Published:Updated:

Vikram:``வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து"- லோகேஷ் கனகராஜ் உருக்கம்

லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vikram:``வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து"- லோகேஷ் கனகராஜ் உருக்கம்

விக்ரம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published:Updated:
லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், 'கைதியைப் பார்த்துவிட்டு விக்ரம் உலகத்துக்கு வாருங்கள்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லேகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். "இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே `உலகநாயகன்' ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் 18 மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, `உலகநாயகன்' கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன். என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! கைதியை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism