Published:Updated:

“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”

ஐஸ்வர்யா முருகன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா முருகன் படத்தில்...

வயசும் மனசும் வாழ்க்கையோடு சண்டை போடுற பருவத்துல, ரசனையா லவ் லெட்டர் எழுதி ரணகளமா ஒரு ரத்தக்கையெழுத்து போடுவோமே!

“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”

வயசும் மனசும் வாழ்க்கையோடு சண்டை போடுற பருவத்துல, ரசனையா லவ் லெட்டர் எழுதி ரணகளமா ஒரு ரத்தக்கையெழுத்து போடுவோமே!

Published:Updated:
ஐஸ்வர்யா முருகன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா முருகன் படத்தில்...

ரொம்ப நாளாக என் மனசுல ஊறிக்கிடந்த கதை `ஐஸ்வர்யா முருகன்.' `கருப்பன்' படத்திற்குப் பிறகு நான் வேறொரு ஜானர்ல எடுக்கிற படம்.காலையில் பேப்பரைப் படிச்சா எப்போதும் தவறாமல் தென்படுகிற விஷயமா ஆணவக்கொலை இருக்குது. ஆணவக்கொலைக்குப் பின்னணியில் உள்ள நிஜங்களைக் கோத்துச் செய்த படம்தான் ‘ஐஸ்வர்யா முருகன்’.’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் பன்னீர்செல்வம். ‘ரேணிகுண்டா’ படத்தில் தன் பயணத்தைத் தொடங்கியவர்.

“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”

``ஆணவக்கொலை பற்றிய படம்னா ரொம்ப கவனம் எடுத்துச் செய்கிற வேலையாக இருக்கும். எப்படி வந்திருக்கு..?’’

‘`வயசும் மனசும் வாழ்க்கையோடு சண்டை போடுற பருவத்துல, ரசனையா லவ் லெட்டர் எழுதி ரணகளமா ஒரு ரத்தக்கையெழுத்து போடுவோமே! அப்ப அது பைத்தியக்காரத்தனம் தான். ஆனால் அதுதானே ஆகப்பெரிய அன்பு. அப்படி ஒரு முதல் காதலையும், வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க. ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் சிதைத்து எப்படித் துயரங்களை உண்டாக்குதுன்னு சொல்ற படமா இது வந்திருக்கு. இலைகளையும் கிளைகளையும் தாண்டி வேரோடு அசைத்துப் போடுகிற நிலைகளையும் இந்தப்படம் சொல்லுது. பெத்த பிள்ளைன்னு பார்க்காமல் இந்த வயசுல இப்படி வெறியெடுத்து வெட்டிக் கொல்றாங்கன்னா என்ன ஆச்சு இவங்களுக்கு? சொந்த ரத்தத்தை, பாலூட்டி வளர்த்த பிள்ளைக்கு இப்படிப் பாதகம் பண்றாங்கன்னா எங்கே தப்பு? இந்த அடுக்கடுக்கான கேள்விகள் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தைநோக்கி என்னை நகர்த்தியிருக்கு. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும்கூடப் போக வைக்கும். ஆனால், எப்படிப் பார்த்தாலும் மனுஷன் அன்புக்காக அலையுறதுதான் அறம். அப்படிப்பட்ட அன்பைக் கொன்றால் அதுதான் அழிக்க முடியாத அநீதின்னு சொல்லும் இந்தப் படம்.”

“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”

``எல்லோரும் புதுமுகமாக இருக்காங்க?’’

‘`ஆமா! ஹீரோ அருண் பன்னீர்செல்வம் என் மகன்தான். நான் வச்சிருந்த கதைக்கு ஹீரோ தேடப் போகலாம்னு கிளம்பினால் வீட்டுக்குள்ளே தட்டுப்பட்டது சட்டுனு உறைச்சது. ‘நடிக்கிறியாப்பா'ன்னு கேட்டதும், ‘எனக்கு அது தான்ப்பா இஷ்டம்... இதுவரைக்கும் உங்க கிட்டே சொல்ல பயந்துகிட்டிருந்தேன்’னு சொன்னான். தங்கமாகப்போச்சுன்னு ஹீரோவாகப் பொருத்திப் பார்த்தேன். பக்கத்து வீட்டு பையன் மாதிரி அருமையாகப் பொருந்திட்டான். கேரளாவைச் சேர்ந்த வித்யா பிள்ளைதான் ஹீரோயின். முதல் படம்னு கொஞ்சமும் ஞாபகப்படுத்தலை. ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, தெய்வேந்திரன், நாகேந்திரன்னு புதுமுகங்கள் ஆக்கிரமிப்பில் படம் வந்திருக்கு. பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் அர்ஜுன் ஜெனாதான் கேமரா. ‘ரேணிகுண்டா’விற்கு இசையமைத்த கணேஷ் ராகவேந்திராதான் இதற்கும்.”

“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”
“இது ஆணவக் கொலைக்கு எதிரான படம்!”

``ஆணவக்கொலை பற்றிப் பேசினால் சாதியரீதியாக எதிர்ப்பு கிளம்புமே?’’

``நான் இதில் எந்தச் சாதியையும் குறிப்பிடவில்லை. ஆனால் மக்களுக்கு எல்லாம் தெரியும். படைப்பாளிகளைவிட ரசிகர்கள் உயரம்னு நம்புறவன் நான். நாம் வெளியே என்ன பேசிக்கிட்டாலும் உள்ளே சாதிப்பற்று இருந்துகிட்டேதான் இருக்கு. சட்டத்தால் மட்டுமே சாதிவெறியை ஒழிச்சுட முடியாது. மனநிலையும் மாறணும். அதை ஐஸ்வர்யா முருகனில் சொல்லியிருக்கேன். சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமே கிடையாதுன்னு நம்புறேன். ‘ஐஸ்வர்யா முருகன்’ ஒரு நல்ல சினிமாவாக இருக்கும்.”

நம்பிக்கையுடன் முடிக்கிறார் பன்னீர்செல்வம்.