Published:Updated:

``என்னை `கொலைகாரப் பாவி'ன்னார் இளையராஜா!" - மிஷ்கின் ஷேரிங்ஸ்

அவருடைய இசையைக் கேட்டு, இவ்வளவு நாளா இளையராஜாவைப் புரிஞ்சுக்காமலேயே அவருடைய இசையைக் கேட்டுட்டோமோன்னு சந்தேகமே வந்திடுச்சு

mysskin
mysskin

'துப்பறிவாளன்' படத்திற்குப் பிறகு, 'சைக்கோ', 'துப்பறிவாளன் 2' என்று பிஸியாக இருக்கும் மிஷ்கினைச் சந்தித்தோம்.

"ரொம்ப வருஷமா சைக்கோபாத் மனிதர்களைப் பற்றி ஒரு படம் எடுக்கணும்னு ஆசை. 'யுத்தம் செய்' படத்துல கொலைகள் செய்யும் நல்ல மனிதர்களைப் பற்றிப் பேசினேன். 'அஞ்சாதே' படத்தில் மனப் பிறழ்வுள்ள கெட்ட மனிதர்களைக் காட்டினேன். ஆனா, 'சைக்கோ' நிலை அதையெல்லாம்விடக் கொடுமையானது. அப்படி ஒரு மனநிலையுள்ள மனிதனைத்தான் 'சைக்கோ' ஆக்கியிருக்கேன்" என மிரட்டல் அறிமுகம் கொடுக்கிறார் மிஷ்கின். முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2kHDArX

"மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?"

சைக்கோ
சைக்கோ

"இந்தப் படத்துல அவருடைய இசையைக் கேட்டு, இவ்வளவு நாளா இளையராஜாவைப் புரிஞ்சுக்காமலேயே அவருடைய இசையைக் கேட்டுட்டோமோன்னு சந்தேகமே வந்திடுச்சு. அவரை வியந்து எவ்வளவோ விஷயங்களைப் பேசியிருக்கேன். அதெல்லாம் ரொம்பக் கம்மி. 'சைக்கோ'வைப் பார்த்துட்டு, 'கொலைகாரப் பாவி'ன்னு சொன்னார். 'நல்லாயில்லையா'ன்னு கேட்டேன், 'இப்படி எடுத்து வெச்சிருக்க... அழகா இருக்குடா!'ன்னு பாராட்டினார். 12 வயசுப் பையனின் சுறுசுறுப்போடு இந்தப் படத்துக்கு இசையமைச்சுக் கொடுத்தார். என் கதாபாத்திரங்களை நான் புரிஞ்சுக்கிட்டதுக்கும் அதிகமா அவர் புரிஞ்சிருந்தார். இந்தப் படத்துல அவரோட இசையைக் கேட்டு, இனி என் படங்கள்ல இளையராஜா இல்லாம பண்ணவே முடியாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். 'துப்பறிவாளன் 2' படத்துக்கும் இளையராஜாதான் இசைன்னு விஷால்கிட்ட சொல்லிட்டேன். இந்தியாவின் ஒரே ஜீனியஸ் ராஜாதான்!"

" 'சைக்கோ' படத்தின் அடிப்படை என்ன?"

"புத்த இலக்கியங்களில் 'அங்குலிமாலா'ன்னு ஒரு கதை இருக்கு. புத்தர் தன் போதனைகளை முடிச்சிட்டுக் காட்டு வழியா ஒரு கிராமத்துக்குப் போறார். கிராமத்துல இருந்தவங்கெல்லாம் 'இந்த வழியா வேணாம்; வேற வழியா போங்க'ன்னு சொல்றாங்க. 'இந்த வழியா போனாத்தான் சீக்கிரமாப் போகமுடியும்'னு சொல்ற புத்தர்கிட்ட, 'காட்டுக்குள்ள இருக்கிற ஒருத்தன் உள்ள வர்ற மனுஷங்களை வெட்டிக் கொன்னுட்டு அவங்க சுண்டுவிரலை எடுத்து மாலையா போட்டுக்குறான்'னு சொல்றாங்க.

சைக்கோ
சைக்கோ

'இதைச் சொல்லாம இருந்திருந்தாக்கூட சுத்திப் போயிருப்பேன். என் கண் முன்னாடி காத்துக்கிட்டிருக்கிற மரணத்தை நான் எப்படிக் கடந்துபோகாம இருக்க முடியும்?'னு சொல்லிட்டு, காட்டுக்குள்ள போறார். திரும்பி வரும்போது புத்தரும் வர்றார்; அவருக்குப் பின்னாடி தலைகுனிந்தபடி அங்குலிமாலாவும் வர்றான். அந்தக் காட்டுக்குள்ள என்ன நடந்ததுன்னு ரெண்டுபேரும் சொல்லல. கடைசிவரை புத்தருடைய சிஷ்யனா இருந்து செத்துப்போனான் அங்குலிமாலா. இவங்க ரெண்டுபேருக்கும் இடையே என்ன நடந்திருக்கும்னு பலரும் பல கதைகள் எழுதியிருக்காங்க. நானும் ஒரு கதை எழுதியிருக்கேன். அதுதான் 'சைக்கோ.''

> இந்தப் படத்தில் புத்தர் யார், அங்குலிமாலா யார்? | அதிதி ராவ் மிரட்டிய அனுபவம்... | நித்யா மேனனின் 'மன்னிப்பு' நிபந்தனை | 'துப்பறிவாளன் 2' பற்றி... | விஷால், சேரன் குறித்து... | இலக்கியம் - சினிமா குறித்து... - ஆனந்த விகடனில் வெளியாகியுள்ள மிஷ்கினின் பேட்டியை முழுமையாக வாசிக்க > "இலக்கியம் வேறு; சினிமா வேறு!" https://cinema.vikatan.com/tamil-cinema/mysskin-talks-about-his-upcoming-movies-and-the-art-of-filmmaking