Published:Updated:

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

சிரஞ்சீவி சாரோட கேரக்டர் பெயர் பிரம்மா. கிரே கலர் ஹேர் ஸ்டைல், தாடியில புது லுக்ல இருக்கார். மெகா ஸ்டார் படம்னாலே ஹீரோயின்கள், பாடல்கள், டான்ஸ்னு அசத்துவார்.

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

சிரஞ்சீவி சாரோட கேரக்டர் பெயர் பிரம்மா. கிரே கலர் ஹேர் ஸ்டைல், தாடியில புது லுக்ல இருக்கார். மெகா ஸ்டார் படம்னாலே ஹீரோயின்கள், பாடல்கள், டான்ஸ்னு அசத்துவார்.

Published:Updated:
சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

தம்பி ஜெயம் ரவிக்கு வரிசையாக ஹிட்ஸ் கொடுத்த மோகன்ராஜா, தெலுங்கில் இப்போ செம பிஸி. சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா நடிப்பில் ‘காட்ஃபாதர்' படத்தை இயக்கியுள்ளார். 2001-ல் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமானவர், 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் அங்கு சென்றிருக்கிறார். தம்பி ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வ’னும் ‘காட்ஃபாத’ரும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாவதில் மகிழ்ந்திருக்கிறார் மோகன்ராஜா. ‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி அங்கே ‘ஹனுமன் ஜங்ஷன்' இயக்கினேன். மலையாளத்தில் வந்த ‘தென்காசிப்பட்டினம்' படத்தின் ரீமேக் அது. இப்ப தெலுங்கில், ‘லூசிபர்' படத்தை ரீமேக் பண்றேன். யதேச்சையா நிகழ்ந்த ஒற்றுமை இது. என் முதல் படத்தை இன்னமும் இங்குள்ளவங்க ஞாபகம் வச்சிருக்காங்க. ஆர்வமா வந்து பேசுறாங்க. வாழ்த்துறாங்க...'' திருப்தியாகப் புன்னகைக்கிறார் மோகன்ராஜா.

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

`` ‘வேலைக்காரன்' முடிச்சிட்டு, தமிழ்ல படம் பண்ணுவீங்கன்னு பார்த்தால் டோலிவுட் பறந்துட்டீங்களே?’’

‘‘நான் ‘வேலைக்காரன்' முடிச்சதும், ‘தனி ஒருவன் 2' இயக்கலாம்னு இறங்கினேன். ஸ்கிரிப்டும் தயாராகிடுச்சு. தம்பி ரவியும் ரெடியானார். அந்தச் சமயத்துலதான் ரவியை மணிரத்னம் சாரோட ‘பொன்னியின் செல்வன்'ல நடிக்கக் கேட்டாங்க. ரவி, ‘எங்க அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்'னு ரவி வந்து சொன்னதும், ‘எவ்வளவு பெரிய வாய்ப்பு. மணி சாரே உன்னைக் கூப்பிட்டிருக்கார். முதல்ல அவர் படம் பண்ணு'ன்னு சொன்னோம். அந்தப் படத்துக்காக நீளமான முடி வளர்க்கணும். அதனால, ‘தனி ஒருவன் 2' அப்புறமா பண்ணிக்கலாம்னு ஆனது. இடையே கொரோனா. இந்தக் காலகட்டத்துல ஏழு கதைகள் எழுதி முடிச்சிருக்கேன்.

ஒரு முக்கியமான ஒரு விஷயமும் நடந்துச்சு. இரண்டு படங்கள் அமைஞ்சது. ஒண்ணு, நாகார்ஜுனா சாரோட நூறாவது படத்தை இயக்கக் கேட்டு அழைப்பு வந்துச்சு. அவர் கிட்ட கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. நாகார்ஜுனாவும், அவர் மகன் அகில் அக்கினேனியும் முதல்முறையா சேர்ந்து நடிக்கற படம். இதற்கிடையே சிரஞ்சீவி சார், ‘லூசிபர்' படத்தை ரீமேக் பண்றதுக் காக சில இயக்குநர்களைப் பார்த்திருக்காங்க. அவங்க யாரும் செட் ஆகல. ‘தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கான ‘துருவா'வில் ராம்சரண் நடிச்சி ருந்தார். அதைத் தயாரிச்ச பிரசாத் சார்தான், ‘காட்ஃபாதர்' படத்தையும் தயாரிக்கறார். ராம்சரணும், பிரசாத் சாரும் சிரஞ்சீவி சார்கிட்ட என்னைப் பத்திச் சொல்லியிருக்காங்க. அவர் கூப்பிட்டதும் சந்தோஷமா இருந்துச்சு. இன்னொரு பக்கம் நான் நாகார்ஜுனா சார் படத்துக்கு கமிட் ஆன விஷயத்தைச் சொன்னேன். சிரஞ்சீவி சாரே நாகார்ஜுனா சார்கிட்ட பேசி, ‘காட்ஃபாதர் படத்தை முதல்ல பண்ணிக்கறோம். அடுத்து நீங்க ஆரம்பிச்சுக்குங்க'ன்னு சொன்னாங்க. இப்ப. ‘காட்ஃபாதர்' முடிச்சிட்டோம். இதோட ரிலீஸ் அன்னிக்கு நாகார்ஜுனா சார் பட அறிவிப்புக்குத் திட்டமிட்டிருக்கோம்.’’

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!
‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

``சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரான்னு ‘காட்ஃபாதர்' நட்சத்திரப் பட்டாளமே மிரட்டுதே... எப்படி இருக்கு அனுபவம்?’’

‘‘சந்தோஷமா இருக்கு. சிரஞ்சீவி சார், ‘இதை ஒரு அப்டேட்டட் இயக்குநர் பண்ணினா சிறப்பா இருக்கும்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்'னு சொன்னார். ‘லூசிபர்' பார்த்தவங்களுக்குக்கூட, இந்தப் படம் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். கதையோட ஜீவன் பாதிக்காதவாறு சில மாற்றங்களைச் செய்திருக்கோம்.

சிரஞ்சீவி சாரோட கேரக்டர் பெயர் பிரம்மா. கிரே கலர் ஹேர் ஸ்டைல், தாடியில புது லுக்ல இருக்கார். மெகா ஸ்டார் படம்னாலே ஹீரோயின்கள், பாடல்கள், டான்ஸ்னு அசத்துவார். இதுல பாடல்கள் கிடையாது. முதல்முறையா ஹீரோயின் இல்லாமல் நடிக்கறார். இந்தக் கதாபாத்திரம் ஜெயிக்கணும் என்பதுல அவ்ளோ ஆர்வம் காட்டி பிரம்மாவாகவே வாழ்ந்திருக்கார். லூசிபரோட அழகே அதுல கடந்த காலமும் எதிர்காலமும் மறைக்கப்பட்டிருக்கும். ஒரு ஸ்டாரோட இமேஜையும் மனசுல வச்சு எழுதப்பட்ட கதை அது. அதுல சிரஞ்சீவி சாருக்கு சமமா இன்னொரு டாப் ஹீரோவும் நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. சல்மான்கான் சாரும், ராம்சரண் சாரும் நண்பர்கள்னு தெரிஞ்சது. ஸோ, சிரஞ்சீவி சார்கிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!
‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

சல்மான்சார்கிட்ட சிரஞ்சீவி சார் பேசின கணமே, ‘எப்போ ஷூட், எங்கே ஷூட்’னு மட்டும் கேட்டுவிட்டு வந்தார். அவர் இதுல மசூத்பாய் கேரக்டர்ல நடிச்சிருக்கார். சல்மான் சாரும் சிரஞ்சீவி சாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காங்க. ஆத்மார்த்தமான நண்பர்களா இருக்காங்க. சல்மான் சார் என்னை ஸ்பாட்டுல ‘சார்'னு கூப்பிட்டார். ‘அப்படிச் சொல்லாதீங்க... ராஜான்னு சொல்லுங்க சார்'னேன். ‘ராஜாவா... அது இன்னும் மரியாதையா இருக்கே ராஜா'ன்னு அன்பைக் கொட்ட ஆரம்பிச்சிட்டார். சந்தோஷமா இருக்கு.

மஞ்சு வாரியர் கதாபாத்திரத்துக்கு ஒரு பெரிய ஸ்டார் நடிச்சா சரியா இருக்கும்னு நினைச்சதும், எனக்கு மனசுல தெரிஞ்ச பெரிய ஸ்டார் நயன்தாராதான். அவங்க கதாபாத்திரத்துலயும் முக்கியமான மாற்றங்கள் செய்திருக்கேன். ‘வேலைக்காரன்' படத்துல அவங்களுக்கான ஸ்கோப் கொஞ்சம் குறைவு என்பதுல அவங்களுக்கு என்மீது வருத்தம். ஆனாலும் நான் ‘காட்ஃபாதர்' படத்துக்குக் கூப்பிட்டதும் உடனே நடிக்க சம்மதிச்சாங்க. ஸ்பாட்ல இந்தக் கதையைத் தாண்டியும் கொஞ்சம் பேசிப்போம். நயன்தாராவுக்கு சவாலான கதாபாத்திரங்கள், நல்ல ரோல்கள் அதிகம் பண்ண வேண்டும் என நிறைய கனவுகள் இருக்கு.''

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!
‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

``ரீமேக்கை நீங்க விட நினைச்சாலும் அது உங்களை விடாது போலிருக்கே?’’

‘‘ரீமேக்கை ஒருபோதும் நான் தப்பாகவோ, குறைச்சலாவோ நினைச்சதில்லை. ‘நாம சந்தோஷப்படணும்னு படம் இயக்குறது ஒரு வகை. இன்னொரு வகை, தியேட்டருக்கு வர்ற மக்கள் சந்தோஷமா இருக்க வைக்கணும்னு படம் இயக்குறது. அதுதான் முதன்மையானது'ன்னு என் குருவான அப்பாவால் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கேன். நமக்குப் பெயர் வர்றது ரெண்டாவது பட்சம்தான். ரீமேக்கோ, ஒரிஜனலோ, எது மக்களை சந்தோஷப்படுத்துமோ அதைப் பண்றேன். அதே சமயம், எனக்கான பார்வைகளை வெளிக்காட்டும் படங்களா ‘தனி ஒருவன்', ‘வேலைக்காரன்' படங்களைக் கருதுறேன். நான் ரீமேக் பண்ற எல்லாமே குடும்பத்தோடு பார்த்து ரசிக்கற படங்களாகத்தான் இருக்கும். ஏழு படம் ரீமேக் பண்ணியிருக்கேன்னா, 70 படங்களைத் தவிர்த்திருப்பேன்.''

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!
‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

`` ‘பொன்னியின் செல்வன்' குறித்து தம்பி ஜெயம் ரவி உங்ககிட்ட நிறைய பேசியிருப்பாரே?’’

‘‘ `நிறைய இருக்கு. அவ்வளவு உயரமான ஒரு கேரக்டர் ரவிக்கு அமைஞ்சதுல எங்க குடும்பத்துக்கே சந்தோஷம்தான். தஞ்சைப் பெரிய கோயில்ல படப்பிடிப்பு நடந்தப்ப ரவி, அருண்மொழி வர்மனாக ஒரு டயலாக் பேசும்போது ரொம்பவே நெகிழ்ந்துட்டான். ‘எவ்வளவு பெரிய வார்த்தைகளை நாம பேசியிருக்கோம்'னு அவனுக்கு சந்தோஷத்துல கண்ணு கலங்கிடுச்சு. அந்தத் தருணமே, எனக்கு போன் பண்ணினான். அந்த டயலாக்கை அவன் பேசிக்காட்டினதுல நானும் அழுதுட்டேன். ‘இதைவிட என்ன சாதிச்சிட முடியும்'னு ரெண்டு பேருக்குமே தோணுச்சு. நான் என் படத்துக்காக ஹைதராபாத் பறக்கும்போதெல்லாம் பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபுனு யாரையாவது சந்திப்பேன். எல்லாருமே ‘உங்க தம்பி அசத்துறார். அந்த கெட்டப் அவருக்கு அத்தனை கம்பீரமா பொருந்துது'ன்னு சொல்லியிருக்காங்க. கார்த்தி கூட, ‘ரவி நடிச்சா மட்டும் உடனே மணி சார் ஓகே சொல்லிடுறார்'னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ஒருமுறை ஹைதராபாத்ல பக்கத்து பக்கத்து செட்ல எங்களோட பட ஷூட்கள் போச்சு. இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் படத்துல தம்பி நடிக்கறார். அதோட பக்கத்து ஃப்ளோர்ல இந்தியாவின் தலைசிறந்த நடிகரோட படத்தை அண்ணன் இயக்குறார். இந்தத் தருணங்களை நானும் தம்பியுமே அப்பாகிட்ட சொல்ல, அப்பாவுக்கும் அவ்ளோ சந்தோஷம்.''

‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!
‘காட்ஃபாதர்’ சிரஞ்சீவி... கனவுகளுடன் நயன்தாரா!

``சமீபத்துலகூட நீங்களும் விஜய்யும் இணையறதா பேச்சு வந்ததே..?’’

‘‘விஜய் சார் படம் தள்ளிப்போனதுக்கு நான்தான் காரணம். இடையே அவர் படம் பண்றதுக்கான சூழல் அமைஞ்சது. அப்ப கைவசம் முழுக்கதையும் ரெடியாகல. கொரோனா சமயத்துல ஏழு கதைகள் ரெடி பண்ணினேன் அல்லவா, அதில் விஜய் சாருக்கும் ஒரு கதை பண்ணியிருக்கேன். முழுக்கதையும் ரெடியாகி, எனக்கும் நம்பிக்கை வந்த பிறகு அவர்கிட்ட கதையைச் சொல்வேன். நாங்க படம் பண்ணுவது உறுதியா நடக்கும்.''