சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!

காசேதான் கடவுளடா படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
காசேதான் கடவுளடா படத்தில்

ஏவிஎம் சந்தோஷமா படத்தை ரீமேக் பண்ண அனுமதி கொடுத்தாங்க. முத்துராமன் நடித்த கேரக்டர்தான் சிவாவுக்கு.

“ஆஹா வந்தாச்சா..!’’ அன்போடு வரவேற்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ‘ஜெயங்கொண்டான்’ தொடங்கி இன்று வரை நிதானமான வெற்றியைப் பெற்றவர். இப்போது ‘காசேதான் கடவுளடா’ படம் வரப்போகிற உற்சாகம்!

‘‘ஏவிஎம்ல எடுத்த ‘காசேதான் கடவுளடா’ அன்னைக்கு அதிரிபுதிரி ஹிட். அதையே முறைப்படி ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்திருக்கோம். இன்னிக்கும் காமெடி தான் ஆல் டைம் ஹிட். இன்னிக்கு இருக்கிற கொரோனா சோகங்களுக்கு இந்தப்படம் நல்ல மாற்று மருந்து” - சந்தோஷமாகப் பேசுகிறார் இயக்குநர் கண்ணன்.

கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!
கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!

“ஏவிஎம் சந்தோஷமா படத்தை ரீமேக் பண்ண அனுமதி கொடுத்தாங்க. முத்துராமன் நடித்த கேரக்டர்தான் சிவாவுக்கு. தேங்காய் சீனிவாசன் போலி சாமியாராக வந்து கலக்கி எடுத்த இடத்தில் யோகி பாபு. ஸ்ரீகாந்த் வேடத்தில் கருணாகரன். எல்லாத்துக்கும் மேலே மனோரமா ஆச்சிதான் அதுல ஹைலைட். அவங்க அரசாட்சிதான் படத்தில் நடக்கும். இப்ப அதில் நடிக்க யார் இருக்காங்கன்னு பார்த்தால் ஊர்வசிதான் ஞாபகம் வந்தது. ‘ஆச்சி வேஷமா? நான் கொடுத்து வச்சிருக்கணும்’னு ஆசையாக நடிக்க வந்தாங்க. லட்சுமி நடித்த வேடத்தில் ப்ரியா ஆனந்த். குக்கு வித் கோமாளியில் றெக்கை கட்டிப் பறந்த புகழ், சிவாங்கியும் இதில் நடிச்சிருக்காங்க.’’

கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!
கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!

`` ‘தள்ளிப் போகாதே’, ‘தி இந்தியன் கிச்சன்’ என ரெண்டு படங்கள் ரெடி. இப்போ ‘காசேதான் கடவுளடா’வும் தயார் நிலையில் இருக்கு. இவ்வளவு வேகமா?’’

‘‘எப்பவும் ஸ்கிரிப்டில் அதிக நாள்கள் செலவழிப்பேன். மணிரத்னம் சார் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாடம் அப்படி. மற்றபடி படம் பார்த்தால் சும்மா திருவிழா மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். நான் மணிரத்னம் சார் கிட்ட இருந்து கற்றுக்கொண்டது காலம் தவறாமை. பதற்றமே இல்லாமல் அழகா போய்க்கொண்டு இருக்கிற மாதிரி சூழலை வச்சிருப்பார். அவரது ஸ்டைல். அதை நானும் கைக்குள் கொண்டு வரமுடியுமான்னு பார்த்திட்டே இருக்கேன்.

‘ஜம்புலிங்கமே’ பாடல் பழைய படத்தில் பெரிய ஹிட். அதை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கோம். யோகி பாபு இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து சேர்ந்தது சும்மா இல்லை. அவர் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கேன். சிவாவும், கருணாகரனும், யோகியும் நல்ல பிரெண்ட்ஸ். ஈகோன்னா என்னன்னு அவங்க மூணு பேருக்கும் தெரியாது. அதனால் தானாக ஒரு இயல்பு வந்து ஒட்டுது. அதை நாங்க பார்த்து அனுபவித்த மாதிரி நீங்களும் உணரமுடியும். கேமராமேன் பாலசுப்பிரமணியெம்மின் உழைப்பு ஃப்ரேமில் தெரியும். ‘நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்’னு சொல்வாங்க. நல்லாவே தொடங்கி முடிச்சிருக்கோம்.’’

கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!
கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!
கடவுளே சிரிக்கும் காமெடி காக்டெயில்!

``நீங்க மணிரத்னத்தின் அணுக்க சீடர் என்று சொல்றாங்களே...’’

‘‘நாங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறதில் அவருக்கு இணை கிடையாது. பர்சனல் விஷயங்களில் ஒருநாளும் தலையிட்டதோ, கேள்வி கேட்டதோ கிடையாது.

மூன்று நாள் சுஹாசினி மேடம் சீரியலில் நான் வேலை பார்த்துக்கிட்டு இருந்ததைப் பார்த்துவிட்டு ‘நீங்க என்கிட்ட சேர்ந்துக்கிறீங்களா’ன்னு சார் கேட்டபோது வானத்துக்கும் பூமிக்குமாகப் பறந்தேன். அப்புறம்தான் இவ்வளவு படங்களும், கூடவே கிடைச்ச மரியாதையும். இப்பவும் நான் நல்ல இயக்குநராக முயற்சி செய்கிறேன் என்றுதான் சொல்லிக்கிட்டே இருக்கேன். எல்லோருக்கும் மணிரத்னம் மாதிரி ஒரு உதவிக்கரம் கைகொடுக்குமான்னு ஏங்குவாங்க. எனக்கு அது தட்டில் வச்ச மாதிரி கிடைச்சதுதான் வரம்.’’