Published:Updated:

`அழகிய தீயே' நின்னுபோச்சு... அப்போ பிரகாஷ்ராஜ் என்ன சொன்னார் தெரியுமா? - மனம் திறக்கும் ராதா மோகன்

ராதாமோகன்

"பிரகாஷ்ராஜ் சார் `ஆசை', `கல்கி' படங்களை முடிச்சுட்டு `இருவர்' படத்துல நடிச்சிக்கிட்டு இருந்த நேரம் அது. `அவரோட நடிப்பைப் பார்த்தப்போ, இவர் பெரிய அளவுல வருவார்'னு எனக்குத் தோணுச்சு."

`அழகிய தீயே' நின்னுபோச்சு... அப்போ பிரகாஷ்ராஜ் என்ன சொன்னார் தெரியுமா? - மனம் திறக்கும் ராதா மோகன்

"பிரகாஷ்ராஜ் சார் `ஆசை', `கல்கி' படங்களை முடிச்சுட்டு `இருவர்' படத்துல நடிச்சிக்கிட்டு இருந்த நேரம் அது. `அவரோட நடிப்பைப் பார்த்தப்போ, இவர் பெரிய அளவுல வருவார்'னு எனக்குத் தோணுச்சு."

Published:Updated:
ராதாமோகன்

`அழகிய தீயே' தொடங்கி `காற்றின் மொழி' வரை தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு, வெற்றி தொல்வி பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பயணிப்பவர், இயக்குநர் ராதாமோகன். இவரது படங்கள் அதிக வன்முறைகள் இல்லாமல் வலிமையான வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்களைப் பேசும் சுபாவமுள்ளவை.

ராதாமோகன்
ராதாமோகன்

எளிய மனிதர்களின் பாத்திரமாக இருந்தாலும் சரி, பணம் படைத்தவர்களின் பாத்திரமாக இருந்தாலும் சரி, அவற்றின் இயல்பிலேயே பயணித்து தத்தம் முடிவுகளைத் தேடிக்கொள்வது இவரது படங்களில் நாம் காணும் சிறப்பம்சம். அவரிடம் 'பதற்றம், மனஅழுத்தம் நிறைந்த தருணங்களை எப்படி என்று கடந்தீர்கள்?' என்று கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் என்பது இப்போ பரவலா எல்லா இடங்களிலும் பேசப்படுது. ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம் முடிஞ்சு வேலை தேடும்போதுதான் கவலைன்னா என்ன, ஸ்ட்ரெஸ்னா என்னன்னு தெரியும். ஆனா, இப்போ பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட அதிகமா ஸ்ட்ரெஸ் இருக்கு. நான் படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைதான். லயோலா காலேஜ்ல படிச்சேன். மறைந்த ராமுசார்தான் எங்களுக்குத் தமிழாசிரியர். அவரை 'புரொபசர் ராமு'னு சொல்வாங்க.

ராதாமோகன்
ராதாமோகன்

சினிமா, அரசியல், இலக்கியம்னு எல்லா விஷயமும் அவருக்கு அத்துப்படி. தொண்ணூறுகளில் இருந்த பல பிரபலங்களுடனும் நெருங்கிப் பழகியவர். கமல்ஹாசன் சாருக்கு மிகவும் நெருக்கமானவர். கல்லூரி மாணவர்களின் மனசையும் நல்லா புரிஞ்சு வெச்சிருப்பார். கிளாஸுக்கு வந்தார்னா ஒரு மணி நேரத்துல அரை மணி நேரம் தமிழ்ப் பாடம், அடுத்த அரை மணி நேரம் விவாதம். அவர்கிட்ட என்ன சப்ஜெக்ட் பத்தி எந்தக் கேள்வியும் கேட்கலாம். நகைச்சுவையுடன் ஆழமா விளக்குவார். எங்களுக்கெல்லாம் பெரிய 'ஸ்ட்ரெஸ் பஸ்டரா' இருந்தார்.

காலேஜ் முடிச்ச பிறகு சினிமாதான்னு முடிவு பண்ணி, ஆர்.வி.உதயகுமார் சார்கிட்ட அசிஸ்டன்டா சேர்ந்தேன். அதுக்குப்பிறகு தனியா படம் பண்ணுன பெரும்பாலான முயற்சிகள் தோல்வியாதான் முடிஞ்சது. அந்த நாள்கள் ரொம்ப டென்ஷனாதான் இருந்துச்சு. ஆனாலும் சாயங்காலம் ஃப்ரெண்ட்ஸைச் சந்திச்சுப் பேசும்போது அந்த சோகத்தையே ரொம்ப நகைச்சுவையோட பகிர்ந்துக்குவோம். கவலையை ஜோக்கா மாத்தி சிரிக்கிற விஷயத்தை என்னுடைய முதல் படத்துல நிறைய வெச்சிருப்பேன்.

