Published:Updated:

`நானும் விஜய்யும் பெருமைப்படுறோம்!' - `மின்சார கண்ணா' - `பாராசைட்' பற்றி கே.எஸ்.ரவிக்குமார்

பாராசைட்
பாராசைட்

ஆஸ்கர் வென்ற `பாராசைட்'டின் கதை, `மின்சார கண்ணா'வைப் போலவே உள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசினோம்.

92-வது ஆஸ்கர் விருது விழாவில் பாங்க் ஜூன் ஹோ இயக்கிய `பாராசைட்', 4 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதி, `மின்சார கண்ணா'வைப் போலவே உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசினோம்.

கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார்

``ஷூட்டிங்ல ரொம்ப பிஸியா இருக்கிறதால, `பாராசைட்' படத்தை இன்னும் பார்க்கலை. இந்தப் படத்தோட கதை `மின்சார கண்ணா' மாதிரியே இருக்கிறதுன்னு நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆஸ்கர் வாங்கக்கூடிய கதையை 21 வருடங்களுக்கு முன்னாடியே செலக்ட் பண்ணதுக்காக நானும் விஜய்யும் பெருமைப்படுறோம். விஜய்யை ஹீரோவா வெச்சு டைரக்‌ஷன் பண்றதுக்காக அவர்கிட்ட ரெண்டு கதையைச் சொன்னேன்.

மின்சார கண்ணா
மின்சார கண்ணா

அவர் செலக்ட் பண்ணது இந்தப் படத்தைத்தான். படத்தோட கதை வேற ஒருத்தர் எழுதினார். திரைக்கதையும் இயக்கமும் நான் பண்ணியிருந்தேன். காப்பி ரைட் பிரச்னை குறித்து ரைட்டர்தான் கவலைப்படணும். ஆஸ்கர்ங்கிறது பெரிய விருது. மாநில விருதுகள் வாங்கினாலே நம்ம பெருமைப்படுவோம். பாராசைட் படம் ஆஸ்கர் விருது வாங்கியிருக்குங்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறேன்'' என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

`ஜோக்கர்', `பாராசைட்', `ஜூடி'... ஆஸ்கர் வென்ற படைப்பாளிகளும் அவர்களின் கதைகளும்!
பின் செல்ல