சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“காமெடிக்கு நாங்க கியாரன்டி!”

ஹன்சிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹன்சிகா

டிரெய்லர் வரும் வரை வெயிட் பண்ணுங்க. அதுல கதையை ரிவீல் பண்றோம்.

“ஒரு முதல் பட இயக்குநருக்கு தான் நினைச்ச மாதிரியே ஹீரோ, ஹீரோயின் அந்தக் கதைக்குத் தேவையான ஆர்ட்டிஸ்ட்டுகள் அமையறது ஒரு வரம். அப்படி ஒரு வரம் எனக்கு ஈஸியா அமைஞ்சிருக்கு. அதுக்குக் காரணம் தயாரிப்பாளர் மதன் சார்தான். அவர் இந்தப் படத்தைத் தயாரிக்க லைன்னாலும், அவராலதான் இப்படி ஒரு படம் சாத்தியமாச்சு. இதுல ஹீரோவா ‘மரகதநாணயம்’ ஆதி, ஹீரோயினா ஹன்சிகா நடிச்சிருக்காங்க. காமெடிக்கு யோகிபாபு தவிர இப்ப டிரெண்ட்ல உள்ள நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே படத்துல இருக்கு. ஸோ, காமெடிக்கு நாங்க கேரன்டி’’ - உற்சாகத்தில் துள்ளுகிறார் மனோஜ் தாமோதரன்.

“காமெடிக்கு நாங்க கியாரன்டி!”

``ஆதியின் பார்ட்னர்தான் ஹன்சிகாவா?’’

‘‘டிரெய்லர் வரும் வரை வெயிட் பண்ணுங்க. அதுல கதையை ரிவீல் பண்றோம். நம்ம ஊர்ப்பக்கம் பேச்சுவழக்கில், ‘என்ன பார்ட்னர், எப்படி இருக்கீங்க?’ என்று கேட்பாங்களே, அதுல வரும் `பார்ட்னர்’ இது. கதைக்குப் பொருத்தமானதா இருந்துச்சு. வச்சுட்டோம். ‘அஞ்சல’ படத்தின் இயக்குநர் தங்க சரவணன்கிட்ட ஒர்க் பண்ணினேன். அதன்பிறகு சற்குணம் சாரின் ‘சண்டிவீரன்’, தாஸ் ராமசாமியின் ‘டோரா’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். அந்த அனுபவங்களோடு ரெண்டு கதைகள் ரெடி பண்ணினேன்.

அதுல ஒண்ணுதான் இது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சில காரணங்களால அவர் இந்தப் படத்தைத் தயாரிக்க முடியாமப்போச்சு. ஆனாலும் அவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ‘ஆர்.எஃப்.சி. கிரியேஷன்ஸ்’கிட்ட சொல்லி அவங்கள எனக்கு அறிமுகம் செஞ்சுவச்சார்.

ஹீரோ ஆதி, ஹீரோயின் ஹன்சிகா, காமெடிக்கு யோகிபாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன். ரவிமரியா, ஜான்விஜய், ‘சிக்ஸர்’ ஹீரோயின் பலக் லால்வானி என இதில் வரும் அத்தனை கேரக்டர்களுமே, நான் கதையா எழுதும் போதே யோசிச்சு வச்ச ஆட்கள்தான். அவங்களே படத்திலும் அமைஞ்சது சந்தோஷமா இருக்கு. டெக்னீஷி யன்களும் அருமையான டீம். ‘அறம்’ கேமராமேன் ஓம்பிரகாஷின் சீடர் சபீர், இதுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். விளம்பரப் படங்கள் அதிகம் பண்ணியிருக்கறவர் அவர். நீண்ட நாள் நண்பர். படத்திற்கு இசை, சந்தோஷ் தயாநிதி. ‘குட்டிப் பட்டாசு’ பாடல் உட்பட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைச்சவர். ஆர்ட் டைரக்டர் சசி, ‘கோமாளி’ பிரதீப் இ.ராகவ்வின் எடிட்டிங் எல்லாமே படத்திற்கு பலம். முழுக்கவே சென்னையில் படப்பிடிப்பு நடத்தினோம். சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்பதால கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கு. போஸ்ட் புரொடக்‌ஷனோட அந்த வேலைகளும் போயிட்டிருக்கு.’’

“காமெடிக்கு நாங்க கியாரன்டி!”

``ஆதியும் ஹன்சிகாவும் என்ன சொல்றாங்க..?’’

‘‘ஆதி சார் தெலுங்கில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். ஸோ, ஹைதராபாத் போய் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். ஆர்வமா கதையைக் கேட்டார். அவரோட ரியாக்‌ஷனை கவனிச்சிட்டே கதையைச் சொன்னேன். அவரோட சிரிப்பு கான்பிடன்ட்டை அதிகப்படுத்திட்டே இருந்துச்சு. ஆதி சார் செம ஃப்ரெண்ட்லி. லிங்குசாமி சார் தெலுங்கில் இயக்கிவரும் படத்துல வில்லனாகவும் இப்ப கலக்குறார். ‘ஆக்‌ஷனா பிச்சு உதறிடலாம். ஆனா, காமெடி பண்றது கஷ்டம்தான்’னு கதை கேட்ட பிறகு சொன்னார். நம்ம பக்கத்து வீட்டுப் பையன் கேரக்டர்தான் பண்ணியிருக்கார். செட்ல அவரும் யோகிபாபுவும் இருந்தாலே செட் கலகலக்கும். ஒரு ஹீரோ நம்ம செட்ல இருக்கார்னு நமக்கு பயம் வராத மாதிரி, பத்து வருஷம் பழகின நண்பர் மாதிரி பழகுவார். பார்த்துக்குவார்.

மனோஜ் தாமோதரன்
மனோஜ் தாமோதரன்

அதைப் போல ஹன்சிகா மேம் கேரக்டரை இப்ப ரொம்ப சஸ்பென்ஸா வச்சிருக் கோம். இந்தப் படத்தோட லைன் கேட்டதுமே ‘நடிக்கறேன்’னு சொல்லிட்டாங்க. ரொம்ப நாளைக்குப் பிறகு ஹன்சிகாவைப் பார்க்கப் போறதால எல்லாருக்குமே அவங்கள பிடிக்கும். ‘ரோமியோ ஜூலியட்’ பார்க்கும் போதுதான் இதுல அவங்க அவ்ளோ சரியா இருக்கும்னு நினைக்க வச்சாங்க. அதைவிட இதுல டபுள் மடங்கு துறுதுறுப் பொண்ணு. காமெடியிலும் அசத்தியிருக்காங்க.

யோகிபாபு சாரும் செம ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு ஸாங் ஷூட்ல அவர் ஆதியுடன் ஆடற சீன் ஷூட் பண்ணினோம். ஒருநாள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனா, ராத்திரி தாண்டி மறுநாளும் ஷூட் நீடிக்க, யோகிபாபுகிட்ட ‘நாளைக்கும் ஷூட் போகுது, ரெண்டு மணி நேரமாவது கால்ஷீட் குடுத்தா பாடலை எடுத்து முடிச்சிடலாம்’னு சொன்னோம். தேவா சார் பாடின அந்தப் பாடல் அவருக்கு அவ்ளோ பிடிச்சதால, மறுநாள் ஸ்பாட்டுக்கு வந்தார். அன்னிக்கு முழுக்க எங்களோடவே இருந்து, அந்தப் பாட்டை முடிச்சுக் கொடுத்தார். அறிமுக இயக்குநரின் படம் நல்லா வரணும்னு இப்படி ஒவ்வொருத்தருமே உழைச்சது மறக்க முடியாத மொமன்ட்டா இருக்கு.’’

“காமெடிக்கு நாங்க கியாரன்டி!”

``சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்துல சயின்டிஸ்டா நடிச்சிருக்கறது யாரு..?’’

‘‘பிரதர், நீங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு நினைச்சுட்டீங்க போலிருக்கே... இதுல சயின்ஸ் போர்ஷன் ஒரு சின்ன எலிமன்ட்தான். அதாவது நம்ம சுந்தர்.சி சார் படம் மாதிரி கலகலப்பான ஒரு ட்ராவல்ல ஒரு சயின்ஸ் எலிமன்ட் வச்சிருக்கோம். அவ்ளோதான். சயன்டிஸ்ட் கேரக்டருக்கு கிரேசி மோகன் சாரை மைண்ட்ல வச்சிருந்தேன். ஆனா அவர் இல்ல. இப்ப பாண்டியராஜன் சார் விஞ்ஞானியா வர்றார். விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுற விஞ்ஞானியா, சீரியஸா விளையாடுற விஞ்ஞானியான்னு படம் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க. இதுல எல்லாருமே ஆச்சரியமா, ‘படத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. எப்படி ஹேண்டில் பண்ணுனீங்க?’ன்னு கேட்கறாங்க. எனக்கு அப்படி வித்தியாசம் எதுவும் தெரியல. ஏன்னா, சினிமாவுல ஒரு நல்ல கதை அதுவா தன்னை அமைச்சிருக்கும்னு சொல்வாங்க. அது உண்மைதான்னு இப்ப நம்புறேன்!”