Published:Updated:

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்

உடன்பிறப்பே படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
உடன்பிறப்பே படத்தில்

ஜோ 50

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்

ஜோ 50

Published:Updated:
உடன்பிறப்பே படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
உடன்பிறப்பே படத்தில்
இரட்டை மூக்குத்தி, கோதுமை செயின், நெற்றிப்பொட்டு என ஜோதிகா இப்போது அப்படியே தஞ்சாவூர்த் தமிழச்சி! ‘உடன்பிறப்பே’ தலைப்பும், உடன்பிறப்பாகவே உருமாறி நிற்கும் ஜோதிகாவின் கெட்டப்பும் பட்டையைக் கிளப்புகின்றன. ஜோதிகாவின் 50-வது படத்தை இயக்கும் இரா.சரவணன், விகடன் வளர்ப்பு! ‘கத்துக்குட்டி’ படத்தில் கவனம் ஈர்த்தவர், ‘ஜோ-50’க்காகப் பேசுகிறார்…
“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்

“ஜோதிகாவின் 50-வது படம்… தயாரிப்பு சூர்யா… எப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு?”

“மனசுக்கு நெருக்கமான இந்தக் கதையோட சில காலம் அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். சில பேரைப் பார்த்த உடனே பல கதவுகள் திறக்கும்ல, அந்த மாதிரி 2டி ராஜசேகர் பாண்டியன் சாரைப் பார்த்தேன். அவர் தங்கதுரை சார்கிட்ட அனுப்பினார். ‘என்கிட்ட சொன்ன மாதிரி இந்தக் கதையை எடுத்திட்டீங்கன்னா, அடுத்த பாசமலர் இதுதான்’னு சொன்னார் தங்கதுரை. ரெண்டு மணி நேரம் கதை கேட்டுட்டு, ‘நாங்களே தயாரிக்கிறோம்’னு சூர்யா சாரை அழைச்சிட்டு வந்தாங்க ஜோதிகா மேடம். ‘சரவணனை எனக்கு நல்லாத் தெரியுமே’ என்றபடியே வந்து கைகொடுத்தார் சூர்யா சார். அந்தக் கைகளை அப்படியே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்…”

“ஜோதிகாவுக்கு இது 50-வது படம். உங்களுக்கு இது இரண்டாவது படம். பயமா இல்லையா?”

“எந்த பயமும் இல்ல. காரணம், இது அவங்களோட ஐம்பதாவது படம்னு எனக்கு அப்போ தெரியாது. ஷூட்டிங் முடிஞ்ச பிறகுதான் சொன்னாங்க. கதை கேட்ட உடனேயே இதை 50-வது படமா பண்ண அவங்க முடிவெடுத்திட்டாங்க. அந்த அளவுக்குக் கதை மேல அவங்களுக்கு நம்பிக்கை. கஜா புயல் அடிச்ச நேரத்துல சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் பரமுவும் மன்றத்தினரும் எங்க கிராமங்களுக்கு வந்தாங்க. ஒரு வீட்டு காலண்டர்ல மகாலெட்சுமியோட போட்டோ மேல ஜோதிகா படத்தை ஒட்டி வச்சிருந்தாங்க. அந்த அளவுக்கு கிராமங்களில் ஜோதிகாவை மரியாதையும் அன்புமா பார்க்கிறாங்க. அந்த அன்பை இந்தப் படம் பன்மடங்கா மாற்றும்னு நம்புறேன். நெஞ்சைப் பிழியிற வசனம் இல்ல, ஆனா பார்வையிலயும் தத்தளிப்புலயும் ஜோதிகா கலங்க வச்சிடுவாங்க. அந்த அளவுக்கு எங்க மண்ணோட மனுஷியா மாறி நிற்கிறாங்க!”

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்
சசிகுமார், சரவணன்
சசிகுமார், சரவணன்

“ஜோதிகாவை தஞ்சாவூர்ப் பெண்ணா மாற்ற சிரமப்பட்டீங்களா?”

