Published:Updated:

“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”

மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்லால்

எல்லாப் படம் பண்ணும்போதும் `இந்தப் படம் நமக்குப் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா’ங்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்

“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”

எல்லாப் படம் பண்ணும்போதும் `இந்தப் படம் நமக்குப் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா’ங்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்

Published:Updated:
மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்லால்

இயக்குநர் பிரியதர்ஷன்... இந்திய சினிமாவில் மிகப் பரிச்சயமான பெயர், முக்கியமான பெயரும்கூட. 40 வருடங்கள்... 90க்கும் மேற்பட்ட படங்கள்... ஏராளமான விருதுகள் என இவரின் கரியர் ஆச்சர்யம் நிறைந்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு தன் படைப்பின் மீதும் கலையின் மீதும் இருக்கும் அளவற்ற காதல் அவரை இன்னும் கெத்தாகக் களமாட வைக்கிறது. மல்லுவுட் வரலாற்றில் 100 கோடி பட்ஜெட்டில் ‘மரக்கார் - அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற வரலாற்றுப் படத்தை இயக்கியிருக்கிறார். பொள்ளாச்சியில் வேறொரு படப்பிடிப்பில் இருந்தவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.

``1996-ல் பண்ணணும்னு ஆரம்பிச்ச இந்தப் படம் தள்ளித்தள்ளிப் போய் 25 வருஷம் கழிச்சு வெளியாகுது. எவ்வளவு சந்தோஷமா இருக்கு?’’

“ரொம்ப. ‘சிறைச்சாலை’ முடிச்ச பிறகு, இந்தப் படத்தைப் பண்ணணும்னு பிளான் இருந்தது. ஆனா, இதுக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் ரொம்பப் பெருசு. 40% படம் கடலுக்குள்ள ஷூட் பண்ணணும். 16-ம் நூற்றாண்டுல கடலுக்குள்ள நடந்த போரை இப்போ ரீ கிரியேட் பண்றது ரொம்ப கஷ்டம். இது வரலாறு. எதையும் நாம மாத்தமுடியாது. அதுக்காகக் காத்திருந்து காத்திருந்து 25 வருஷம் கழிச்சு இப்போ வெளியாகுறது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2020 மார்ச்ல பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, அதுக்குள்ள கொரோனா எல்லாத்தையும் மாத்திடுச்சு. கொஞ்சம் தாமதமானாலும் ஒரு வழியா மக்கள் இதை தியேட்டர்ல பார்க்கப்போறாங்க.

“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”

காந்தி, கட்டபொம்மன், குஞ்சாலி மரைக்காயர்னு எல்லோரைப் பத்தியும் படிக்கும்போது, நமக்குள்ள ஒரு தேசப்பற்று உணர்வு வந்திடும். இப்போ மாஸ், கிளாஸ்னு சொல்றாங்க. பெஸ்ட் மாஸ் எது தெரியுமா, தேசப்பற்றுதான். அது இந்தப் படத்துல இருக்கும். இப்போ கிரிக்கெட்லதான் தேசப்பற்றைக் காட்டுறோம். வேற எங்கேயும் தேசப்பற்று இல்லை. அப்பல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம நாட்டுக்காகப் போராடியிருக்காங்கன்னு காட்டியிருக்கேன். தவிர, ‘நான் பிறந்த மண்ணுதான் முக்கியம். மதமோ வேற எதுவோ முக்கியமில்லை’ அப்படிங்கிறதைச் சொல்லத்தான் இந்தப் படம் எடுத்தேன். இது என்னுடைய 96வது படம். இத்தனை வருஷத்துல என்னுடைய பெஸ்ட்னு இதை நினைக்கிறேன்.’’

``மலையாள சினிமா வரலாற்றிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்ல உருவாகியிருக்கு. பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு ப்ரஷரா இருக்கிற மாதிரி உணரலையா?’’

“எல்லாப் படம் பண்ணும்போதும் `இந்தப் படம் நமக்குப் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா’ங்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். எனக்கும் இருந்திருக்கு. அதுல கூடவே மத்த விஷயங்களும் சேரும்போது ப்ரஷரா உணருவோம். ஆனா, இந்தப் படம் எனக்கு ப்ரஷராவோ பயமாவோ இல்லை. ரொம்ப நம்பிக்கையா, தைரியமா இருக்கேன். நான் இந்தப் படத்துடைய பிரமாண்டத்தைச் சார்ந்து இல்லை. கதையைச் சார்ந்திருக்கேன். படம் எல்லோரையும் எமோஷனல் ஆக்கும். அந்த பிரமாண்டம் எனக்கு போனஸ்தான். இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, சைனீஸ்னு டப்பாகி வெளியாகுது. ஆனா, உருவானது என்னவோ மலையாளம், தமிழ்லதான். தமிழுக்கு தனியா சென்சார் சர்ட்டிபிகேட்டே வாங்கியிருக்கோம். இதை 1996-ல யோசிக்கும்போதே தமிழ், மலையாளம்னுதான் ஆரம்பிச்சோம். காரணம், ‘சிறைச்சாலை’க்குத் தமிழ் மக்கள் அவ்வளவு ஆதரவு கொடுத்தாங்க. தவிர, இந்த மாதிரி வரலாற்றுப் படங்களைத் தமிழ் மக்கள் கொண்டாடத் தவறியதில்லை. மலையாளத்துக்கு மட்டும்னா எங்களால இந்த அளவுக்கு செலவு பண்ணியிருக்க முடியாது. இப்போ இருக்கிற சூழல்ல எல்லா மொழி மக்களுக்கும் நம்ம படைப்பைக் கொண்டுபோய்ச் சேர்த்திடலாம்.’’

“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”

``வெளியாவதற்கு முன்பே மூணு தேசிய விருதுகள் கிடைச்சிருக்கு. குறிப்பா, அப்பாவும் மகனும் சேர்ந்து வாங்கியது எப்படி இருந்தது?’’

‘`சிறந்த படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த காஸ்ட்யூம் இந்த மூணு விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம். அப்பாவும் மகனும் ஒரே படத்துக்காக விருது வாங்குறது சரித்திரம். இந்த சரித்திரப் படம் எடுத்ததனால இப்படியொரு சரித்திரம் நடந்திடுச்சுபோல. படத்துல நிறைய விஷுவல் எஃபெக்ட்ஸ் இருக்கு. வெளிநாட்டுல இருந்து விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசரைக் கொண்டு வரலாம்னு பார்த்தா, ஒரு நாளுக்கு ரெண்டு லட்ச ரூபாய் கேட்டாங்க. பார்த்தேன். என் பையன் சித்தார்த், அமெரிக்காவுல விஷுவல் எஃபெக்ட்ஸ் படிச்சு அங்க வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். ‘டேய்... அப்பாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா’ன்னு சொல்லி அவனை இங்க வரவழைச்சேன். சூப்பரா பண்ணிக்கொடுத்துட்டான். இதுக்கு முன்னாடி நானும் என் படங்களும் தேசிய விருது வாங்கியிருந்தாலும் இந்தப் படத்துக்காகக் கிடைச்சது மனசுக்கு ரொம்ப நெருக்கம். நான், என் பையன் சித்தார்த் சேர்ந்து வேலை செஞ்சிருக்கோம். என் பொண்ணு கல்யாணி, நண்பன் மோகன்லால், அவனுடைய பையன் ப்ரணவ்னு குடும்பமே இருக்கு. தவிர, ஒளிப்பதிவாளர் திரு, புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரில் இவங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துக்கு அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்காங்க.’’

``உங்களுக்கும் மோகன்லாலுக்கும் ஆத்மார்த்தமான பல வருட நட்பு இருக்கலாம். அதுவே, தொழில்னு வரும்போது அந்த நட்புக்குள்ள பல இடையூறுகள் வர வாய்ப்பிருக்கு. அதையெல்லாம் தாண்டி உங்க நட்பு தனிச்சுத் தெரியுதே?’’

‘`ஆமா. எங்களுடையது டைரக்டர் - ஆர்ட்டிஸ்ட் உறவல்ல. சின்ன வயசுல இருந்து ஒண்ணாவே வளர்ந்தோம். ரெண்டு பேரும் ஒரே ட்ரெயின்ல சினிமா வாய்ப்பு தேடி மெட்ராஸுக்கு வந்தோம். இப்போ வரை 47 படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். இத்தனை வருஷமா எங்க நட்பு ரொம்ப ஆழமா இருக்கு. இந்த 47 படத்துல ஒரு படத்துக்குக்கூட நான் கதை சொன்னதில்லை. சொல்லணும்னு சொன்னாகூட, ‘நான் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்’னு சொல்லுவான். இந்த மாசம், இத்தனை நாள் கால்ஷீட் வேணும். இதுதான் கேரக்டர் அவ்வளவுதான் சொல்லுவேன். அவனும் கேட்கமாட்டான். என்கிட்ட மட்டும்தான் அப்படி. நம்ம மேல அவன் இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கும்போது, அவனை நாம விட்டுடக்கூடாதுன்னு எனக்கு அந்தப் படத்தின் மேல பொறுப்பு அதிகமாகிடும். இத்தனை படத்துல சில படங்கள் சரியா போகாத படங்களும் இருக்கு. அடுத்த படத்துக்குப் போய்க் கேட்குறப்போ, யாரா இருந்தாலும் என்ன கதைன்னு கேட்பாங்க. ஆனா, மோகன்லால் அப்பவும் கேட்டதில்லை. இதுவரை எங்களுக்குள்ள சின்னச்சின்ன சண்டைகள்கூட வந்ததில்லை. இனியும் வரக்கூடாது. எங்க நட்புக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

``ஏராளமான ரீமேக் படங்கள் பண்ணியிருக்கீங்க. இப்போ இருக்கிற ஓ.டி.டி கலாசாரத்துல ரீமேக் வொர்க் அவுட்டாகும்னு நினைக்கிறீங்களா?’’

