Published:Updated:

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

 - ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்
பிரீமியம் ஸ்டோரி
- ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்

- ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

- ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்

Published:Updated:
 - ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்
பிரீமியம் ஸ்டோரி
- ‘எதற்கும் துணிந்தவன்’ எக்ஸ்க்ளூசிவ்

“ ‘பசங்க' பண்ணினபோது ஒரு குடும்பத்துல கடைசிப் பையன் மாதிரி வேகம் மட்டும் இருந்தது. இப்போ மூத்த பையன் மாதிரி பொறுப்பு வந்து சேர்ந்திருக்கு. அது ஒரு நல்ல சுவாரஸ்யமான சினிமாவுக்கான பொறுப்பு. சினிமாவுக்கு வந்து பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு. ‘எதற்கும் துணிந்தவன்’ எனக்கு சவாலான படம். மாஸ் ஹீரோவுக்குப் படம் செய்வதால் எல்லாம் கொடுக்கணும். சூர்யா சாரை சிரிக்க வச்சு, காமெடி பண்ண வச்சு, அழகான காதலை உருவாக்கி, ஆக்‌ஷனும் சேர்க்கணும்ல?

நம்ம படங்கள் எப்பவும் ஃபேமிலி ஆடியன்ஸுக்குத்தான். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள்னு எல்லா ஆடியன்ஸையும் சந்தோஷப்படுத்தணும். மற்ற ஹீரோக்கள் ‘இந்த கேரக்டர் நாம் பண்ணியிருந்தால் எப்படி இருக்கும்’னு நினைக்கணும். ‘எதற்கும் துணிந்தவன்’ அப்படி இருப்பான்’’ - தன்னம்பிக்கையின் உச்சத்தில் பேசுகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”
“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

``சூர்யாவுடன் மறுபடியும் களமிறங்குவது எப்படியிருக்கு?’’

``நமக்கே சூர்யா சாரை எப்படிலாம் ரசிச்சுப் பார்க்கணும்னு ஒரு எண்ணம் இருக்கும். அதுக்காக இரண்டு வருஷமா இந்த ஸ்கிரிப்டுக்குள்ளே உட்கார்ந்திருந்தேன். அவரை ஒரு ரசிகன் மாதிரி பார்த்துப் பார்த்து வடிவமைச்சிருக்கேன். படத்தில் செம ரகளையா காமெடி பண்ணியிருக்கிறார். சூர்யாவை இப்படிப் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவருக்கு முதலில் பண்ணின கதை வேற. அவரே அதைக் கேட்டு நடிக்க ரெடியாக இருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸ் எதிர்பார்த்தது வேற. அவங்க சூர்யாவை கிராமத்துக்குள்ளே கூட்டி வர நினைச்சாங்க. கலாநிதி மாறன் சார் சொன்னது அது ஒண்ணுதான்.

இது பாண்டிராஜ் படமா, சூர்யா படமான்னு ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம். எல்லாமே இதில் இருக்கு. அவ்வளவு ரசிச்சு சூர்யா பண்ணியிருக்கார். ஸ்கிரிப்டில் இருந்ததைவிட அழகாச் செய்தார். சில விஷயங்களைச் செய்யலாமா வேணாமான்னு அவர் நினைக்கும் போது அதை நான் உடைச்சு விட்டுடுவேன். எமோஷன், கலகலப்பு இரண்டிலும் பட்டையைக் கிளப்பியிருக்கார். எங்க இரண்டு பேருக்கான பரிமாற்றங்கள் சந்தோஷமா இருந்தது.''

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”
“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

``பொள்ளாச்சி சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட கதைன்னு சொல்றாங்களே?’’

``பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் பெண்களுக்கான பிரச்னைகளை இந்தப் படம் பேசும். பிரச்னை பொள்ளாச்சியில் மட்டும் இருக்கா என்னா? இந்தியா முழுவதுமே பெண்களுக்குப் பிரச்னைதானே! பெண்களின் பிரச்னைகள், பெருமைகள் இரண்டையும் பேசும் படம் இது. ஒரு பையன் பெண்களிடம் எப்படி நடந்துக்கணும், பார்த்துக்கணும், அவர்களின் பிரச்னையை எப்படித் தீர்த்து வைக்கணும்னு சொல்லியிருக்கேன்.

அதேமாதிரி பெண்களும் ஆண்களிடம் எப்படி நடந்துக்கணும், எதை நம்பணும், நம்பக்கூடாதுன்னு பல விஷயங்கள் பேசியிருக்கோம். இந்தப் படம் பார்க்கும்போது பெண்கள் மேலே மரியாதை வரும். இந்தப் படம் செய்துக்கிட்டிருக்கும்போது என் மனைவிகிட்டே நான் நடந்துக்கிற நடைமுறையே மாறியிருக்கு. பொள்ளாச்சியில் பிறந்திருந்தாலும், மும்பையில் பிறந்திருந்தாலும், புதுக்கோட்டையில் பிறந்திருந்தாலும் தப்பு பண்ண நினைக்கிறவனுக்கு அடி விழுந்த மாதிரிதான் இருக்கும்.

வழக்கமான என் படங்களுக்கு நேரெதிரா ஒரு படம் பண்ண நினைச்சேன். அப்படி இது அமைஞ்சிருக்கு. இது ஃபேமிலி படம் கிடையாது. ஆனா, ஃபேமிலிக்கான படம். படம் பார்க்கும்போது நீங்களும் உணர்வீங்க.''

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”
“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

``பிரியங்கா மோகனுக்கு என்ன மாதிரி ரோல்?’’

