Published:Updated:

Exclusive: மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்; கதை, முக்கிய கதாபாத்திரம் குறித்த அப்டேட்!

மாரி செல்வராஜ்

உதயநிதி ஸ்டாலினை வைத்து 'மாமன்னன்' படத்தை இயக்கிவரும் இயக்குநர் மாரிசெல்வராஜின் அடுத்த படத்தின் அப்டேட். கதை இதுதான்!

Exclusive: மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்; கதை, முக்கிய கதாபாத்திரம் குறித்த அப்டேட்!

உதயநிதி ஸ்டாலினை வைத்து 'மாமன்னன்' படத்தை இயக்கிவரும் இயக்குநர் மாரிசெல்வராஜின் அடுத்த படத்தின் அப்டேட். கதை இதுதான்!

Published:Updated:
மாரி செல்வராஜ்
`பரியேறும் பெருமாள்', `கர்ணன்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து `மாமன்னன்' எனும் படத்தை இயக்கிவருகிறார்.

வடிவேல், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் போன்றோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெறும் நகைச்சுவையான கதாபாத்திரமாக மட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் வடிவேலுவை இப்படத்தில் `தேவர் மகன்' வடிவேலுவைப் போல ஒரு குணச்சித்திர நடிகராக பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

'மாமன்னன்'  படப்பிடிப்பில் எடுக்கப்பட்டப் புகைப்படம்.
'மாமன்னன்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்டப் புகைப்படம்.

இதனிடையே இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்கு ரெடி ஆகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜின் சிறுவயதில் அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைத்தான் அடுத்த படமாக இயக்கவுள்ளார் என்கின்றனர். இதுவும் ஒரிஜினல்ஸ் ஆகவும் இருக்கலாம். மைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. புதுமுகமாகவும் இருக்கலாம் என்கின்றனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். மேலும், `டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ் ஸ்டார்' இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. ஓ.டி.டி-யில் படங்களை வெளியிட்டு வரும் `ஹாட் ஸ்டார்' நிறுவனம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டப் பிறகு ஓ.டி.டியிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.