Published:Updated:

''நானே ஹீரோ, நானே டைரக்டர்... ஆனா, இப்போ அப்படி இல்லை!''-இயக்குநர் பா.விஜய்

மேதாவி
மேதாவி

`ஸ்ட்ராபெரி', `ஆருத்ரா' ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் ஆனவர் பாடலாசிரியர் பா.விஜய். தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா இருவரையும் இணைத்து 'மேதாவி' எனும் படத்தை இயக்க இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

''நான், இயக்கிய ரெண்டு படங்கள்லேயும் நானே ஹீரோவா நடிச்சிருப்பேன். ஆனா, `மேதாவி' படத்தின் மூலமா முழு வீச்சுல டைரக்‌ஷன் மட்டுமே பண்ணப்போறேன். ரெண்டு பெரிய ஹீரோக்களை வெச்சி டைரக்‌ஷன் பண்றதால எல்லாம் சரியா இருக்கணும்னு எல்லா வேலைகளும் கவனமா செய்றேன். அதனால இதுல நடிக்கல. லாக்டெளன்ல இருக்குற நேரத்துல ஸ்க்ரிப்டை இன்னும் மெருகேத்திட்டிருக்கேன். லாக்டெளன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் - த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் ஹாரர் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராஷி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

பா.விஜய்
பா.விஜய்

இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். பெரிய புரொடக்ஷன் கம்பெனி கிடைச்சிருக்கு. அதனால என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன். கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீஸாகிடும்'' என்றார் இயக்குநர் பா.விஜய்.

அடுத்த கட்டுரைக்கு