Published:Updated:

``த்ரிஷா ஜாதகப்படி நடிகையாகிட்டாங்க; அடுத்தது கண்டிப்பா அரசியல்தான்!" - பிரவீன் காந்த்

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்

"`ஜோடி' ரிலீஸான சமயம் மிஸ்.சென்னைக்கான பட்டத்தை வாங்கினாங்க த்ரிஷா. அப்போ அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி வீடியோவும் வெளியிட்டிருந்தேன்."

`` `ஜோடி' படத்தோட ஷூட்டிங் ஊட்டியில போயிட்டிருக்கும்போது ஒரு மாடல்தான் த்ரிஷாவை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. அப்போ அவங்க பத்தாவது லீவுக்கு ஊட்டி வந்திருந்தாங்க. த்ரிஷாவுடைய அப்பாவை எனக்கு ஏற்கெனவே தெரியும். அதனால அவங்களுடைய ஃபேமிலியை எனக்கு நல்லாவே தெரியும். `ஜோடி' படத்துல சிம்ரனுடைய தோழிகளா நடிக்கிறதுக்கு எனக்கு இளம் பெண்கள் தேவைப்பட்டாங்க."

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்
"சிம்பு - த்ரிஷா ஜோடி செட் ஆகாதுனு கெளதம்கிட்ட சொன்னாங்க. ஆனா...!?" - மனோஜ் பரமஹம்சா

``அந்த வயசுக்கே உரிய அழகு, துடிப்பு, திறமைனு த்ரிஷாகிட்ட எல்லாமே இருந்தது. பொழுதுபோக்குக்காகத்தான் அந்தப் படத்துல அவங்க நடிச்சாங்க. தவிர, சினிமாவுடைய கம்ஃபோர்ட் ஸோன் எப்படியிருக்குனு தெரிஞ்சுக்க த்ரிஷா ஆசைப்பட்டாங்க. கிட்டத்தட்ட 15 நாள் ஊட்டியில தங்கிருந்தாங்க. அடிப்படையில த்ரிஷா அமெரிக்காவுல பிறந்த பொண்ணு. ஏன்னா, அவங்க வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க."

``ஜாதகத்துல எப்போவுமே எனக்கு ஆர்வம் அதிகம். என்கூட ரெண்டு ஜோசியக்காரங்க சுத்திட்டேயிருப்பாங்க. அப்போ த்ரிஷாவுடைய ஜாதகத்தை வாங்கிப் பார்த்துட்டு, `இந்தப் பொண்ணு பெரிய ஹீரோயினா வரும்'னு திட்டவட்டமா சொன்னாங்க. இன்னும் சொல்லப்போனா ஜாதகப்படி அரசியல் என்ட்ரியும் அவங்களுக்கு இருக்கு. கண்டிப்பா அரசியல்ல பெரிய ஆளா வருவாங்க. `ஜோடி' ரிலீஸான சமயம் மிஸ்.சென்னைக்கான பட்டத்தை வாங்கினாங்க த்ரிஷா. அப்போ அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி வீடியோவும் வெளியிட்டிருந்தேன். படத்துடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு த்ரிஷா வந்தப்போ, `யார் இந்தப் பொண்ணு... இவ்ளோ அழகா இருக்கா'னு சிம்ரனே ஆச்சர்யமா பார்த்தாங்க. `ஸ்டார்' படத்துடைய ஹீரோயினா த்ரிஷாவை கமிட் பண்ணியிருந்தேன். ஆனா, சில காரணங்களால நடக்காம போயிடுச்சு."

த்ரிஷா
த்ரிஷா

`` `லேசா லேசா' படத்துலதான் த்ரிஷா ஹீரோயினா அறிமுகமானாங்க. இயக்குநர் ப்ரியதர்ஷன் சார்கிட்ட த்ரிஷாவைப் பத்தி பெருமையா சொல்லியிருந்தேன். அதே மாதிரி அந்தப் படத்துடைய தயாரிப்பாளர் விக்ரமும் த்ரிஷாவுடைய அம்மாவும் குடும்ப நண்பர்கள். அதனால அந்தப் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு த்ரிஷாவுக்கு சுலபமா கிடைச்சிருச்சு. என்னுடைய ஃபேவரைட் ஹீரோ ரஜினி சார். `பேட்ட' படத்துல த்ரிஷாவும், சிம்ரனும் நடிச்சிருந்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. எப்போவாது நிகழ்ச்சிகள்ல த்ரிஷாவைப் பார்க்குறது உண்டு. கோவாவுல நடந்த திரைப்பட விழாவுக்கு த்ரிஷாவை விருந்தினரா கூட்டிட்டு வரணும்னு நிறைய முயற்சி பண்ணேன். சில காரணங்களால நடக்காம போயிடுச்சு."

படங்களை இயக்கி நடிச்சிட்டிருந்த நீங்க இடையில எந்தப் படங்களிலும் இயக்குநரா என்ட்ரி கொடுக்கலையே?

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்

``நடிக்க வந்ததால கேப் விழுந்துடுச்சு. சீமான் எடுத்திருந்த `தம்பி' படத்துக்கான கால்ஷீட்டை மாதவன் எனக்குக் கொடுத்திருந்தார். அந்த நேரத்துல நடிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சதால மாதவனை வெச்சு படம் எடுக்க முடியாம போயிடுச்சு. அஜித்துடைய `தீனா' படத்துடைய கால்ஷீட்டும் இப்படித்தான் போயிடுச்சு. இது நல்லதா கெட்டதான்னு தெரியலை. ஒரு நடிகனா என்னை நிரூபிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பார்த்திபன் சார் எடுத்திருந்த `ஒத்த செருப்பு' மாதிரியே நானும் ஒரு படத்துடைய முயற்சியில ஈடுபட்டிருக்கேன். `மூன்றாம் பிறவி'தான் படத்துடைய டைட்டில். இந்தப் படத்தை நானே டைரக்ட் பண்ணி டபுள் ரோல்ல நடிக்கப்போறேன். மூன்றாம் பாலினத்தவரை பத்தின படம். படத்துடைய இசைக்காக இளையராஜா சாரைக் கேட்கலாம்னு இருக்கேன்."

ஏ.ஆர்.ரஹ்மானை இடையில சந்திச்சீங்களா?

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்

``சமீபத்திலதான் ரஹ்மான் சாரை சந்திச்சுப் பேசினேன். `ஷங்கர், மணி சாருடைய படப் பாடல்கள் ஹிட் கொடுத்த மாதிரியே நம்ம வேலை பார்த்த பாடல்களும் செம ஹிட். அதனால, அடுத்து பண்ணப்போற படத்துல இன்னும் கவனமா இருக்கணும்'னு சொன்னார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்க ஆர்வமா இருக்கோம்."

ஒரு ரசிகனா ரஜினியை எப்படிப் பார்க்குறீங்க?

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்
`மக்கள் ஏன் அப்படி அழைக்கிறார்கள் எனத்  தெரியவில்லை’- `தர்பார்' மேடையில் மனம் திறந்த ரஜினி

``அவருடைய ஆன்மிகப் பயணம் எனக்குப் பிடிக்கும். அதே மாதிரி அவருடைய அரசியல் வருகையையும் மனதார வரவேற்கிறேன். `ஜோடி' படத்துலகூட அவருக்கு ஆதரவா வசனம் வெச்சிருப்பேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நேர்ல கூப்பிட்டுப் பேசினார் தலைவர். ஒருவேளை சினிமாவுக்கு நடிக்க வரலேன்னா அவரை வெச்சு படம் எடுத்திருக்கலாம்'' எனப் பேசி முடித்தார் பிரவீன் காந்த்.

அடுத்த கட்டுரைக்கு