநர்கள் வரணும். அது அவ்வளவு பெரிய சவால். எனக்கு ரெட் ஜெயின்ட்னு ஒரு சப்போர்ட் இருந்தது. அதுக்குப் பிறகு, மேல வர்றது என் கையிலதான் இருந்தது. நிறைய பெண்கள் உள்ள வந்துகிட்டிருக்கிறது சந்தோஷமா இருக்கு. இன்னும் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்."

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
இயக்குநர் கிருத்திகா உதயநிதி

உங்க ஃபேவரைட் இயக்குநர்கள்?

"வெற்றிமாறன் சார் எப்பவும் ஐக்கானிக் டைரக்டர். மிஷ்கின் சார் படங்கள் பிடிக்கும். தியாகராஜன் குமாரராஜா வொர்க் ரொம்பப் பிடிக்கும். அவர் அடிக்கடி படம் எடுத்தா நல்லா இருக்கும். என்னை மாதிரி அவருடைய ரசிகர்கள் சார்பா கேட்டுக்கிறேன்."