Published:Updated:

"என் மகளிடம் நான் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்வேன்" - மிஷ்கின் நெகிழ்ச்சி!

மிஷ்கின்

"இன்டர்வெல் பார்த்துட்டு விழுந்து விழுந்து அழுதுருக்கணும். இரண்டு கண்ணீர் துளியோடு அமர்ந்திருந்தேன். இந்த இரவு முழுதும் என் வாழ்நாளை காட்டிய படமாக இதை நான் பார்க்கிறேன்" - மிஷ்கின்

"என் மகளிடம் நான் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்வேன்" - மிஷ்கின் நெகிழ்ச்சி!

"இன்டர்வெல் பார்த்துட்டு விழுந்து விழுந்து அழுதுருக்கணும். இரண்டு கண்ணீர் துளியோடு அமர்ந்திருந்தேன். இந்த இரவு முழுதும் என் வாழ்நாளை காட்டிய படமாக இதை நான் பார்க்கிறேன்" - மிஷ்கின்

Published:Updated:
மிஷ்கின்

கடைசி விவசாயி படம் பார்த்த பிறகு மிஷ்கின் வெளியிட்டுள்ள காணொலியில் 'நூற்றாண்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம் இது' எனப் பாராட்டியுள்ளார். கடைசி விவசாயி படம் இயக்குனர் மணிகண்டனால் எடுக்கப்பட்டு பிப் 11 திரையரங்குகளில் வெளியானது. விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரித்ததோடு அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

"இன்டெர்வெல் பார்த்துட்டு விழுந்து விழுந்து அழுதுருக்கணும். இரண்டு கண்ணீர் துளியோடு அமர்ந்திருந்தேன். இந்த இரவு முழுதும் என் வாழ்நாளை காட்டிய படமாக இதை நான் பார்க்கிறேன். என் தாயும் தந்தையரும் 20 சென்ட் நிலம் கூட இல்லாத குடும்பத்தில் பிறந்தவன். இந்த படம் எனக்கு அவ்வளவு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. என்னுடைய தந்தை விவசாயியாக இல்லை என வருத்தப்படுகிறேன். இந்தப் படத்தை என் மகளைப் பார்க்கச் சொல்லுவேன். கனடாவில் இருக்கும் என் மகளுக்கு என்ன சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை. கனடாவில் இருப்பது பற்றி மீண்டும் யோசி என என் மகளிடம் சொல்வேன். ரொம்ப எளிமையான படம். வலிமையான படம். உங்க குழந்தைகளைக் கூட்டிச் சென்று இந்த படத்தைக் காண்பியுங்கள்" எனக் கோரிக்கை வைக்கிறார் மிஷ்கின்.

கடைசி விவசாயி படப்பிடிப்பில் இயக்குநர் மணிகண்டன்
கடைசி விவசாயி படப்பிடிப்பில் இயக்குநர் மணிகண்டன்

மேலும், "ஆன்மாவைச் சுத்தப்படுத்த எடுக்கப்பட்ட படம். நூற்றாண்டின் மிகச் சிறந்த படம். பராசக்தி, சிறை, தங்கப்பதக்கம், சேது, அன்பே வா,உதிரிப்பூக்கள், ஸ்ரீதர், பாலுமஹிந்தரா, ராம், வெற்றிமாறன் படங்கள் எனக்கு பிடிக்கும். நானும் 10 க்கும் மேற்பட்ட படங்கள் எடுத்திருப்பேன், எல்லோரையும் விட சிறந்த படம் இது. இந்தப் படம் தான் வாழ்க்கையின் முக்கியமான படம். தியேட்டரில் அலையலையாக சென்று இந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும். கடைசி விவசாயி அன்பான படம், நுட்பமான படம், சிறந்த படம். இந்தப் படத்தைக் கொண்டாடவில்லையென்றால் இந்த படத்தின் இயக்குனரின் மணிகண்டனைக் கொண்டாடவில்லையென்றால் நம்முடைய ஸ்பிர்சுவல் தன்மையிலிருந்து விலகி விட்டோம் என்று பொருள். மணிகண்டனுக்கு நிச்சயம் ஒரு விழா எடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார், மிஷ்கின். இயக்குனர் மணிகண்டன் இதற்கு முன்பு காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.