Published:Updated:

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

கண்ணை நம்பாதே படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
கண்ணை நம்பாதே படத்தில்...

‘‘என் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' மாதிரிதான் இந்தப் படமும். நிறைய கேரக்டர்கள் இருக்கும். எல்லா கேரக்டரும் சும்மா பேருக்கு இல்லாமல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துற மாதிரி இருக்கும்.

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

‘‘என் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' மாதிரிதான் இந்தப் படமும். நிறைய கேரக்டர்கள் இருக்கும். எல்லா கேரக்டரும் சும்மா பேருக்கு இல்லாமல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துற மாதிரி இருக்கும்.

Published:Updated:
கண்ணை நம்பாதே படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
கண்ணை நம்பாதே படத்தில்...

`` `இரவுக்கு ஆயிரம் கண்கள்' முடிச்சுட்டு ஒரு லவ் சப்ஜெக்ட் பண்ணலாம்னு இருந்தேன். அதுல உதயநிதி சார் நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாள் ‘அண்ணனுக்கு ஒரு கதை வெச்சிருக்கேன்’னு அருள்நிதி சார்கிட்ட சொல்லியிருந்தேன். அதை ஞாபகம் வெச்சிருந்தவர், அவர் அண்ணன்கிட்ட கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தார். இந்தக் காதல் கதையில அரசியல் தொடர்பும் இருக்கும். அப்போ அவர் அரசியலுக்கு வரத் தயாரா இருந்த சமயங்கிறதனால இதுல நடிக்க யோசிச்சவர், ‘நாம இரவுக்கு ஆயிரம் கண்கள் மாதிரி ஒரு க்ரைம் கதை பண்ணலாமா? எனக்கு அது மாதிரியான அதிக ட்விஸ்ட்கள் இருக்கிற க்ரைம் கதையில நடிக்கணும்னு ஆசையா இருக்கு'ன்னு சொன்னார். சரின்னு என்கிட்ட இருந்த ஒரு க்ரைம் கதையைச் சொன்னேன். அது அவருக்குப் பிடிச்சுப்போய் ஆரம்பிச்சதுதான் ‘கண்ணை நம்பாதே' படம்’’ எனப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் மு.மாறன்.

மாறன்
மாறன்

`` ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு கொலையை மையமா வெச்சு நகரும் படம். இந்தப் படம் எப்படி?’’

‘‘ரெண்டு நாள்ல நடக்கிற கதை. வழக்கமா சொல்ற மாதிரிதான் ‘ஹீரோவுக்கு ஒரு பிரச்னை, அதுல எப்படி மத்தவங்க எல்லாம் வர்றாங்க, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்’ங்கிற பேட்டர்ன்லதான் இருக்கும். ஹீரோ கிராபிக்ஸ் கம்பெனில வேலை செய்றவர். ஒரு சில பிரச்னைகள் இவரைத் தேடி வருது. சில பிரச்னைகள்ல இவரே தன் அவசர குணத்துனால தேடிப்போய் சிக்கிக்கிறார். இதையெல்லாம் எப்படிச் சமாளிச்சு வர்றார்ங்கிறதை உளவியல் பார்வையிலேயும் சொல்லியிருக்கேன். இதுல நல்லவங்க கெட்டவங்கன்னு எந்த கேரக்டரும் இல்லை. சூழல் எப்படி அவங்களை மாத்திக் கொண்டுபோகுதுங்கிற விளையாட்டுதான் இந்தப் படம். இதுவரை சினிமாவில் பேசப்படாத முக்கியமான சமூகக் குற்றத்தைப் பற்றியும் பேசப்பட்டிருக்கு. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும்.’’

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!
நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

``வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?’’

‘‘என் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' மாதிரிதான் இந்தப் படமும். நிறைய கேரக்டர்கள் இருக்கும். எல்லா கேரக்டரும் சும்மா பேருக்கு இல்லாமல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துற மாதிரி இருக்கும். அதனால எல்லா கேரக்டர்லேயும் முக்கியமான நபர்கள் நடிக்கணும்னு நினைச்சேன். பூமிகா இதுல ரொம்ப முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. இவங்க கேரக்டர் இதுல நிச்சயம் பேசப்படும். பூமிகாவை கமிட் பண்ணினவுடனே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது காந்த்தான். காரணம், ‘ரோஜாக் கூட்டம்' படம். அவருக்கும் நான் சொன்ன கேரக்டர் பிடிச்சுப்போய் உடனே ஓகே சொல்லிட்டார். பிரசன்னாவுக்கும் முக்கியமான கேரக்டர். இவங்க எல்லோரும் வந்தவுடன் படம் பெரிசாகிடுச்சு. இவங்க இல்லாமல் சதீஷ், வசுந்தரா, மாரிமுத்து, சுபிக்‌ஷான்னு நிறைய பேர் இருக்காங்க. ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கோ அதே மாதிரி எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.’’

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!
நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

``உதயநிதி - ஆத்மிகா புது ஜோடி எப்படி வொர்க் அவுட் ஆகியிருக்கு?’’

‘‘நயன்தாரா, சமந்தா, காஜல் மாதிரியான ஹீரோயின்கள் இந்தக் கதைக்குத் தேவைப்படலை. படம் பார்க்கும்போது பக்கத்து வீட்டுப் பொண்ணு ஃபீல் வரணும். இந்தக் கதைக்குத் தேவையான ஹீரோயினா ஆத்மிகா இருந்தாங்க. எனக்கும் ‘மீசைய முறுக்கு' படத்துல அவங்க நடிப்பு பிடிச்சிருந்தது. கார் ஷோரூமில் வேலை செய்ற பொண்ணா நடிச்சிருக்காங்க. இவங்களுக்கும் உதயநிதிக்குமான போர்ஷன் ரொம்பவே அழகா வந்திருக்கு.’’

``முதல் படத்தில் அருள்நிதி, இப்போ உதயநிதி... அடுத்தடுத்து இப்படி இயக்குவோம்னு நினைச்சீங்களா?"

‘‘கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விஷயம் இது. என் அப்பா தீவிர தி.மு.க தொண்டர். ஒருமுறை சைதாப்பேட்டையில நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்துக்குக் கலைஞர் வந்திருந்தப்போ, அப்பா என்னைக் கலைஞர்கிட்ட கொடுத்து, பெயர் வைக்கச் சொன்னாராம். கலைஞர் வெச்ச பெயர்தான், மாறன். முதல் படத்தை அருள்நிதி சாருக்கும், ரெண்டாவது படத்தை உதயநிதி சாருக்கும் பண்றேன். இதையெல்லாம் நினைச்சுப்பார்த்தா, நம்மை மீறி ஏதோ ஒரு விஷயம் நம்மை இயக்குதுன்னு ஆச்சர்யமா இருக்கும்.’’

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!
நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

`` ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', ‘கண்ணை நம்பாதே'... தலைப்பு கண்ணை மையமா வெச்சே வைக்க என்ன காரணம்?’’

‘‘சென்டிமென்ட்லாம் இல்லை. ஆனா, ரெண்டு டைட்டிலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அந்தப் படத்துக்கு டைட்டில் தேடிக்கிட்டு இருந்தப்போ, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று'ங்கிற பாட்டைக் கேட்டேன். அப்போவே இதுதான் தலைப்புன்னு முடிவெடுத்தேன். இந்தக் கதைக்கு டைட்டில் யோசிக்கும்போது, ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' பாட்டு டி.வி-யில் ஓடிக்கிட்டிருந்தது. உடனே டைட்டில் முடிவு பண்ணிட்டேன்.’’

``டெக்னீஷியன்கள்..?’’

‘‘இசையமைப்பாளர் சித்து குமார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை' மூலமா எல்லோரையும் கவனிக்க வெச்சவர். இதுல ரெண்டு பாடல்கள் இருக்கு. பேக் கிரவுண்ட் ஸ்கோர்ல மிரட்டியிருக்கார். என் முதல் படத்தின் வெற்றிக்கு ஷான் லோகேஷ் கொடுத்த விறுவிறுப்பும் முக்கியக் காரணம். பிறகு, அவருக்கு ‘ராட்சசன்' நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அவரை ‘த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்'னு தான் சொல்லணும்.’’

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!
நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

``க்ரைம் த்ரில்லர்தான் உங்க ஏரியான்னு முடிவு பண்ணீட்டிங்களா?’’

‘‘க்ரைம் மேல தீராத காதல் இருக்கு. க்ரைம் நாவல்கள் நிறைய படிப்பேன். பரபரப்பும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டும் என் படத்துல இருக்கணும்னு நினைப்பேன். ‘முண்டாசுப்பட்டி', ‘மரகத நாணயம்' மாதிரி ஜாலியான படங்கள்லயே நிறைய திருப்புமுனைகளை வெச்சிருந்தாங்க இயக்குநர்கள். அதைத்தான் மக்களும் விரும்புறாங்க. அப்போ ஒரு த்ரில்லர் படத்துக்கு எவ்ளோ ட்விஸ்ட் தேவைப்படும்னு நினைச்சுப் பாருங்க. இந்தப் படத்துக்குத் திரைக்கதைதான் ஆன்மா. அதை எவ்வளவு நேர்த்தியா, சுவாரஸ்யமா சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லியிருக்கேன். படம் ஓடும்போது நீங்க மொபைலைப் பார்க்கமாட்டீங்க. அப்படி நீங்க பார்க்கலைன்னா அதுதான் என் வெற்றி. இப்போ நடந்துக்கிட்டு இருக்கிற முக்கியமான பிரச்னையைப் படத்துல பேசியிருக்கோம். க்ரைம் படமா ஆரம்பிச்சு, முடியும்போது இது சமூகத்துக்கான படமா மாறும்.’’

நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!
நமக்குப் பெரிய பொறுப்பிருக்குன்னு உதயநிதி சொன்னார்!

``உதயநிதி ஸ்பாட்ல எப்படி?’’

‘‘ரொம்ப ஜாலியான நபர். பெரிய அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்னு காட்டிக்கவே மாட்டார். எல்லோர்கிட்டேயும் ஒரே மாதிரி பழகுவார். அருள்நிதி சாரும் அப்படித்தான். அண்ணனும் தம்பியும் படத்துல லாஜிக் மிஸ்ஸாகிடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருப்பாங்க. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' மாதிரியே இதுலயும் மழையில நனையுற மாதிரி நிறைய சீன்கள் வரணும். ஆனா, அந்த நேரத்துல சென்னையில தண்ணீர்ப் பிரச்னை உச்சத்துல இருந்தது. ‘படம் பார்க்கும்போது தண்ணீர் இல்லாத நேரத்துல இந்த மாதிரி பண்றாங்களேன்னு மக்கள் நொந்துடக்கூடாது. நமக்குப் பெரிய பொறுப்பிருக்கு'ன்னு உதய் சார் சொன்னார். அவர்மேல ஒரு தனி மரியாதை வந்தது. லாக்டெளன் சமயத்துல பெரிய ஆதரவா இருந்தார். நைட் 10 மணிக்கு லாக்டெளன். 9.50 வரை நடிச்சுக்கொடுத்துட்டுதான் போவார். உதய் சார் மட்டுமல்ல, படத்துல வொர்க் பண்ணின எல்லா நடிகர்கள், டெக்னீஷியன்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் கோவிட் காலத்தைக் கடந்து வந்திருக்க முடியாது. உதய் சார் அவர் வேலைகளை சூப்பரா பிளான் பண்ணிப்பார். ஷூட்டிங் டைம்ல கட்சி வேலைகள் இருந்தால் முன்னாடியே சொல்லிடுவார். அதனால, ஷூட்டிங் டைமும் வீணாகாது. சினிமாவையும் அரசியலையும் அழகா பேலன்ஸ் பண்றார். அவரைப் பார்க்க ஸ்பாட்டுக்கு யார் வந்தாலும் அவங்களுக்கு நேரம் ஒதுக்கி தவிர்க்காமல் சந்திச்சிடுவார். எங்க பட டீம்லேயே நிறைய பேர் அவர்கிட்ட அவங்க பிரச்னைகளைச் சொல்வாங்க. பொறுமையா கேட்பார். சில விஷயங்களுக்கு இதை மனுவா கொடுங்கன்னு சொல்லி வாங்கிப்பார். ரொம்பவே யதார்த்தமான மனிதர்.’’

``அடுத்து என்ன?’’

‘‘ரெண்டு, மூணு ஹீரோக்கள்கிட்ட பேச்சு வார்த்தை போய்க்கிட்டிருக்கு. கூடிய விரைவில் உறுதியாகிடும். அந்தப் படத்தை முடிச்சுட்டு, நிச்சயமா அருள்நிதி சார்கூட ஒரு படம் பண்ணுவேன். அது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' இரண்டாம் பாகமா அல்லது ஃப்ரஷ் ஸ்கிரிப்ட்டான்னு இன்னும் முடிவு பண்ணலை.’’