Published:Updated:

`ஃபர்ஸ்ட் சசிகுமார், நெக்ஸ்ட் விஜய் சேதுபதி!' - பொன்ராமின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்

சனா

இயக்குநர் பொன்ராம், சசிகுமாரை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இயக்குநர் பொன்ராம்
இயக்குநர் பொன்ராம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' எனத் தொடர்ந்து மூன்று படங்களில் சிவகார்த்திகேயனோடு பணியாற்றினார், இயக்குநர் பொன்ராம். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது.

சசிகுமார் - இயக்குநர் பொன்ராம்
சசிகுமார் - இயக்குநர் பொன்ராம்

விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அவருக்கு முன்னதாக சசிகுமாரை வைத்து படம் ஒன்று இயக்க திட்டமிட்டிருக்கிறார், பொன்ராம். காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங், வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. படத்தை, இந்த வருடத்தின் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது, படக்குழு. பொன்ராமின் ஆஸ்தான காமெடி நடிகரான சூரியும் இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். மறுபக்கம், சசிகுமார் 'சலீம்' படத்தை எடுத்த நிர்மல் குமார் இயக்கத்தில் 'நா நா' படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில், சசிகுமார் போலீஸாக நடிக்கிறார். மேலும், சரத்குமார் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.