Published:Updated:

```காப்பான்' படத்தை 5 கோடி பட்ஜெட்ல எடுத்திருந்தா, 'உயிர்கா'னு டைட்டில் வெச்சிருப்பேன்!'' - கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த்

`அயன்', `மாற்றான்' படங்களையடுத்து `காப்பான்' படத்தில் சூர்யாவுடன் இணைகிறார், இயக்குநர் கே.வி.ஆனந்த்

```காப்பான்' படத்தை 5 கோடி பட்ஜெட்ல எடுத்திருந்தா, 'உயிர்கா'னு டைட்டில் வெச்சிருப்பேன்!'' - கே.வி.ஆனந்த்

`அயன்', `மாற்றான்' படங்களையடுத்து `காப்பான்' படத்தில் சூர்யாவுடன் இணைகிறார், இயக்குநர் கே.வி.ஆனந்த்

Published:Updated:
கே.வி.ஆனந்த்

"ஒரு விஷயத்தைக் காப்பதற்காக ஒருவன் என்னென்ன பண்றான்; படத்தோட கதாநாயகன் எதைக் காப்பாத்த முனைகிறான்... அப்டீங்கிறதைச் சொல்றதுதான் கதை. நிறைய விஷயங்களை அழிச்சுதான் ஒரு விஷயத்தைக் காப்பாத்துறான். இதுல நாட்டு நடப்பு, பிரச்னைனு எல்லாம் இருக்கும். அரசியல் துளியளவுகூட இருக்காது." - 'காப்பான்' டைட்டில் குறித்து நம்மிடம் பகிர்கிறார், இயக்குநர் கே.வி.ஆனந்த். சூர்யாவுடன் தனது மூன்றாவது படமான 'காப்பான்' இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தவர், நமக்காகப் பேசியதிலிருந்து...

காப்பான்
காப்பான்

" `காப்பான்' பட டைட்டிலுக்காக ஆன்லைன்ல ஒரு போட்டி வெச்சிருந்தீங்க. அதுல அதிகம்பேர் வாக்களிச்ச 'உயிர்கா'வை ஏன் தேர்ந்தெடுக்கல?"

" 'மீட்பான்', 'காப்பான்', 'உயிர்கா' மூணு சாய்ஸ் கொடுத்திருந்தோம். அதுல 'உயிர்கா'தான் எனக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, உட்கட்சி வாக்கெடுப்புல 'காப்பான்'தானே இறுதியாச்சு (சிரிக்கிறார்). இந்த மாதிரி பெரிய பட்ஜெட் பட்டத்துக்கு வியாபாரத்துல இருக்கிறவங்க சொல்றதும் முக்கியம். விநியோகஸ்தர்கள் சிலர் 'உயிர்கா'னு சொன்னா, ஊறுகா மாதிரி இருக்குனு சொன்னாங்க. 'காப்பான்' கரெக்டா இருக்கும்னு ஃபீல் பண்ணாங்க. இந்த நிலையிலதான் 'காப்பான்' இறுதியாச்சு. இதுவே, இந்தப் படத்தை 5 கோடி ரூபாயில் எடுத்திருந்தோம்னா, கண்டிப்பா 'உயிர்கா'தான் டைட்டில்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"சூர்யாவுக்கு`அயன்' மாதிரி ஒரு ஹிட் வேண்டிய நிலையில் `காப்பான்' எப்படிப்பட்ட படமா இருக்கும்?"

காப்பான்
காப்பான்

"நாம பண்ணும்போது எல்லாமே நல்ல படமா வரணும்தான் பண்றோம். அன்னைக்கு 'அயன்' நல்லா இல்லைனு விமர்சனம் பண்ணாங்க. இன்னைக்கு 'அயன்' மாதிரி ஒரு படம் வேணும்னு சொல்றாங்க. இந்த மார்க், விமர்சனம் எல்லாமே அந்தந்த நேரத்துக்குத் தோன்றதுதான். இதனாலதான் நான் இந்த விருதையெல்லாம் மனசுல வெச்சுக்கிறது இல்ல. நமக்குத் திருப்தியா இருக்கிற ஒரு கதை, தயாரிப்பாளருக்கு லாபத்தைத் தருமானு பார்க்கிறோம். இது சூர்யாவுக்கு, மோகன்லாலுக்கு ஹிட் தருமானு பார்க்கிறது இல்ல. கதைகளுக்கு ஏற்ற கதாபாத்திரம், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள்... அவ்ளோதான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"உங்க படங்கள்ல காதல் காட்சிகள் ரொம்ப எளிதா கையாளப்படுதே?"

"எனக்குக் காதல் காட்சி எழுதுறது கடினமான விஷயம். என்படங்கள்ல காதல் ஒரு பகுதியாதான் இருந்திருக்கு. காதலைப் பத்திச் சொல்றதுக்கான அவகாசம் கொஞ்சம்தான் இருக்கு. அதனால, அப்படி ஃபீல் ஆகலாம்."

மாற்றான்
மாற்றான்

"படங்கள்ல சமுதாயப் பிரச்னைகளை சொல்லியே ஆகணுமா?"

