Published:Updated:

"ஹாலிவுட் படங்களைத் தமிழ்ல பார்க்கிறோம். கன்னடப் படத்தைத் தமிழ்ல பார்த்தா என்ன தப்பு?" - மணிரத்னம்

மணிரத்னம்

"இதுக்கு முன்னாடி இங்கிருந்து 'சந்திரலேகா' என்று ஒரு படம் பண்ணினோம். (எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய படம்) அது வட நாட்டில் வெளியாகி, வெற்றிக்கொடியை நாட்டியது..." - மணிரத்னம்

Published:Updated:

"ஹாலிவுட் படங்களைத் தமிழ்ல பார்க்கிறோம். கன்னடப் படத்தைத் தமிழ்ல பார்த்தா என்ன தப்பு?" - மணிரத்னம்

"இதுக்கு முன்னாடி இங்கிருந்து 'சந்திரலேகா' என்று ஒரு படம் பண்ணினோம். (எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய படம்) அது வட நாட்டில் வெளியாகி, வெற்றிக்கொடியை நாட்டியது..." - மணிரத்னம்

மணிரத்னம்
`பாகுபலி', `கே.ஜி.எஃப்', `புஷ்பா', `ஆர்.ஆர்.ஆர்.' என மாற்று மொழிப்படங்களுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. புன்முறுவல் பூத்த முகமாக அவர் பேசியதிலிருந்து...

''மாற்று மொழிப் படங்களுக்கான வரவேற்பு என்பது புதுசா ஆரம்பிச்ச விஷயம் கிடையாது. முன்னாடி இருந்தே வந்ததுதான். இப்ப வரிசையா படங்கள் வர்றது மட்டுமில்லாமல், வட இந்தியாவிலும் வெளியாகி கவனம் பெற்றதால இப்போ இன்னும் அதிகமா பேசப்படுது. இதுக்கு முன்னாடி இங்கிருந்து 'சந்திரலேகா' என்று ஒரு படம் பண்ணினோம். (எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய படம்) அது வட நாட்டில் வெளியாகி, வெற்றிக்கொடியை நாட்டியது. அப்ப யாருக்கும் இந்தக் கேள்வி எழலை.

கே.ஜி.எஃப் 2
கே.ஜி.எஃப் 2

நிறைய பேர் படம் பார்க்கறது பாசிட்டிவ் எலிமென்ட். நல்ல வளர்ச்சி. இதை என்னாலும் நிறுத்த முடியாது. உங்களாலேயும் நிறுத்த முடியாது. ஹாலிவுட்ல இருந்து வர்ற படங்களைத் தமிழ்ல டப் பண்ணி பார்க்கறோம். கன்னடத்திலிருந்து வந்தா... பார்த்தா... என்ன தப்பு? So this will go on... This will definitely go on.

பெரிய படங்கள் பண்ணும் போது, செலவு பெருசா பண்றோம். நாங்க செலவு பண்றது எல்லாம் திரையில தெரியணும்ங்கறதுதான் இதோட குறிக்கோள். ஸோ, பிரமாண்ட செலவுகளைத் திரையிலேயும் கொண்டுவரணும்னுதான் எல்லாருமே கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். தமிழ்ல நல்ல படங்கள் எடுத்தால், அது வெளிமாநிலங்கள்லயும் வெற்றி பெறும். தமிழின் தரம் செழுமையானது. இங்க திறமைமிக்க இளைஞர்கள் புதுசு புதுசா நிறைய பேர் வந்திட்டு இருக்காங்க. புதுப்புது கதவுகளைத் திறக்குறாங்க. அதனால தமிழ் சினிமாவில் திறமைசாலிகள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நல்ல நல்ல இயக்குநர்கள் வந்துட்டு இருக்காங்க. அதைப் பார்த்து நான் பெருமைப்படுறேன்" என்றார் அவர்.