“எந்த சிரமமும் இல்லை. பாசமா அதேநேரம் கம்பீரமா எங்க ஊரு பொண்ணுங்க மாதிரி வந்து நில்லுங்கன்னு ஸ்கெட்ச் பண்ணிக் காமிச்சோம். அவ்வளவுதான். மற்றபடி மேக்கப் தொடங்கி காஸ்ட்யூம்ஸ் வரை மெனக்கெட்டு கிராமத்துப் பெண்மணியா அவங்கதான் மாறி நின்னாங்க. கோதுமை செயின், பாரம்பர்யத் தோடு, சேலைன்னு பூர்ணிமா ராமசாமி ஆர்வமா பண்ணிக் கொடுத்தாங்க. முதல் நாள் படப்பிடிப்புக்கு ஜோதிகா வந்தப்ப கிராமத்து மக்களே அசந்துபோயிட்டாங்க.”

“படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார், சமுத்திரகனி, சூரி… மூணு பேருமே உங்களுக்கு ரொம்பப் பழக்கம்ல?”

“சமுத்திரகனி சார்கிட்ட மரியாதையான அன்பு. சூரி அண்ணன்கிட்ட சண்டை போட்டு சமாதானம் ஆகிற அளவுக்கு உரிமை. ஷூட்டிங் கிளம்புறப்பவே ரெண்டு பேருக்கும் சண்டை. பத்து நாள் பேசிக்கலை. சூரி அண்ணன் மனைவியும் என் மனைவியும் போன்லேயே போராடித்தான் மறுபடி சேர்த்து வச்சாங்க. ‘இவர் மாதிரி வாழணும்’னு நான் நினைக்கிற ஒரே ஆள் சசிகுமார் சார்தான்! கத்தியால குத்திட்டு ‘ஸாரி’ சொன்னாகூட ‘சரி விடுங்க’ன்னு சொல்ற வெள்ளந்தி மனுஷன். ஷூட்டிங் முடிஞ்சப்ப தங்க செயின் போட்டார்; பதறிட்டேன். டப்பிங்ல படம் பார்த்து, ‘உங்களை நம்பிப் பத்துப் படம்கூடத் தயாரிக்கலாம்’னு தட்டிக்கொடுத்தார்; கலங்கிட்டேன்!”

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்
“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்

“ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை இமான், எடிட்டிங் ரூபன்… கூட்டணி பலமா இருக்கே?”

“ ‘அசுரன்’ ஹிட் கொடுத்த கையோட இந்தப் படத்துக்கு வந்தார் வேல்ராஜ். சேர்த்து இழுத்துக்கிட்டு ஓடி பலரையும் ஜெயிக்க வைக்கிற மனுஷன். இமான் சார் இந்தப் படத்துக்கான வரம்… கொட்டுற அருவியில ஒரு குடம் தண்ணி பிடிக்கிற மாதிரிதான் அவர்கிட்ட பாட்டு வாங்குறது. இமான் சாரும் யுகபாரதி அண்ணனும் படத்துக்கு அவ்வளவு பக்க பலமா நிற்கிறாங்க. எடுத்த சீன்ல எதையும் எடிட் பண்ணாம, அதோட போக்கிலேயே விட்டு எடிட்டர் ரூபன் அற்புதம் பண்ணியிருக்கார்!”

“கத்துக்குட்டி முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு ஐந்து வருட இடைவெளி… ஏன்?”

“கத்துக்குட்டி பண்ணிட்டு நிறைய சிரமப்பட்டேன். போஸ்டர் ஒட்டுன நந்து அண்ணனுக்குக்கூட பாக்கி… கடனுக்கு பயந்து கொஞ்ச நாள் தலைமறைவு. கிடைச்ச வேலைகளைச் செஞ்சேன். சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். கல்யாணப் பத்திரிகை தொடங்கி விளம்பர அறிவிப்புகள் வரை யார் என்ன கேட்டாலும் எழுதிக் கொடுப்பேன். முக்கியமான அரசியல் தலைவருக்கு அறிக்கைகள் எழுதித் தரச்சொல்லிக்கூட அழைப்பு வந்தது. மனசுக்குப் பிடிக்காமல் மறுத்திட்டேன். அரசியல், சினிமான்னு நிறைய பிரபலங்கள் பழக்கம். ஆனாலும், தாஜ் ஹோட்டல்ல மீட்டிங்கை முடிச்சிட்டு 17 டி பஸ்ல ஏறி வர்ற வாழ்க்கை இருக்கே… அது வரம்!

இங்கே கதை சொல்லவே பெரிய போராட்டம். நண்பன் இசக்கி மூலமா உதயநிதி சார்கிட்ட கதை சொன்னேன். கைக்குலுக்கி, தேனாண்டாள் முரளி சார்கிட்ட அனுப்பினார். ‘மெர்சல்’ ரிலீஸ் பரபரப்பில் அந்த வாய்ப்பு கைநழுவிடுச்சு. அப்புறம் பல ஆபீஸ் ஏறி இறங்கினேன். ஒரு புது நிறுவனம் கதை கேட்டு ஆபீஸ் போட்டு, கடைசி நேரத்துல என்னைய விட்டுட்டு வேற படத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப அவமானமாப்போச்சு. வெறுத்துப்போய் வெளியே வந்தேன். தடுக்கி விழுந்த இடத்துல தங்கம் கிடைச்ச மாதிரி சூர்யா சார் கிடைச்சார்!”

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்
sharavana
“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்

“உடன்பிறப்பே பட ஷூட்டிங்கில்தானே தஞ்சைப் பெரிய கோயில் குறித்து ஜோதிகா பேசியது சர்ச்சையானது?”

“தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தப்போ, அங்கே கர்ப்பிணிகளும் பிரசவமான பெண்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தாங்க. முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது அவங்களை ரொம்ப அதிர வச்சிருச்சு. அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும்தான் அவங்க பேசினாங்க. பேச்சோடு நிற்கலை. அந்த மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதி கொடுத்தாங்க. அவங்க பேச்சு சர்ச்சையான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போ டீனாக இருந்த மருதுதுரை மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மருத்துவமனை வளாகத்தைச் சுத்தப்படுத்தினப்ப, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டுச்சு. புது வார்டு கட்டிக் கொடுத்தாங்க. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்…”

“இது பாசமலர் 2.0” - ‘உடன்பிறப்பே’ ரகசியம்
sharavana

“ஜோதிகாவும் சூர்யாவும் இந்த மாதிரி சமூக விஷயங்களில் ரொம்பவே அக்கறை காட்டுறாங்க… ஒருவேளை அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்குமோ?”

“அரசியலுக்கு வர்றதுன்னா என்ன… கட்சி தொடங்குறதும் கொடி பிடிக்கிறதும் ஓட்டு வாங்குறதுமா? ஓர் அரசு செய்யாததை, செய்யத் தயங்கியதை, ஒரு குரல் செய்ய வைக்குதுன்னா அதுதான் அரசியல்… திரும்பிப் பார்க்கப்படாமல் கிடந்த ஒரு மருத்துவமனைக்கு ஜோதிகா பேசிய பேச்சுக்குப் பின் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. சூர்யா பேசிய பிறகு புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான விழிப்புணர்வும் கருத்துப் பரிமாற்றமும் பெரிதானதை யாராலயும் மறுக்க முடியாது. நடிச்சமா போனோமான்னு அவர் இருந்திருக்கலாம். நீட் தொடங்கி ஒளிபரப்பு மசோதா வரைக்கும் இப்பவும் அவர் குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கு. கட்சி தொடங்குறதும் வாக்கு வாங்குறதும்தான் அரசியல்னா, பெரியார்ங்கிற பழுத்த கிழவன் இந்த மண்ணுல பண்ணிய மாற்றங்களுக்கு என்ன பேரு? அரசியலுக்கு வந்துதான் நல்லது பண்ணணும்னு கிடையாது. நல்லது பண்றதே பெரிய அரசியல்தான்!”