"நாம எடுக்கிறது கமர்ஷியல் படம். இந்தப் படங்கள்ல வில்லன் இருந்தாதான் ஹீரோவுக்கு மரியாதை. வில்லன்னா யாரு, சமுதாயத்துக்கோ, கதாநாயகனுக்கோ கெட்டது பண்றவன். விவசாயம், ஊழல், ஏழைகள் நிலத்தை அபகரிக்கிறது, பெண்ணைக் கடத்திடறது... இப்படி ஒரு சின்ன லைன்தான் இருக்கு. படத்துக்குப் படம் களத்தை மாத்துனாதான் கரெக்டா இருக்கும். அப்போவும் நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் மூணாவது சீன்ல எட்டிப்பார்த்திடும்."

"இன்னைக்கு தமிழ் சினிமாவுல அதிகம் விவாதிக்கப்படுற விஷயம் ஆன்லைன் விமர்சனம். நீங்க விமர்சகர்களுக்குப் படம் எடுக்குறீங்களா, வெகுஜன மக்களுக்குப் படம் எடுக்குறீங்களா?"

"இரண்டு பேருக்கும் சேர்த்துதான் படம் எடுக்க முடியும். ஆன்லைன்ல, பத்திரிகைகள்ல பாராட்டணும்னு படம் எடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தப் படங்கள் போய் சேரமாட்டேங்குது. அதனால, முடிஞ்சளவுக்கு ரெண்டுபேருக்கும் பிடிக்கிற மாதிரி படங்கள் பண்ண முயற்சி பண்றோம்."

நயன்தாரா
நயன்தாரா

" 'மாற்றான்', 'அயன்', 'அனேகன்'னு உங்க பட டைட்டில்கள் எல்லாம் ஆண்களை மையப்படுத்தியே இருக்கே?"

"அதுக்கு முக்கியமான காரணம் எதுவும் இல்லை. அப்படிப் பார்த்தா, 'கவண்', 'கனா கண்டேன்' ஆகிய படங்கள் அப்படி இல்லையே. 'நீங்க ஆண்களுக்கு மட்டும்தான் கதை எழுதுவீங்களா'னு கேட்டீங்கனா, 'கவண்' படம் நயன்தாரா பண்ணியிருக்க வேண்டியது. பொதுவா நம்ம கதை நான்கைந்து பேருக்குப் போகும். அப்படிப் பலபேர் ஹீரோயிஸம் இல்லைனு ரிஜெக்ட் பண்ணாங்க. அப்புறம் அந்தக் கேரக்டரை நயன்தாராவுக்கு மாற்றி, அவங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கும்போதுதான் விஜய் சேதுபதி ஓகே சொன்னார்."

"உங்க படங்களைத் தவிர்த்த ஹீரோக்கள், அந்தப் படங்கள் ஹிட் ஆனபிறகு, பேசியிருக்காங்களா?"

" 'கோ' படத்துல சிம்பு கமிட்டாகி, ஒரு சின்ன விஷயத்துக்காக வெளியே போனார். அவர் ஏழெட்டு மாசம் கழிச்சுதான் படத்தைப் பார்த்துட்டு, ஜீவாவுக்கு கரெக்டா இருக்குனு சொன்னார். மற்ற பெரிய ஹீரோஸ் படத்தை முதல் நாளே பார்த்தாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்."

சிம்பு
சிம்பு

`` `என்.ஜி.கே’ படத்திற்குக் கிடைத்த ரிசல்ட் ‘காப்பான்’ படத்தின் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கா?”

``முதல் முறையா உங்க படத்துல மோகன்லால்?”

``பொமன் இரானியை எப்படித் தமிழுக்குக் கொண்டு வந்தீங்க?’’

``சூர்யா ஒரு பாசிட்டிவ் இமேஜ் கொண்ட நபர். அவருடைய கதாபாத்திரம் வில்லன் மாதிரி இருக்கும்னு அவர்கிட்ட சொன்னதும் என்ன சொன்னார்?’’

``புது மாப்பிள்ளை ஆர்யாவுக்கு என்ன மாதிரியான ரோல்?’’

`` `காப்பான்’ ஷூட்டிங் ஸ்பாட்ல ஆர்யா - சாயிஷாவோட காதலை நோட் பண்ணுனீங்களா?’’

``கதாசிரியர்கள் உங்க படத்துல ஒரு முக்கியமான அங்கமா இருக்காங்க; தொடர்ந்து கதாசிரியர்களோடு வேலை பார்ப்பது எப்படி இருக்கு?’’

``சமீபமா பெரிய பெரிய படங்களுக்கே கதைத் திருட்டுப் பிரச்னை வந்துச்சு; அதற்கு உங்களோட பதில் என்ன?’’

``ஹாரிஸ் ஜெயராஜோடு மீண்டும் இணைச்சிருக்கீங்க...’’

``உங்க படங்கள் ஒரு டெம்ப்ளேட் வட்டத்துக்குள்ள சிக்கிக்கிட்டு இருக்குங்கிற விமர்சனங்களை நீங்களே உங்க படங்களில் கேலி பண்றீங்களே?’’

``டைரக்டரானதுக்குப் பிறகு ஒளிப்பதிவுக்குன்னு உங்களை யாரும் அணுகவில்லையா?’’

``ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு மார்க்கெட் வேல்யூ உள்ள ஹீரோக்கள், வெவ்வேறான பட்ஜெட்; இந்த ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம்.?’’

``அடுத்த படம்?’’

உள்ளிட்ட பலகேள்விகளுக்கு இந்த வார ஆனந்த விகடன் இதழில் பதிலளித்திருக்கிறார். ஆனந்த விகடனை சப்ஸ்க்ரைப் செய்ய இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism