Published:Updated:

``எனக்குள்ள இருக்கிற வருத்தம்தான் `ஹீரோ'வின் கதை; ஏன்னா..." - இயக்குநர் மித்ரன்

"சிவாவை குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி சக்திமானையும் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால, கதையின் கேரக்டர்ல சிவா, நூறு சதவிகிதம் பொருந்திப்போயிட்டார்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"கிட்டத்தட்ட 9 வருஷத்துக்கு முன்னாடி, ஒளிப்பதிவாளர் ஜார்ஜும் நானும் சேர்ந்து `சினம்'ங்குற ஷார்ட் ஃபிலிம் எடுத்தோம். பாபி சிம்ஹாதான் ஹீரோ. வில்லன் ரோலுக்குத்தான் சிவகார்த்திகேயனை கமிட் பண்ணியிருந்தோம். அந்தச் சமயத்துல படத்தோட டிரெய்லரை மட்டும்தான் ரிலீஸ் பண்ண முடிஞ்சது. அதுல வில்லனா நடிச்சிருந்த சிவாவை இந்தப் படத்துல சூப்பர் ஹீரோவா காட்டி, 'ஹீரோ'வை ரிலீஸ் பண்ணப்போறேன். இதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்?" என்று பாசிட்டிவிட்டியோடு பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் மித்ரன்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
'சூப்பர்ஹீரோனு ஒருத்தன் கிடையாதுனு சொல்லிருக்காங்க. ஆனா...!' சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டிரெய்லர்

"கேமராமேன் ஜார்ஜ், எடிட்டர் ரூபன், நான்னு மூணு பேருமே ஒண்ணாதான் சுத்திட்டுத் திரிஞ்சோம். கிட்டத்தட்ட பத்து வருஷ நட்பு. ஏதாவது படம் பண்ணணும்ங்கிறது அப்பவே கனவா இருந்தது. நிறைய கதைகள் டிஸ்கஸ் பண்ணுவோம். எங்களுடைய கனவுக்கு ஏத்த திறமை இருக்கா, இது சாத்தியமானு எதுவுமே தெரியாது. ஆனா, ஆசை மட்டும் இருந்தது.

ஹீரோ டீம்
ஹீரோ டீம்

அந்த ஆசைக்குள்ள திறமையும் இருக்குன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் நாளாச்சு. அந்தத் திறமைக்குக் கொஞ்சம் மதிப்பும் இருக்குனு அப்புறமா தெரியவந்தது. இது எல்லாமே சேர்ந்து அதுக்கான வாய்ப்பு கிடைக்கத்தான் கொஞ்சம் நாளாகிடுச்சு. எல்லாம் ஒவ்வொண்ணா சேர்ந்து இப்போ, `ஹீரோ'வுல வந்து நிக்குது. இது நடக்க, எங்களுக்கு 10 வருஷம் தேவைப்பட்டிருக்கு.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஹீரோ' படத்தோட கதையை எங்கிருந்து பிடிச்சீங்க?

Hero Movie
Hero Movie

"அடிப்படையில, எனக்குள்ள இருக்கிற வருத்தம்தான் இந்தப் படத்தோட கதையை எழுத வெச்சது. சின்ன வயசுல, எல்லோருமே சூப்பர் ஹீரோவாகி உலகத்தைக் காப்பாத்தணுங்கிறதை ஆசையா வெச்சிருப்போம். ஆனா, இப்படி எல்லாம் நினைச்சிக்கிற பசங்க, படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் சுயநலவாதியா மாறிப் போயிடுறாங்க. அவனை இந்த சிஸ்டம்தான் மாத்திடுது. `அடுத்தவனைப் பத்தின கவலை வேண்டாம்; நீதான் எல்லாம்'னு ஒருவித போட்டியாளர் மனப்பக்குவத்தை விதைக்க ஆரம்பிச்சிடுச்சு இந்த சிஸ்டம். ஒருத்தனுடைய திறமையைக் கண்டுபிடிச்சு, அதைப் பட்டை தீட்டுறதுதான் கல்வித் திட்டத்தோட வேலையா இருந்திருக்கணும். ஆனா, `நான் கேட்குற கேள்விக்கு சரியான பதில் எழுதத் தெரிஞ்சிருக்கணும்'னு மட்டும்தான் நடைமுறையில இப்போ இருக்கு. மதிப்பெண்ணை குறிக்கோளா வெச்சுதான் நம்முடைய கல்வி இருக்கு. கற்றல், வாழ்க்கையோட அங்கமா மாறணும். இந்தப் பிரச்னையெல்லாம் படமா பண்ணணும்னு நினைச்சேன், அதுதான் ஹீரோ."

கதையை முடிச்சிட்டுதான் சிவாவை பார்க்கப்போனீங்களா?

Sivakarthikeyan - Mithran
Sivakarthikeyan - Mithran

"அப்போ ரெடி பண்ணலை. ரெண்டு பேரும் ஒரு நாள் நேர்ல சந்திச்சோம்; நிறைய பேசினோம். அவரோட மனசுல ஒரு கதை இருந்தது. அது என்கிட்ட இருக்கிற கதையோட சிங்க் ஆச்சு. உட்கார்ந்து புதுசா ஒரு கான்செப்ட்டைப் பிடிச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். சிவாவை குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி, சக்திமானையும் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால, கதையின் கேரக்டர்ல சிவா, 100 சதவிகிதம் பொருந்திப் போயிட்டார்."

கல்யாணி மற்றும் இவானா கேரக்டர் பற்றி?

Hero Team
Hero Team

"ஏற்கெனவே தெலுங்கு, மலையாளப் படங்கள்ல அறிமுகமானவங்கதான் டைரக்டர் ப்ரியதர்ஷனுடைய பொண்ணு கல்யாணி. ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. வழக்கமான ஹீரோயின் ரோல் இல்லாம, முக்கியமான பாத்திரத்துல நடிச்சிருக்காங்க. இவானா ரோலுக்கு நிறைய பேரை ஆடிஷன் பண்ணிப்பார்த்தோம். இவானாவைப் பார்த்ததும், `இவங்க ஹீரோயின் மெட்டீரியலா இருக்காங்களே'ன்னு தோணுச்சு. ஆடிஷன் பண்ணதுக்குப் பிறகுதான் அவங்களுடைய அருமையான நடிப்பும் தெரிஞ்சது. உடனே கமிட் பண்ணிட்டேன்."

'இரும்புத்திரை'யைத் தொடர்ந்து அர்ஜூன்கூட 2-வது படம்?

அர்ஜூன்
அர்ஜூன்

`` 'இரும்புத்திரை'யிலே என்னை வில்லனா காட்டிட்ட, இதுல என்னடா பண்ணப்போற'னு அர்ஜூன் சார் கேட்டார். அந்தப் படத்துக்கு நேரெதிரான ஒரு பாசிடிவ் ரோல்ல சார் பண்ணியிருக்கார். அர்ஜூன் சாரோட கேரக்டர்ல இருந்துதான் `ஹீரோ' படத்தோட கதையே எனக்குள்ள தோணுச்சு. இவருடைய கேரக்டர்லருந்துதான் மத்த கேரக்டரை வடிவமைக்க ஆரம்பிச்சேன். அந்த அளவுக்கு முக்கியமான கேரக்டர்."

பொன் பார்த்திபன், சவரிமுத்து, ஆண்டனி பாக்யராஜ்னு உங்களுடைய அதே ரைட்டிங் டீம் இந்தப் படத்துலேயும் தொடர என்ன காரணம்?

ஆண்டனி பாக்யராஜ்
ஆண்டனி பாக்யராஜ்

``இந்த டீம் எனக்கு எப்போவுமே ஸ்பெஷல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எழுத்து வலிமை இருக்கு. கமர்ஷியல் மீட்டரை சரியா கதைக்குள்ள கொண்டுவரக்கூடியவர், பொன் பார்த்திபன். வாழ்க்கையில சந்திச்ச அனுபவங்களை, கதைக்குள்ள கொண்டு வர்ற திறமை சவரிகிட்ட இருக்கு. பாக்யராஜுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ். இவங்க எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம். ஒரு காட்சியை டெவலப் பண்றதுக்கு இவங்களுடைய இன்புட்ஸ் எனக்கு ரொம்பவே முக்கியம். ஏன்னா, ஒரு காட்சியை ரொம்ப சீரியஸா அணுகக்கூடிய ஆள் நான். அதனால, ஜனரஞ்சகமான முறையில அதை மாத்த எனக்கு இவங்க தேவைப்படுறாங்க. இதுல என்னுடைய விஷயங்களும் உள்ள போய் அது முழுமையான திரைக்கதையா மாறும்."

யுவன் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலோ?

யுவன்
யுவன்
``மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!" - பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி

``பட வேலையை முடிச்சிட்டு, 'பல வருஷத்துக்கு அப்புறம் திருப்தியான மனநிலையைக் கொடுத்த படம் இதுதான்'னு யுவன் சொன்னார். பேஸிக்கா நான் யுவனுடைய ரசிகன். அதானால, யுவன் சொன்ன இந்த வார்த்தைகள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. ரிலீஸான மூணு சிங்கிளும் ஹிட் அடிச்சிருக்கு. பிஜிஎம் ஸ்கோர் இன்னும் மாஸா இருக்கும். படம் பார்த்த பிறகு ஆடியன்ஸ் இதை ஃபீல் பண்ணுவாங்க."

'இரும்புத்திரை 2' சாத்தியமா?

விஷால்
விஷால்

``அதுக்கான கதை அமைஞ்சா கண்டிப்பா எடுப்பேன். அதுக்காக எந்தப் படமும் எடுக்க மாட்டேன்னு சொல்லலை. கதைதான் ரொம்ப முக்கியம். அதை நோக்கி பயணம் செய்ய வேண்டியதுதான். ஒருவேளை, `இரும்புத்திரை 2' எடுத்தா, கண்டிப்பா அதுல ஹீரோவா விஷால்தான் இருப்பார்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு