Published:Updated:

'தர்பார்' ஜானர், ரஜினி 'அப்ரோச்', அஜித் 'காம்போ'... - முருகதாஸ் ஸ்பெஷல் ஷேரிங்ஸ்

பேசுற வசனங்களில் யார் மனசும் புண்பட்டுடக்கூடாதுன்றதுல ரஜினி சார் ரொம்ப கவனமா இருப்பார்

தர்பார்
தர்பார்

'தர்பார்' ஷூட்டிங் ஆரம்பித்த நாளில் இருந்தே சோஷியல் மீடியா தொடங்கி எல்லாப் பக்கமும் ''தலைவர் பட அப்டேட் சொல்லுங்க... அப்டேட் சொல்லுங்க'' எனப் பரபரக்கிறார்கள் ரசிகர்கள். இரவு, பகல் என இடைவெளியில்லாமல் எடிட்டிங்கில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசினேன். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2IZk42R

'' 'காலா', 'பேட்ட.' இவை இரண்டும் அரசியலுக்கு வர்றேன்னு அறிவிச்ச பிறகு ரஜினி நடிச்ச படங்கள். ஒன்று அரசியல் படம். மற்றொன்று கமர்ஷியல்... 'தர்பார்' எப்படி இருக்கும்?''

'' 'தர்பார்' விறுவிறுப்பான மாஸ் கமர்ஷியல் படம். தெளிவாச் சொல்லிடுறேன். இது அரசியல் படம் இல்லை. 'அலெக்ஸ் பாண்டியன்' மாதிரி அதிரடியான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம்.''

தர்பார்
தர்பார்

''விஜயகாந்த், சிரஞ்சீவி, விஜய், ரஜினி... நீங்கள் இயக்கிய, தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் எனக் கிட்டத்தட்ட எல்லோருமே அரசியல் தொடர்போடு இருக்காங்க. இந்த நடிகர்களுக்காக உங்கள் காட்சிகள், வசனங்களில் எதுவும் மாற்றம் செய்வீங்களா? அல்லது, அவர்கள் எதுவும் கேட்பார்களா?''

''எந்த நடிகரையும் புகழ்பாடணும்னு நான் வசனம் எழுதவே மாட்டேன். அப்படி எழுதுங்கன்னு யாரும் என்கிட்ட கேட்டதும் இல்லை. பேசுற வசனங்களில் யார் மனசும் புண்பட்டுடக்கூடாதுன்றதுல ரஜினி சார் ரொம்ப கவனமா இருப்பார். 'இப்படிப் பேசுனா அவங்களைப் புண்படுத்துற மாதிரி வருமா'ன்னு கேட்டுக்கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டே இருப்பார்.''

''அஜித் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் கேள்வி. முதல் படத்துக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையலையே?''

'' 'தீனா'வுக்குப் பிறகு அஜித் சாரோட இணையுற வாய்ப்பு ரெண்டு முறை தட்டிப்போயிடுச்சு. என் வளர்ச்சியில எப்போதுமே சந்தோஷப்படுற முதல் மனிதர் அஜித் சார். எப்ப வேணாலும் நாங்க இணைவோம்.''

''ஏ.ஆர்.முருகதாஸ் என்கிற இயக்குநரை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க? உங்கள்மீதான தனிப்பட்ட விமர்சனங்களை எப்படி எடுத்துப்பீங்க?''

ரஜினி
ரஜினி

''உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவன். வெறும் கமர்ஷியல் இயக்குநர் என்கிற பார்வையை விரைவில் மாற்றக்கூடியவன். என் மீதான விமர்சனங்களைப் பொறுத்தவரையில்... பேசுறதுக்கு அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. செய்றதுக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு.''

> எப்படி உருவானது ரஜினியுடன் தர்பார்? | படத்தின் ஒன்லைன் சொல்லுங்களேன்? | நயன்தாரா பர்ஃபாமென்ஸ் எப்படி வந்திருக்கு? | வில்லன் கேரக்டரில் ஸ்பெஷல் என்ன? | மியூஸிக், டெக்னிக்கல் டீம் எப்படி? அடுத்த படமும் ரஜினியை வைத்தா? | தனிப்பட்ட முறையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி உங்க கருத்து என்ன? | தற்போதைய இந்திய, தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்குறீங்க? | சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்... இந்தப் பயணம் எப்படி இருக்கு? | நேரடி அரசியலுக்கு வரணும்கிற எண்ணம் இருக்கா?

- இந்தக் கேள்விகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பதில்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை" - மனம் திறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-interview-with-a-r-murugadoss-about-darbar

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |