முதல் அலையின் செய்தியை உலகச் செய்தியாக பார்த்துக்கொண்டிருந்த நாம், இரண்டாம் அலையில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானோம். நமக்கு அருகிலிருந்த நண்பர்களை பறிகொடுக்க, மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாமல் திணற, ஆட்சியாளர்கள் பாடு திண்டாட்டமானது. இந்தக் கணங்களை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த மூன்று நிமிட வீடியோ Mask போடுவதன் அவசியத்தை தெள்ளத்தெளிவாக முன்வைக்கிறது. குறைவான உரையாடல்களைக் கொண்டு உணர்ந்து கொள்வதன் புரிதலை சுலபமாக்குகிறது. Mask அணிவதன் அவசியம் நம்மோடு சேர்ந்து மற்றவர்களையும் பாதுகாக்கிற நம் அக்கறையையும் சேர்த்தே கவனப்படுத்துகிறது. நவீனமாகச் சொல்லியதன் வகையில் அனைத்து தரப்பிற்கும் போய் சேர்ந்துவிட்டது.

இதை உருவாக்கியவர்கள் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த்தோடு நீண்டகாலமாக பணிபுரிந்தவர்கள். அவரது இழப்பை ஜீரணிக்க முடியாமல், அவரது நினைவுக்காகவும் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிற இயக்குநர் ககா, கே.வி. ஆனந்தின் அணுக்க சீடர். ஸ்மிருதி வெங்கட் முக்கியப் பாத்திரத்தில் நடித்து கொடுக்க, இசையை நார்மனும், ஒளிப்பதிவை அதிசயராஜும் கையாண்டிருக்கிறார்கள்.
எந்தப் பக்கமிருந்தேனும் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்ல காற்று வீசினால் நல்லதுதானே?! கொரோனாவின் தாக்கம் பற்றிய நல்ல புரிதலுக்கு வழிகாட்டிய குழுவிற்கு நன்றி!