``நல்ல லவ் போர்ஷன்கள் நிறைய இருக்கு. ஆதினி - இதான் பிரியங்கா கேரக்டரின் பெயர். ரொம்ப க்யூட்டா இருக்காங்க. க்யூட்டா நடிச்சிருக்காங்க. தமிழ் தெரிஞ்ச கதாநாயகி என்பதால் பாத்திரத்தை ஈஸியா உள்வாங்கி நடிக்கிறாங்க. சரண்யா, இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், சூரி, ராமர், தங்கதுரை, புகழ்னு நிறையபேர் இருக்காங்க. அதனால் கலகலப்புக்கும் பஞ்சமில்லை. சத்யராஜ் சார் பத்திச் சொல்லவே வேண்டியதில்லை. அசத்தியிருக்கார். அதிலும் முதன்முறையா சத்யராஜும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. அத்தனையையும் நிறைவேத்தியிருக்கோம்.

சூர்யா மாதிரி ஒரு பெரிய ஹீரோ சேரும்போது நானும் நிறைய விஷயங்களைச் சேர்த்தேன். ஜெயிக்கிறது தோக்குறது எல்லாம் வாழ்க்கையிலும் கிடையாது, சினிமாவிலும் கிடையாது. நாம் என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்குக் கடத்திட்டாலே போதும்னு நினைக்கிறேன். ரத்னவேல் ஒளிப்பதிவு பெரிய ப்ளஸ். இமானோடு இது மூன்றாவது படம். பொதுவா என் படங்களில் வன்முறையே இருக்காது. ஆனால் என் படங்களுக்கு மாறாக இதில் ஆக்‌ஷன் கூடுதலா இருக்கும்.”

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”
“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

``என்ன படங்கள் செய்தாலும் எப்பவும் குழந்தைகள் உலகத்திற்கு வர ரெடியா இருக்கீங்க?’’

“எனக்குக் குழந்தைகளை ரொம்பவும் பிடிக்கும். அவங்களைப் படம்பிடிக்க நிறைய பொறுமையும், விட்டுக்கொடுக்கிற குணமும் வேணும். நாம் பார்க்கிற சினிமாவை குழந்தைகளும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. குழந்தைகளை வச்சுப் பண்ணும்போது நானும் கோமாளி மாதிரி ஆகிவிடுகிற கூத்தெல்லாம் நடக்கும். ஆனா அந்தச் சவால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தைகளுக்கான ஸ்கிரிப்ட் எப்பவும் என்கிட்டே இருக்கு. இப்ப இருக்கிற குழந்தைகளின் உலகம் வேற.

நாம் வளரும்போது ஓடிவிளையாட, குதிச்சுத்திரிய மரம், மைதானம், கில்லி, டெனிகாய்ட்னு ஆயிரம் இருந்தது. ஆனா இப்ப 600 சதுர அடி வீட்டில் அடைச்சு வச்சு அவங்க எப்பவும் போனும் கையுமாவே இருக்காங்க. அவங்களை எப்படிக் கையாள்றதுன்னு போன தலைமுறையான நமக்குத் தெரியல. ‘தினங்களைக் கொண்டாடுவதை விட்டு எப்போது குழந்தைகளைக் கொண்டாடப் போகிறோம்’னு அப்துல் ரகுமான் சொல்வார். குழந்தைகளை முன்னாடி விட்டு பின்னாடி நடப்போம். அவங்களின் அழகு அப்பதான் புரிபடும். கோபத்தையோ அன்பையோ ஒரு பார்வைக்குள் படம் பிடிச்சுக் காட்டுகிற அவங்க பக்குவம் தெரியும். சீக்கிரம் ஒரு குழந்தைகள் சினிமா செய்யணும். நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க, இறங்கிடுவோம்.”

“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”
“பெண்களின் பெருமைகளையும் பேசுவான், பிரச்னைகளையும் பேசுவான்!”

``பத்துப் படங்கள் செய்தாச்சு. கத்துக்கிட்ட படிப்பினைகள், கிடைச்ச அனுபவங்கள்..?’’

“கிராமத்திலிருந்து ஒரு வார்த்தைதான் சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அது சினிமா! கஷ்டப்பட்டு `என்னடா இது லைஃப்'னு வெறுப்பா இருந்திருக்கு. `எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே'ன்னு தவிச்சு அலைஞ்சிருக்கேன். கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது `ஒரு சின்ன ஏணி கிடைச்சால் போதும். அந்த ஏணி எங்கே இருக்குன்னு தெரியலையே'ன்னு முழிப்பேன். கடுமையா உழைச்சா முன்னேறிடலாம்னு சொல்வாங்க. எங்க அப்பா, அம்மா உழைக்காத உழைப்பா? அவங்க அப்படியேதான் இருந்தாங்க. அப்ப வெற்றியின் ரகசியம் உழைப்பு மட்டுமே இல்லையா? நம்பிக்கைதான் வெற்றியின் ரகசியம் என்றால் யாருக்கு இல்லை நம்பிக்கை? சரி திறமைதான் காரணமா? நம்மைவிடத் திறமைசாலிங்க எவ்வளவோ பேர் ஜெயிக்க முடியாமல் இருக்காங்களே? இதுதான் வெற்றிக்குக் காரணம்னு எதையும் உறுதியாச் சொல்லிட முடியாது. அதனால் என் வழியை அமைதியாகப் பார்த்துக்கிட்டு, முடிஞ்சவரை நேர்மையாக இந்தத் தொழிலைச் செய்கிறேன். குறைந்தபட்ச நேர்மைதான்... அது இருந்தால் பாக்கியெல்லாம் கிடைச்சுடும்னு தோணுது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism