சினிமா
தொடர்கள்
Published:Updated:

இதில் நடிக்கும்போது பிரபுதேவா வெளியே போகவே முடியாது!

பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபுதேவா

எனக்கு குழந்தைகளுக்காகப் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாகவே இருந்தது. குழந்தைகளை வச்சு அவர்களுக்கான படம் செய்யறது சாதாரண வேலையில்லை.

``முதல் படம் `மஞ்சப்பை' உறவுகளின் பெருமையை, பிரச்னைகளைப் பேசியது. அடுத்ததாகச் செய்தது `கடம்பன்'னு ஆக்‌ஷன் டிராமா. இப்ப குழந்தைகளுக்கான ஃபேன்டஸி பொழுதுபோக்குப் படமாக `மை டியர் பூதம்' படத்தை எடுத்திருக்கேன்” என்றபடி ஆரம்பிக்கிறார், இயக்குநர் ராகவன்

“ `மை டியர் குட்டிச்சாத்தான்', `ராஜா சின்ன ரோஜா'ன்னு குழந்தைகளோடு சேர்ந்து ஹீரோ படம் இருக்குமே... அதுமாதிரியான படம். ஒரு பூதத்திற்கும் பத்து வயதுச் சிறுவனுக்கும் இருக்கிற உறவுதான் கதை. அவங்க இரண்டு பேருக்கும் என்ன உறவு, எப்படிச் சந்தித்தார்கள், சந்தித்த பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படிப் போனது, குட்டிப்பையனின் பிரச்னை என்ன, அதை பூதம் சரி பண்ணியதா, எப்படி என்ற கேள்விகளுக்கான சுவாரஸ்யமான விடைதான் `மை டியர் பூதம்.' ''

ராகவன்
ராகவன்
இதில் நடிக்கும்போது பிரபுதேவா வெளியே போகவே முடியாது!

``இந்த ஆக்‌ஷன், பேய்ப்படக் காலத்தில் நீங்கள் பூதம் பக்கம் போனது ஏன்?’’

``எனக்கு குழந்தைகளுக்காகப் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாகவே இருந்தது. குழந்தைகளை வச்சு அவர்களுக்கான படம் செய்யறது சாதாரண வேலையில்லை. நிறைய உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். நிஜமாகவே குழந்தைகளின் உலகத்திற்குள் பயணம் போகணும். பூதம் என்னும் ஃபேன்டஸி எப்போதுமே குழந்தைகளுக்குப் பிடிச்ச விஷயம்.

இந்தக் கதையை எழுதும்போதே மனதிற்கு வந்தது பிரபுதேவா சார்தான். அவரிடம் மூவ்மென்டிலும், பாவனைகளிலும் சின்னச் சின்ன சேட்டைகள் இருக்கும். என் புரொடியூசர் ரமேஷ்.பி சாரிடம் ஸ்கிரிப்டைக் கொடுத்ததும் அவரும் சொன்ன பெயர் பிரபுதேவாதான். மேக்கப் மட்டும் ஒன்றரை மணி நேரம் எடுக்கும். பளபளப்பாகவும் மூன்று கிலோ வெயிட் இருக்கிற உடையையும் போட்டு நடிக்கணும். குடுமி போன்ற முடியை பின்னாடி வைத்துக் கொண்டு வெளியில் எங்கும் செல்லமுடியாது. விழாக்களுக்கு சான்ஸே இல்லை. வீட்டிற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுமாக 45 நாள்கள் இருந்தார். திடீரென இரவு இரண்டு மணிக்குக்கூட போன் செய்து படத்தில் மெருகேற்றுகிற விஷயங்களைச் சொல்வார். ஏன் சிலர் ஜாம்பவான்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு வேலை பார்க்கும்போதுதான் உணர முடிகிறது. பத்து நாளில் உடம்பு இறுகி, கொஞ்சம் முகம் வடிந்து, மொட்டை போட்டு, முழு மேக்கப்போடு முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்தார். அதுதான் பிரபுதேவா. இந்தப் படம் கண்டிப்பாக அவரது கரியரில் ஸ்பெஷல்தான்.''

இதில் நடிக்கும்போது பிரபுதேவா வெளியே போகவே முடியாது!
இதில் நடிக்கும்போது பிரபுதேவா வெளியே போகவே முடியாது!

``அவருக்கு ஜோடி இருக்க முடியாதே..?’’

“ஆமாம். அவருக்கு ஜோடி இல்லை. அவரோடு இருக்கும் பையன் அஷ்வந்தின் தாயாக ரம்யா நம்பீசன் வருகிறார். `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் அசத்திய பையன்தான். பரம் புவனேஷ், சாத்விக், சக்தி, கேஷிதா மற்றும் யூடியூப்பில் கலக்கும் ஆலியாவும் நடிக்கிறார்கள். குழந்தைகளோடு படப்பிடிப்பில் கலந்துகொள்வது வித்தியாசமான அனுபவம். அவர்களின் போக்குக்கு ஏற்றபடிதான் படப்பிடிப்பை வைத்துக்கொள்ள வேண்டும். நாமும் அந்தச் சமயம் மறந்துபோன பால்யத்தை நினைவுபடுத்திக்கொள்ளலாம். பிரபுதேவாவும் அவர்களோடு குழந்தையாகவே திரிந்தார். படத்தில் ஒண்ணரை மணி நேரம் சி.ஜி ஒர்க் வருகிறது. படப்பிடிப்புக்குச் செலவானதற்கு இணையான செலவை இது எடுக்கும்.

இதில் நடிக்கும்போது பிரபுதேவா வெளியே போகவே முடியாது!

படத்தில் ஒரு கேமியோ ரோலில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமை ஒருவர் நடித்திருக்கிறார். யாருமே எதிர்பார்க்காத ஆச்சர்யமாக இருக்கும். உங்களின் ஆர்வம் புரிகிறது. வெள்ளித்திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். பூதத்திற்கான முன்கதை, குழந்தை அஷ்வந்திற்கான முன்கதைகளில் என இமான் இசை பிரமாதமாக வந்திருக்கிறது. யு.கே.செந்தில்குமார் கேமரா கதையோட கையைப் பிடிச்சு நடந்திருக்கு.

பாடுபட்டு எழுதின பூதத்தின் குணச்சித்திரத்தை, உணர்வை, பாசத்தை ஒரு நொடியில் கடத்திட்டு, ‘அடுத்து என்ன சொல்லு’ன்னு நிற்கிற பிரபுதேவா சாரை படப்பிடிப்பு முடிந்த பின்னாடியும் ரசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்தப் படம் வெற்றியடையும்போது அதை என் நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசாகக் கருதுவேன்.''