“நான் பண்ணின 96 படங்கள்ல 45 படங்கள் என்னுடைய கதை; மீதி நான் ரீமேக் பண்ணியிருக்கேன். இந்தியில நான் 31 படம் பண்ணியிருக்கேன். அதுல நாலஞ்சு படங்கள் தவிர, மற்றவை எல்லாம் ரீமேக்தான். மலையாளத்துல நான் சின்ன பட்ஜெட்டை வெச்சுப் படமாக்கி ஹிட் கொடுத்த என் கதையை பெரிய பட்ஜெட் வெச்சு எந்த சமரசமும் இல்லாமல் பிரமாண்டமா இந்தியில பண்ணுவேன். ‘மணிச்சித்திரதாழ்’ படத்தை பாசில்கூட நானும் சேர்ந்து இயக்கினேன். அதுவே, தமிழ்ல ‘சந்திரமுகி’யா வரும்போது ரஜினி சாருக்காகச் சில மாற்றங்கள் பண்ணி வந்தது. அதையே நான் அக்‌ஷய் குமாரை வெச்சு இந்தியில ரீமேக் பண்ணும்போது, அக்‌ஷயின் இமேஜுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தினேன். ‘தேவர் மகன்’ படத்தை இந்தியில ரீமேக் பண்ணினேன். எல்லாப் படங்களையும் ரீமேக் பண்ணிட முடியாது. பல ஃப்ளாப் ஆகிடலாம். பார்க்கும்போது நம்ம ஊர் படம் இல்லையேங்கிற உணர்வு வந்திடும். அதனால, அவங்க கலாசாரத்துக்குத் தகுந்தமாதிரி திரைக்கதையில மாத்திடுவேன். ரீமேக் பண்ணும்போது அதிக கவனம் அவசியம். நீங்க சொல்றது ரொம்ப சரி. இப்போ எல்லாப் படத்துக்கும் நல்ல எக்ஸ்போஷர் இருக்கு. அதனால, அந்த லைனை மட்டும் எடுத்துக்கிட்டு வேற ஜானர்ல வேற விதமா எடுக்கலாமே தவிர, அப்படியே ரீமேக் வேலைக்காகாது. நான் ரீமேக் பண்றதை நிறுத்திட்டேன்.’’

“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”
“மோகன்லாலுக்கும் எனக்கும் சின்ன சண்டைகூட வந்ததில்லை!”

``கதையை நம்புறீங்களா திரைக்கதையை நம்புறீங்களா?’’

‘`ஒரு படம் எடுக்கும்போது எனக்கு இருக்கிற ஒரே டென்ஷன், என்னுடைய திரைக்கதை சரியா இல்லையான்னுதான். திரைக்கதைக்கு மேல ஒண்ணுமே இல்லை. ரீமேக், தழுவல்னு நான் பண்ணின படங்கள் எல்லாத்துக்கும் நான்தான் திரைக்கதை எழுதுவேன். அது எந்த மொழியா இருந்தாலும். நான் திரைக்கதையை மட்டும்தான் நம்புறேன்.’’

``உங்க நண்பர் மோகன்லால் இயக்குநராகி இருக்கார். உங்ககிட்ட ஏதும் டிப்ஸ் கேட்டாரா?’’

‘`40 வருஷத்துல 300 படங்கள்ல நடிச்சாச்சு. இந்தியாவுல இருக்கிற முக்கியமான இயக்குநர்கள் பலர்கூட பல மொழிகள்ல வேலை செஞ்சாச்சு. அவனுக்குத் தெரியாதா எப்படி டைரக்ட் பண்ணணும்னு ? கல்யாண வீடியோ எடுக்கிறவங்க கேமரமேனாகுறாங்க. மொபைல் போன்ல ஷார்ட் பிலிம் எடுத்துட்டு, டைரக்டராகுறாங்க. லாலுக்கு இருக்கிற அனுபவத்துக்கு நிச்சயமா சூப்பர் இயக்குநரா வருவான் பாருங்க. இந்தப் படத்துல என் பங்கு எதுவுமில்லை. படத்தை முடிச்சுட்டு எனக்கு சர்ப்ரைஸா காட்டுவான்னு நினைக்கிறேன்.’’

``40 வருஷமா எப்படி இவ்வளவு ஆக்டீவா இயங்கிக்கிட்டே இருக்கீங்க?’’

‘`எனக்கு வேறெந்த வேலையும் தெரியாதுப்பா. இந்த ஒரு வேலைதான் தெரியும்.’’

`` ‘காஞ்சிவரம்’ மாதிரி ஒரு படத்தை உங்ககிட்ட இருந்து மறுபடியும் எப்போ எதிர்பார்க்கலாம்?’’

“இப்போ தமிழ்ல ‘அப்பத்தா’ன்னு சின்னதா ஒரு படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அடுத்து மோகன்லால்கூட ஒரு படம் இருக்கு. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஒரு கதை இருக்கு. அது இப்போதைக்கு சர்ப்ரைஸ்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism