Published:Updated:

#AskDirLokesh| `பார்கவ் செத்துட்டான்' டு கைதி- 2 வில் விளக்கம் உண்டு வரை - லோகேஷ் கனகராஜ் பதில்கள்!

லோகேஷ் கனகராஜ்

`கைதியில் இறந்துபோனாரா அர்ஜுன் தாஸ், எப்படி விக்ரம் படத்தில் உயிரோடு வந்தார்' - வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்

Published:Updated:

#AskDirLokesh| `பார்கவ் செத்துட்டான்' டு கைதி- 2 வில் விளக்கம் உண்டு வரை - லோகேஷ் கனகராஜ் பதில்கள்!

`கைதியில் இறந்துபோனாரா அர்ஜுன் தாஸ், எப்படி விக்ரம் படத்தில் உயிரோடு வந்தார்' - வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் குறித்து ஏதாவது கேள்விகள் இருந்தால் #AskDirLokesh என்ற ஹேஷ்டாகில் குறிப்பிட்டு கேட்கவும் என்று ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் சிலரும் இதில் சுவாரசியமான கேள்விகளை முன்வைத்தனர். அவற்றிற்கு லோகேஷும் பதிலளித்துள்ளார். அக்கேள்வி பதில்கள் பின்வருமாறு,

லோகேஷ் கனகராஜ் - கமல்
லோகேஷ் கனகராஜ் - கமல்

சாந்தனு : உங்களுடைய மல்டிவெர்ஸில் பார்கவ் மீண்டும் வருவதற்கு சான்ஸ் இருக்கிறதா?

சாரி மச்சி பார்கவ் செத்துட்டான்.

அர்ஜுன் தாஸ் : உங்களுடைய புது காரில் என்னை எப்போது டிரைவ் கூட்டிச் செல்லப் போகிறீர்கள்

நீ எப்போ ஃப்ரீயாக இருக்கியோ அப்போ போலாம் மச்சி.

கலையரசன் : தளபதி 67 ஆடிசன் எப்போது சார்?

உங்களுக்கு ஆடிஷன் இல்ல சார்!

அர்ஜுன் தாஸ் கைதி படத்திலேயே இறந்து விட்டாரே. தற்போது எப்படி விக்ரம் படத்தில் உயிரோடு இருக்கிறார்?

அர்ஜுன் டாஸ்
அர்ஜுன் டாஸ்

கைதி படத்தில் அன்புவின் தாடைப் பகுதி நெப்போலியனால் உடைக்கப்பட்டது. அதனால்தான் விக்ரம் படத்தில் அவரது கழுத்தில் தழும்புகள் இருந்தன. இதற்கு கைதி 2 படத்தில் விளக்கம் அளிக்கப்படும்.

அனிருத்-லோகேஷ் காம்போ குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்.

இது பற்றி கூற வார்த்தைகளே இல்லை. இந்த காம்போ நெடுங் காலத்திற்கு தொடரும்.

கமல் சாருடனான மறக்க முடியாத அனுபவம்?

கமல் - லோகேஷ் கனகராஜ்
கமல் - லோகேஷ் கனகராஜ்

என்னுடைய உலகநாயகனுக்கு ரத்த காட்சிக்கான மேக்கப்பை போட்டுவிட்டது தான்!

மாநகரம் படத்தில் இருந்தே பல நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி வருகிறீர்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா மற்றும் இதை எளிதாக கையாள்வது எப்படி ?

நல்ல மனம் கொண்ட கதாநாயகர்களே இதற்கு காரணம். அவர்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் இதை செய்திருக்க முடியாது.

முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டு ஒரு படம் இயக்குவீர்களா

கஷ்டம் bro!

விக்ரம் இன்டர்வல் காட்சி சிலிர்க்க வைக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

நான் மெய் சிலிர்த்துவிட்டேன். ஏனெனில் அந்த காட்சியை நான் லைவாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

மன்சூர் அலிகான் சரி உங்கள் படத்தில் பார்க்கலாமா

விரைவில்…