சினிமா
தொடர்கள்
Published:Updated:

“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”

லவ் டுடே படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
லவ் டுடே படத்தில்...

‘கோமாளி’யை காமெடிப் படம்னு நினைச்சுகிட்டுப் போனவங்களுக்கு சர்ப்ரைஸ் எமோஷனல் இடங்கள் இருந்தது.

காமெடியும் எமோஷனலும் கொண்டு ‘கோமாளி'யில் ஆச்சரியப்படுத்தி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் பிரதீப் ரங்கநாதன். `நான் ஹீரோவாகிட்டேன்’ என ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இப்போது வந்து நிற்கிறார். ‘‘யாருங்க ஹீரோ? ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையாக நிற்கிறவனும் மனதைத் தொடறவனும்தானே ஹீரோ! எனக்கு ஸ்கிரீனில் பெருசா ஆடிப் பாடணும், 15 பேரோட சண்டை போடணும்னு ஆசை இல்லை. உங்ககிட்டே, மக்கள்கிட்டே நடிப்பு மூலமாக மட்டுமே பேசப் போறான் பிரதீப், அவ்வளவுதான்’’ - சிரிக்கிறார் பிரதீப். 2K இளைஞர்களுக்கு மத்தியில் இப்போது ‘லவ் டுடே’ ட்ரைலர்தான் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”

``முதல் படம் ‘கோமாளி’ வெற்றிக்குப் பிறகு அதைவிட அதிரடியாகப் பண்ணப் போறீங்கன்னு எதிர்பார்த்திருந்தா, சடார்னு நடிக்க வந்துட்டீங்களே?’’

‘‘நான் ‘லவ் டுடே'யில் நடிக்க வந்தது ஒரு விபத்து மாதிரி. என்னை ஹீரோவாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள் என்று சொன்னால் அது முழுப்பொய். எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசை இருந்தது. பேக்ரவுண்ட் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர் கல்பாத்தி சார் கதையைக் கேட்டதும் இதற்கு நானே பொருத்தமாக இருப்பேன்னு நினைச்சாங்க. நமக்கு ஒரு ஆசை இருந்தால் நாம்தான் நிறைவேற்றிக்கணும். வேற யாரும் நிறைவேற்ற முன்வர மாட்டாங்க. என்னை மாதிரி நார்மல் பசங்களுக்கு இது ஒண்ணுதான் வழி. ஹீரோவாக கமிட் ஆகிற வரைக்கும் பல விமர்சனங்கள் இருந்தன. தலையிலிருந்து கால் வரைக்கும் பார்த்தாங்க. அதற்கான கேலி நேத்து வரைக்கும் இருந்தது. ஒரு காலேஜ் விழாவுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து `எப்படி இருக்கீங்க’ன்னு தொகுப்பாளர் கேட்டார். `கேவலமாக இருக்கார்’னு கூட்டத்திலிருந்து ஒருத்தர் சொன்னார். நான் `நல்லா இருக்கேன்’னு அமைதியா பதில் சொன்னேன். எல்லாரும் கைதட்டினாங்க. இப்படி எல்லாத்தையும் பார்த்துட்டேன். எனக்குக் கோபமே இல்லை. ‘கேவலமாக இருக்கேன்’, ‘மொக்கையாக இருக்கேன்’னு மத்தவங்க சொல்லி சின்ன வயதில் இருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன். இதுல என்ன புதுசுன்னா, நான் இங்கே வந்து நிற்கிறதுதான். புதுச் சட்டையில் கறை பட்டால்தான் சங்கடப்படுவோம். என் சட்டை முழுக்கக் கறைதான் சார். அதுல இன்னொரு கறை பட்டால் ஒண்ணும் புதுசு இல்லை.”

“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”
“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”

‘‘இன்னுமா வெள்ளை நிறம், அழகான ஹீரோன்னு இருக்குன்னு நினைக்கிறீங்க?”

‘‘அதைப் பத்தி வரலாறு மாதிரி பேசணும். முதலிலிருந்தே வெள்ளை அழகு, கறுப்பு கம்மின்னு ஒரு விஷயம் இருக்கு. எது அழகு, எது அழகில்ல, எது நல்லது, எது கெட்டதுன்னு உலகத்தில் இருக்கிற எதையும் சொல்ல முடியாது. எனக்கு பிரியாணி பிடிக்கும். உங்களுக்கு ஃப்ரைடு ரைஸ் பிடிக்கும். ஆனால் பிரியாணிதான் சூப்பர்னு இங்கே இருக்கு. எல்லாமே பிரேக் ஆகும். அதுதான் நம்மை மாதிரியானவர்களுக்கு நம்பிக்கை. வெள்ளைதான் அழகுன்னு இருக்கும்போது உடைச்சு ரஜினி வந்தார். ஒல்லியாக தனுஷ் வந்தார். நான் பத்துப் பேரோடு சண்டை போட்டால் நம்ப மாட்டாங்க. காதலியோடு சண்டை போடலாம், நம்புவாங்க. நம்புற மாதிரி நடிச்சிட்டுப் போயிட வேண்டியதுதான்.”

“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”

‘‘இன்றைய காதலைப் பிரிச்சுமேயறீங்க...’’

‘‘ட்ரைலரில் பொழுதுபோக்குப் படம் மாதிரி தெரியும். அந்த மாதிரி படம் மட்டுமல்ல, எமோஷனல் படமும்கூட. ‘கோமாளி’யை காமெடிப் படம்னு நினைச்சுகிட்டுப் போனவங்களுக்கு சர்ப்ரைஸ் எமோஷனல் இடங்கள் இருந்தது. அதைவிட எமோஷனல் மெசேஜ், நல்ல விஷயங்களை எடுத்திட்டுப் போறது இதிலே நடக்கும். இதில் ஒரு காதல் ஜோடி தங்கள் அலைபேசிகளை மாத்திக்கிறாங்க. அதில் அவர்களுக்கு வருகிற திருப்பங்கள்தான் படம். முதலில் மாத்திக்கும்போது காமெடியா தோன்றலாம். ஆனால் உள்ளே போகப் போக மனிதர்களின் உண்மையான முகங்கள் தெரியவரும். அதில் இருக்கிற கஷ்டங்கள், வலிகள் தெரியும். இப்படி மாத்திக்கிட்டது குடும்பத்தையே பாதிக்குது. இதை சத்யராஜ் சார் ஆரம்பிச்சு வைக்க, ராதிகா மேடம் முடிச்சு வைப்பாங்க. எனக்குக் காதலியாக ஒரு பொண்ணு வேணும். அவங்களுக்கு நடிக்கவும் தெரியணும். பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் வந்த இவானாவைக் காட்டினாங்க. எனக்கு சரிக்கு சமமான ரோல் இது. ஏற்கெனவே நான் எடுத்த ‘ஆப் லாக்' குறும்படத்தைத்தான் விரிவுபடுத்தினேன். இப்ப இருக்கிற காதலர்களின் அத்தனை பிரச்னைகளையும் படம் பேசும். அவர்களை உள்ளது உள்ளபடி புரிஞ்சுக்க பெரியவர்களுக்கும் ஒரு வாய்ப்பு.”

“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”
“காதலர்களை பெரியவர்கள் புரிஞ்சுக்க இது வாய்ப்பு!”

‘‘யுவன் பாடல்கள் நல்லா இருக்கு!’’

‘‘நான் வளர்ந்தது யுவன் பாட்டைக் கேட்டுதான். தமிழ் இளைஞர்களிடம் அதிகமா காதல் உணர்வை வளர்த்ததே அவர்தான். அதனால் இந்தப் படத்திற்கு அவர் இசையமைப்பதுதான் பொருத்தமானது. சிம்பு சார் ஃபர்ஸ்ட் லுக் பார்த்துவிட்டு போன் செய்து, ‘பிரமாதமா இருக்கு’ன்னு சொன்னார். ட்ரெய்லர் வந்ததும் ‘நான் நினைச்சது சரியாப்போச்சுயா. நல்லா வந்திருக்கு. உன்னை படம் வந்ததும் பலபேர் பாராட்டப் போறாங்க. முதல் பாராட்டு என்கிட்ட இருந்து வந்தது, பார்த்துக்கோ’ன்னு சொன்னார் STR. அந்த மனசை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.’’

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

‘‘உதவி இயக்குநராகப் பணிபுரியாமல் நேரடியாக வந்துட்டீங்க...’’

‘‘எங்கேயும் போய் பார்த்து விசாரித்துச் சேர பெட்ரோலுக்குக்கூட காசு இருக்காது. ஐ.டி வேலையை விட்டுட்டு வந்தேன். சரியாக சாப்பாடு இல்லாமல் சேமிச்சு கொஞ்சம் வச்சுக்கிட்டுதான் வந்தேன். ‘கோமாளி’ படம் நல்லா ஓடினதும் ஐசரி கணேஷ் சார் ஒரு கார் பரிசு கொடுத்தார். என்னிடம் அவ்வளவு பெரிய காரைக் கொடுக்கும்போது ‘பெட்ரோல் போடக்கூட காசு இல்லை. கார் வேண்டாம்’னு பணமா வாங்கிக்கிட்டேன். இந்தப் படம் வர்ற வரைக்கும் காலம் தள்ள அந்தப் பணம்தான் உதவியாக இருந்தது. அப்பா, குவைத் வரை போய் கூலி வேலை பார்த்துப் படிக்க வச்சார். இப்போ அண்ணன் டெபுடி டாக்ஸ் கமிஷனராகவும், அக்கா பல் மருத்துவராகவும் இருக்காங்க. நான் டைரக்டராகவும் நடிகராவும் ஆகிட்டேன். எல்லாத்துக்கும் மேல அப்பாவின் உழைப்பைத்தான் மனசுல வெச்சிருக்கேன்.”