ராதாமோகன்
ராதாமோகன்

சினிமாவுல ஒவ்வொரு நாள், ஏன் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் முடிவுகள் மாறிக்கிட்டே இருக்கும். நிச்சயமில்லாத தன்மை மத்த துறைகளைவிட இதுல கொஞ்சம் அதிகமாவே இருக்கும். நாம நினைச்சது, திட்டமிட்டது எல்லாம் நடக்காமப் போறதுக்கு இங்க வாய்ப்பு அதிகம். அதனால என்னைப் பொறுத்தவரை நண்பர்கள்தான் மிகப்பெரிய 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்'. இயக்குநர் தரணி, ஆர்ட் டைரக்டர் ராஜானு எல்லாரும் சாயங்கால நேரம் தி.நகர், வடபழனினு எங்காவது ஒரு ஹோட்டல்ல சந்திச்சுப் பேசுவோம். மறுநாள் திரும்ப, 'தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன்' போல கிளம்பிப் போவோம்.

பிரகாஷ்ராஜ் சார் 'ஆசை', 'கல்கி' படங்களை முடிச்சுட்டு 'இருவர்' படத்துல நடிச்சிக்கிட்டு இருந்த நேரம் அது. 'அவரோட நடிப்பைப் பார்த்தப்போ, இவர் பெரிய அளவுல வருவார்'னு எனக்குத் தோணுச்சு. எனக்கு படம் பண்ணும் வாய்ப்பு கிடைச்சப்போ அவரை வெச்சுதான் முதல் படத்தைப் பண்ணினேன். ஆனா, அந்தப் படம் ரிலீசாகாமலே போயிடுச்சு. அதுக்கு அப்புறமா நாலு வருஷம் போராடித்தான் 'அழகிய தீயே' படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைச்சது.

ராதாமோகன்
ராதாமோகன்

இந்தப் படம்கூட சாதாரணமா வந்திடலே. கதையெல்லாம் சொல்லி, எல்லாம் ஓ.கே ஆன நிலையில தயாரிப்பாளர் 'இப்போ வேணாம்'னு சொல்லிட்டார். மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. தேவையில்லாம மனசு கஷ்டப்படுவாங்கனு இந்த விஷயத்தை வீட்டுலகூட சொல்லலை. அப்போ பிரகாஷ்ராஜ்சார் மும்பையில ஷூட்டிங்ல இருந்தார். அவர்கிட்டே சொன்னதும், `அதனால என்ன? கவலைப்படாதே நாமே அதைத் தயாரிப்போம்'னு சொன்னார். சொன்னமாதிரியே செஞ்சார். படமும் பெரிய அளவுல ஹிட்டாயிடுச்சு.

ஸ்ட்ரெஸ் தவிர்க்க முடியாதது. அதை நாம எதிர்கொள்ளத்தான் வேணும்; வேற வழி கிடையாது. குறிப்பா, நம்ம உடம்பை ஃபிட்டா வெச்சிக்கிறது முக்கியம். முன்னாடியெல்லாம் ஜிம்முக்குப் போவேன். இப்போ வாக்கிங் மட்டும்தான். ஆனா, அதை மிஸ் பண்ண மாட்டேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை, இப்போதான் சிறுதானியம், ஆர்கானிக்னு எல்லாரும் பேசுறாங்க. காலேஜ்ல படிக்கிற காலத்துலயே கேழ்வரகு கஞ்சிதான் என்னுடைய காலை உணவு. இதுதவிர, என்கிட்ட தமிழ், இந்தி, வெஸ்டர்னு 30 ஆயிரம் பாடல்கள் கலெக்ஷன் இருக்கு. அதையெல்லாம் விரும்பிக் கேட்பேன். புத்தகங்கள் படிக்கிறது எனக்கு சுவாசம் மாதிரி... அதை எப்பவும் நிறுத்தமாட்டேன்.

முன்னாடியெல்லாம் திட்டமிட்டபடி நடக்கலைனா கவலையா இருக்கும். இப்போ, 'சரி! அடுத்தது என்ன?'னு மனசு செயல்பட ஆரம்பிச்சிடுது. உண்மையில அதைத்தவிர வேற சிறந்த வழி எதுவுமில்லேனுதான் தோணுது'' என்கிறார் இயக்குநர் ராதாமோகன் மென்சிரிப்புடன்.