Published:Updated:

“தீவிர தொண்டன் சராசரி மனிதனானால் அதான் பப்ளிக்!”

பப்ளிக் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பப்ளிக் படத்தில்...

பெரியார், அண்ணா படங்களைத் திட்டமிட்டெல்லாம் புறக்கணிக்கவில்லை. இவர்களையெல்லாம் போதுமான அளவு மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம்

“தீவிர தொண்டன் சராசரி மனிதனானால் அதான் பப்ளிக்!”

பெரியார், அண்ணா படங்களைத் திட்டமிட்டெல்லாம் புறக்கணிக்கவில்லை. இவர்களையெல்லாம் போதுமான அளவு மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம்

Published:Updated:
பப்ளிக் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பப்ளிக் படத்தில்...

“இந்தப் படம் ‘பப்ளிக்’ சாதாரண மனிதர்களைப் பற்றியது. எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்படும் அவர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கேன்” என்றபடி ஆரம்பிக்கிறார் அறிமுக இயக்குநர் ரா.பரமன். பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறியவர்.

ரா.பரமன்
ரா.பரமன்

``தமிழகத்தின் முக்கியமான கருத்தியல் முன்னோடிகளான அயோத்திதாசர், சிங்காரவேலர், இரட்டைமலை சீனிவாசன், ஜீவா போன்றவர்கள் போஸ்டரில் இடம்பெற்றிருப்பது எதன் குறியீடு?’’

“அயோத்திதாசர், சிங்காரவேலர், ரெட்டமலையார், நடேசனார், தோழர் பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் தங்களின் சித்தாந்தங்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை உழுது பண்படுத்தியவர்கள். அதன் பலனை இன்று நாம் எல்லோரும் அனுபவிச்சுக்கிட்டு இருக்கோம். இந்தப் போஸ்டரில் இருக்கும் தலைவர்களின் படங்களுக்குப் பின்னால் தமிழகத்தின் சித்தாந்த அரசியல் அடங்கியிருக்கு. அதைப் பிரதிபலிப்பதாக இந்தப் படம் இருக்கும்.”

 “தீவிர தொண்டன் சராசரி மனிதனானால் அதான் பப்ளிக்!”

``பாரதிதாசனைத் தவிர திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா படங்களைப் புறக்கணித்தது ஏன்?’’

“பெரியார், அண்ணா படங்களைத் திட்டமிட்டெல்லாம் புறக்கணிக்கவில்லை. இவர்களையெல்லாம் போதுமான அளவு மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம். அது மட்டுமல்லாமல், எந்த ஒரு இயக்கத்தையும் தனிநபராக யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. பட்டுக்கோட்டை அழகிரி, திராவிட இயக்கச் செயல் வீரர் இல்லையா? நெடுஞ்செழியன் திராவிட இயக்கப் பல்கலைக் கழகம் இல்லையா? இப்ப பெரியாரை போஸ்டரில் போட்டிருந்தால்,சிங்காரவேலரையோ, ரெட்டமலையாரையோ ஏன் போடலைங்கிற கேள்வியே வந்திருக்காது, ஆனா இவங்க படங்களைப் போட்டா மட்டும் ‘பெரியார் ஏன் இல்ல’ன்னு கேள்வி வருது. தொடர்ந்து ஒருவரையே கொண்டாடிக்கொண்டு இருப்பதனால் ஏற்படும் பாதிப்பு இது. இந்த ஒற்றைத்தன்மை மிகவும் ஆபத்தானது. எதற்கு எதிராகப் பெரியார் போராடிக் கொண்டிருந்தாரோ அதாகவே பெரியாரை மாற்றும் போக்கு இது.”

 “தீவிர தொண்டன் சராசரி மனிதனானால் அதான் பப்ளிக்!”

“சமுத்திரக்கனி, காளிவெங்கட்டுக்கு என்ன மாதிரியான பாத்திரங்கள்?”

“கட்சியின் அடிமட்டத் தொண்டனாக காளி வெங்கட். அவர் மனைவியாக ரித்விகா. கிராமத்திலிருந்து வந்து வாழ்க்கைப்பட்டு அரசியலே கதின்னு சுத்திக்கிட்டு இருக்கிற காளியை நொந்துகிட்டு இருக்கிற பொண்ணு. சமுத்திரக்கனிதான் கதையை நகர்த்திக்கிட்டுப் போவார். மு.ராமசாமி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி போன்றவர்கள் நடிச்சிருக்காங்க. தீவிர அரசியலில் இருக்கும் ஒரு தொண்டன் சாதாரண ‘பப்ளிக்’காக மாறுவதுதான் கதை.

ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்குமான உறவு, தொண்டர்களைத் தலைவர்கள் பயன்படுத்துகிற விதம் ஆகியவற்றைப் பற்றிப் படத்தில் சொல்லியிருக்கேன். கட்சியின் சின்னத்தை ஹேர்கட் பண்ணிக்கிறது மாதிரியான விஷயங்களை காமெடியா விமர்சனம் பண்ணியிருக்கேன். பொதுவா தமிழ் சினிமாவில் பொதுவாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு வந்து, அரசியலில் பெரிய பதவிகளுக்குப் போவதைத்தான் நாம் காட்சிகளாகப் பார்த்திருக்கோம். இந்தப் படம் அரசியல்வாதியாக இருந்து சாமானிய வாழ்க்கைக்குத் திரும்புகிறவர்களைப் பற்றிய படம்.

வெற்றி மகேந்திரன், ராஜேஷ் யாதவ் இருவரும் ஒளிப்பதிவு பண்ணியிருக்காங்க. இமான் இசை. படம் வெளியான பிறகு நிறைய விவாதங்களைக் கிளப்பும்னு நம்புறேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism