Published:Updated:

"விஷாலோட `துப்பறிவாளன் 2' பார்க்க ஆர்வமா இருக்கேன்; `பிசாசு 2' பயங்கரமா பயமுறுத்தும்!"- மிஷ்கின்

மிஷ்கின்

"'எனக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டியது இருக்கு. அதை கொடுங்க. தம்பியை அனுப்பி வைக்குறேன்னு'னேன். படத்தை நிறுத்த இப்படிச் சொல்றேன்னு தப்பா நினைச்சிட்டாங்க." - மிஷ்கின் ஓப்பன் டாக்

"விஷாலோட `துப்பறிவாளன் 2' பார்க்க ஆர்வமா இருக்கேன்; `பிசாசு 2' பயங்கரமா பயமுறுத்தும்!"- மிஷ்கின்

"'எனக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டியது இருக்கு. அதை கொடுங்க. தம்பியை அனுப்பி வைக்குறேன்னு'னேன். படத்தை நிறுத்த இப்படிச் சொல்றேன்னு தப்பா நினைச்சிட்டாங்க." - மிஷ்கின் ஓப்பன் டாக்

Published:Updated:
மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கினுடனான கருத்து வேறுபாடுக்குப் பிறகு விஷால், தானே இயக்கவிருக்கும் 'துப்பறிவாளன் 2' படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார். மிஷ்கின் 'பிசாசு 2' படத்தின் பணிகளில் மூழ்கியிருக்கிறார். விஷாலுடனான பிரச்னை, 'துப்பறிவாளன் 2', 'பிசாசு 2' என அவரிடம் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள். எல்லாவற்றுக்கும் வெளிப்படையான பதில்களைத் தனக்கே உரிய பாணியில் கொடுத்தார்.

'பிசாசு 2' கதை எங்கிருந்து தொடங்கியது?

பிசாசு 2
பிசாசு 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'''பிசாசு 5' வரைக்கும் பண்ணலாம்னு ஐடியா முன்னாடி இருந்தது. ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் கூட பண்ணலாம்னு முடிவு பண்ணி அதுக்காக ஹீரோ தேடிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் பட்ஜெட் பிரச்னையும் இருந்தது. அப்போ முருகானந்தம் சார், 'பிசாசு 2' பண்ணலாமானு' கேட்டார். எனக்கும் சரின்னு பட்டுச்சு. ஆனா, என்கிட்ட அப்போ கதை இல்லை. ஒரு நாள் டைம் கேட்டேன். ஐடியாவா ஒண்ணு தோணுச்சு. பத்து நாள் இதே ஐடியாவோட டிராவல் பண்ணேன். 'பிசாசு' மாதிரி இருக்கக் கூடாதுனு நினைச்சேன். 'பிசாசு 2 ங்குறது வியாபாரத்துக்காக வெச்ச பேர். ரெண்டு கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கிடைச்ச ஐடியாவுல இருந்து கதை பண்ண ஆரம்பிச்சேன். அழகான கதை கிடைச்சது. பிசாசு தன்மை, அன்பு, பாசம், பயம், புதிய உலகத்துக்கு போன திருப்தி எல்லாம் 'பிசாசு 2' ல எதிர்பார்க்கலாம்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படத்துக்கு வேற ஏதாவது டைட்டில் யோசிச்சீங்களா?

''பெண், தாய், குழந்தை, பேய் - இப்படி நிறைய யோசிச்சு இருக்கலாம். தலைப்பை வெச்சு மட்டும் படம் இல்லனு நம்புறேன். 'புவனா ஒரு கேள்விக்குறி' மாதிரியான ஒரு டைட்டில் மாதிரி ஒண்ணு இது வரைக்கும் பார்க்கல. 'சிறை' நல்ல டைட்டில். எல்லா டைட்டிலும் படத்தோட கதையை அழகாகச் சொல்லாது. கேக்ல இருக்குற க்ரீம் மாதிரிதான் டைட்டிலை பார்க்குறேன். 'சித்திரம் பேசுதடி' டைட்டில் அர்த்தம் பொய் பேசுதுனு வெச்சேன். ஆனா, பார்க்குறவங்க சித்திரத்தை படம்னு எடுத்துக்கிட்டாங்க. சில நேரங்களில் சில தலைப்புகள் ரொம்ப அற்புதமா பொருந்திப்போகும். பல நேரங்களில் ஒரு அறிமுகத்துக்காக மட்டுமே இருக்கும். மணிரத்னம் சார் படங்களுடைய டைட்டில் எப்போதும் ரொம்ப அழகாக இருக்கும்."

பிசாசு 2
பிசாசு 2

'பிசாசு 2' எந்த அளவுக்கு ஒரு பேய் படமா இருக்கும்?

''படத்துல பேய் இருக்கு. பயங்கரமா பயப்படப் போறாங்க. இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலேயே பயங்கர பயமா இதுதான் இருக்கும். அதேசமயம், இன்னொரு லேயர்ல பயத்துக்கு எதிரான அரவணைப்பு, பாதுகாப்பு, கருணை, தியாகம்னு நிறைய உன்னதமான விஷயங்கள் படத்துல இருக்கும். ஆனா, நிச்சயமா ஆடியன்ஸ் பயப்படப் போறாங்க. பேய் இருக்கா தெரியாது. ஆனா, எல்லோர்குள்ளயும் ஒரு பேய்த் தன்மை இருக்கும். அது அப்பப்ப வெளியே வரும். என்கிட்ட இருந்தும் அந்தத் தன்மை அப்பப்ப வெளியே வரும்."

விஷால்கிட்ட இந்தப் பேய் தன்மையை பார்த்து இருக்கீங்களா?

"நிறைய பேர்கிட்ட நான் பழகியிருக்கிறேன். எட்டு வருஷம் படம் பண்ண நினைச்சிட்டு இருந்து 'துப்பறிவாளன்' பண்ணோம். எந்த ஒரு நடிகரும் என்னை இந்தளவுக்கு என்னை நேசித்து இருப்பாங்களானு தெரியல. விஷால் என்கிட்ட அன்பா, பாசமா, நேசமா பழகுனதுலாம் உண்மை. என்னை அப்பானு கூப்பிடுவான். மகனேனு நான் அழைப்பேன். எப்பவும் பேசிக்கிட்டு இருப்போம். நண்பனுக்கும் மேல! சில விஷயங்கள் எங்கள் நட்பைப் பிரிச்சிருச்சு. நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் கோபப்பட்டுட்டோம். தன்னுடைய நியாயத்தை இன்னொருத்தவர் நியாயத்துக்குள்ள புகுத்த முயற்சி செஞ்சு தோத்து போறதுதான் போர். இப்படித்தான் நாங்க ரெண்டு பேரும் தோற்றுப் போயிட்டோம். அவ்வளவுதான். இப்போ பார்த்தாக்கூட கட்டி அணைச்சு முத்தம்தான் கொடுப்பேன். அவனும் அதுதான் செய்வான்னு நினைக்குறேன். மேடையில அவனைத் திட்டி பேசி முடிச்சிட்டு கீழே இறங்குனப்போ எனக்கு அவன் மேல அன்புதான் இருந்துச்சு. இப்போவும் அதே அன்புதான் இருக்கு. இதுக்காக நாங்க ரெண்டு பேரும் சேரப் போறோம். அதனாலதான் இப்படிப் பேசுறேன்னு ஒரு குரூப் சொல்லும். ஆனா, கிடையாது. நாங்க ரெண்டு பேருமே ரோஷக்காரங்க.

மிஷ்கின் - விஷால்
மிஷ்கின் - விஷால்

என் தம்பி இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கான். ஆதித்யாவை வெச்சு நிறைய காட்சி ஷூட் பண்ணியாச்சு. இப்போ என் தம்பியை நடிக்கக் கூப்பிட்டாங்க. 'எனக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டியது இருக்கு. அதை கொடுங்க. தம்பியை அனுப்பி வைக்குறேன்னு'னேன். படத்தை நிறுத்த இப்படிச் சொல்றேன்னு தப்பா நினைச்சிட்டாங்க. தம்பி ஆதித்யாகிட்ட, 'டேய், காசெல்லாம் இல்லனாலும் பரவாயில்ல. நீ போயிட்டு நடிச்சு கொடு. நடிகான அது உன்னோட கடமை'னு சொன்னேன். ஏன்னா, விஷால் இந்தப் படத்தை எடுக்கணும். மிகப்பெரிய வெற்றி படமா ஆகணும். அதை அண்ணாந்து பார்க்கணும்னு ஆசைப்படுறேன். என்னோட ஸ்க்ரிப்ட்டை படமா எடுக்குறது கஷ்டம். இதனால, நீ அங்கே போயிட்டு விஷாலுக்கு அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணு. ஏதாவது சந்தேகம் வந்துச்சுனா ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வீடியோ கால் பண்ணு, டவுட் க்ளியர் பண்றேன்னு தம்பிகிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, வெளியே இருந்து பார்க்குறவங்க தப்பா நினைச்சிட்டு இருக்காங்க. என் தம்பியை வெச்சு பிளாக்மெயில் பண்றேன்னு விஷால் நினைச்சுட்டு இருக்கலாம். நான் சினிமாவை ரொம்ப நேசிக்கிறேன். படம் எடுத்துக்கிட்டே இருக்குறப்போ சாக ஆசைப்படுறவன் நான். இன்னொரு சினிமாக்காரன் படம் எடுக்கக் கூடாதுனு நினைக்க மாட்டேன். அதுவும் ஆருயிர் நண்பன் விஷால் படம் ஓடக் கூடாதுனு நினைக்க மாட்டேன். இதுதான் உண்மை."

சமீபத்தில் ரிலீஸான 'துப்பறிவாளன் 2' போஸ்டர் பார்த்தீங்களா?

''பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அறுபது அடிக்கு நாப்பது அடி மேப் பண்ண சொல்லியிருந்தேன். அதை அப்படியே செஞ்சிருந்தாங்க. அந்த சீன் படத்துல ரொம்ப நல்லாயிருக்கும். ஒரு இயக்குநரா நினைச்ச மாதிரி பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல விஷால் செம ஸ்டைல்லா இருந்தான். பிரசன்னா இன்னும் சூப்பரா இருப்பான். பாதி படம் பண்ணி கொடுத்துட்டேன். இன்னும் மீதிப்படம் என்ன பண்ணப் போறானு சுவாரஸ்யமா பார்த்துட்டு இருக்கேன்."

துப்பறிவாளன் 2 போஸ்டர்
துப்பறிவாளன் 2 போஸ்டர்

'பிசாசு 2' மேக்கிங் வீடியோல கார்த்திக் ராஜா இல்லனு சொல்றது பத்தி?

''ஒரு வீடியோல நிறைய லேயர்ஸ் இருக்கு. ஒரு இசையமைப்பாளர் இருக்குறப்போ டைரக்டர் என்ன வேணாலும் கேட்கலாம். சொல்லலாம். ஏன்னா, ஒரு காட்சியை ஷூட் பண்ணி படத்துல வெக்கப் போறது டைரக்டர்தான். இயக்குநருக்கு எல்லா உரிமையும் இருக்கு. இதெல்லாம் போக, கோவிட் நேரத்துல எடுத்ததால அப்பா இளையராஜாவுக்கு கோவிட் வந்துற கூடாதுனு வெளியே எங்கேயும் வராம இருந்தான். கார்த்திக் ராஜா வராதனால ஷூட் பண்ண வேண்டிய நிர்பந்தம். என்னால என்ன பண்ண முடியும். இளையராஜா கிட்ட நாற்பது வருஷமா இருந்த பிரபாகரன், மேக்கிங் வீடியோ எடுத்தப்போ இருந்தார். எனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சிக்கிட்டு சொல்லிக் கொடுத்தார். இப்போ, இசை படிச்சிட்டு இருக்கேன். அடுத்த என் படத்துக்கு இசையமைப்பாளரா வொர்க் பண்ணலாம்னு ஐடியா இருக்கு."

இளையராஜா, கார்த்திக் ராஜா தவிர யுவன் ஷங்கர் ராஜா கூட சேர்ந்து பயணிக்கும் ஐடியா இல்லையா?

''எனக்கு பெருசா விருப்பம் இல்ல. ரொம்ப திறமையான மனுஷன். ஆனா, என்னோட வேவ் லெந்துக்கு செட்டாகுது. யுவனுடன் சேர்ந்து ராம் தொடர்ந்து வேலை செய்யுறான். நல்ல பாடல்கள் எல்லாம் கொடுக்கிறாங்க. ரொம்ப மாடர்னான கம்போஸர். இருந்தாலும், இளையராஜா கார்த்திக் ராஜா போதும்னு நினைக்கிறேன். க்ளாசிக் இசை எனக்கு போதும். இசையை நான் பார்க்கும் பார்வையும் யுவன் பார்க்கும் பார்வையும் வேறன்னு தோணுது. ஏ.ஆர்.ரஹ்மான் கூட சேர்ந்து வேலை பார்க்க ஆசைப்படுறேன். எதிர்காலத்தில் நடக்கலாம்."

மிஷ்கின்
மிஷ்கின்

விஜய் சேதுபதிக்கு எந்த மாதிரியான கேரக்டர் படத்தில் கொடுத்து இருக்கீங்க?

"கேரக்டர் பத்தி பெருசா இப்ப பேச முடியாது. டாக்டர்.ஜான் எனும் கேரக்டரில் நடிச்சிருக்கார். அவ்வளவுதான்!"

ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, `அரசியல்வாதி' உதயநிதி, சிலம்பரசனுடனான படம் என இன்னும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இந்த வீடியோவில் காணலாம்...