Published:Updated:

“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”

நித்தம் ஒரு வானம் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
நித்தம் ஒரு வானம் படத்தில்

மூணு பேரும் வெவ்வேறு நிலப்பரப்புல வளர்ந்தவங்க. ரீது வர்மா - பக்கா மாடர்னா துறுதுறுன்னு இருக்கிற, எதையும் டேக் இட் ஈஸின்னு எடுத்துக்கிற மாடர்ன் பொண்ணு.

“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”

மூணு பேரும் வெவ்வேறு நிலப்பரப்புல வளர்ந்தவங்க. ரீது வர்மா - பக்கா மாடர்னா துறுதுறுன்னு இருக்கிற, எதையும் டேக் இட் ஈஸின்னு எடுத்துக்கிற மாடர்ன் பொண்ணு.

Published:Updated:
நித்தம் ஒரு வானம் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
நித்தம் ஒரு வானம் படத்தில்

‘`எல்லோரும் ஏதோவொரு நம்பிக்கையில ஓடிக்கிட்டிருக்கோம். சிலருக்கு அந்த நம்பிக்கை அவங்களுக்குள்ளேயே இருக்கு. சிலருக்கு அந்த நம்பிக்கை எங்கிருந்தோ தேவைப்படுது. இப்போ இருக்கிற சூழல்ல யார்கிட்ட பேசினாலும் ‘எப்படி இருக்க’ன்னு கேட்டால், ‘ஏதோ இருக்கேன்’, ‘ஏதோ வண்டி ஓடுது’ன்னு சொல்றாங்க. இப்படி இருக்கிற சூழல்ல நம்பிக்கையை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. இந்தப் படம் பார்த்துட்டு வெளியே வர்றவங்களுக்கு, வாழ்க்கைமீது சின்னதா நம்பிக்கை வரணும். அதை நினைச்சு எழுதினதுதான், ‘நித்தம் ஒரு வானம்’ கதை’’ - நம்பிக்கையாகப் பேசத் தொடங்குகிறார், அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக்.

ரா.கார்த்திக்
ரா.கார்த்திக்

``அசோக் செல்வன் சமீபமா வெரைட்டியான கதாபாத்திரங்கள் பண்ணி கலக்கிட்டிருக்கார். இதுல அவருக்கு என்ன மாதிரியான கேரக்டர்?’’

‘‘அசோக் செல்வனுக்கு அர்ஜுன்ங்கிற கேரக்டர். யார்கிட்டேயும் பெருசா பேசிக்கமாட்டார். வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிற நபர். அப்படிப்பட்டவர் இந்தப் பயணம் முடியும்போது எப்படி மாறுகிறார், அவர் சந்திச்ச மனிதர்கள் அவருக்குள்ள எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துறாங்கங்கிறதுதான் படம். படத்துல அவருக்கு மூணு கெட்டப்புகள் இருக்கு. வெவ்வேறு காலகட்டத்துல வெவ்வேறு நிலத்துல நடக்கிற கதைகள். மூணு கெட்டப்னு இல்லாமல் மூணு கேரக்டர்னே சொல்லலாம். ஒவ்வொன்னுக்கும் வெவ்வேறு உடல் மொழி, பேச்சு வழக்கு, ஸ்டைல்னு கலக்கியிருக்கார்.’’

“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”
“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”
“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”

``ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகான்னு மூணு ஹீரோயின்கள் இருக்காங்களே!’’

‘‘ஆமா. மூணு பேரும் வெவ்வேறு நிலப்பரப்புல வளர்ந்தவங்க. ரீது வர்மா - பக்கா மாடர்னா துறுதுறுன்னு இருக்கிற, எதையும் டேக் இட் ஈஸின்னு எடுத்துக்கிற மாடர்ன் பொண்ணு. அபர்ணா - கிராமத்துல செம அட்ராசிட்டி பண்ணிக்கிட்டிருக்கிற ரகளையான பொண்ணு. சிவாத்மிகா - தான் உண்டு தன் படிப்பு உண்டுன்னு இருக்கிற காலேஜ் பொண்ணு. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க போர்ஷன்ல சூப்பரா பண்ணியிருக்காங்க. ஷிவதா சின்ன போர்ஷன்ல நடிச்சிருக்காங்க. அவங்க வர்ற காட்சிகள் ரொம்ப எமோஷனலா இருக்கும். இதுல வர்ற எல்லாப் பொண்ணுங்களும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரங்களா இருப்பாங்க. ஒரே கதையை ரெண்டரை மணி நேரம் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால, மூணு கதைகளை உள்ள வெச்சிருக்கேன். இந்த மூணுமே வாழ்க்கையைப் பத்தின வெவ்வேறு விஷயங்களைச் சொல்லும். தவிர, அழகம்பெருமாள் சார், காளி வெங்கட், அபிராமி மேம் முக்கியமான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க.’’

“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”
“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”
“இது நம்பிக்கையை விதைக்கும் கதை!”

``ஆண்டனி, ஜார்ஜ் சி வில்லியம்ஸ், கோபி சுந்தர்னு வித்தியாசமான காம்போவா இருக்கு. இது எப்படி சாத்தியமாச்சு?’’

‘‘இதுல வர்ற மூணு போர்ஷனுக்கும் வெவ்வேறு மாதிரியான பேட்டர்ன்ல ஒளிப்பதிவு இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதுக்குத் தகுந்த மாதிரி, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் படத்துக்குள்ள வந்தார். கொஞ்ச போர்ஷன் ஷூட் பண்ணி முடிச்சிருந்த சமயத்துல அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. அப்புறம் உள்ள வந்தவர்தான், விது அய்யன்னா. ‘ஓ மை கடவுளே’, ‘மண்டேலா’ படங்களுடைய ஒளிப்பதிவாளர். சூப்பரா பண்ணியிருக்கார். ஆண்டனி சார்தான் எடிட்டிங். படத்துடைய ரஷ் பார்த்துட்டு, போன் பண்ணிப் பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. பாடல் காட்சிகள்ல மனுஷன் வித்தை காட்டியிருக்கார். கோபி சுந்தர் இசை. எனக்கு ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’, ‘உஸ்தாத் ஹோட்டல்’ படங்கள்ல அவருடைய வொர்க் ரொம்பப் பிடிக்கும். சமீபமா, தெலுங்குல ‘இன்கேம் காவலே’ பாடல் செம வைரல். சரி, இவர்கிட்டேயே நம்ம படத்துக்கு மியூசிக் பண்ணக் கேட்டுப் பார்க்கலாம்னு கேட்டேன். ஜூம்ல கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போவே என்ன மாதிரி பாடல்கள் வேணும்னு கேட்டு வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார். நல்ல ஆல்பமா வந்திருக்கு. பிருந்தா மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணின லீனா இதுல கோரியோகிராபரா அறிமுகமாகுறாங்க. கிருத்திகா நெல்சன் இதுல வர்ற எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்காங்க.’’