Published:Updated:

`` `சுறா' ஃப்ளாப் ஆக காரணம் அந்த டீம்!'' - இயக்குநர் ராஜ்குமார் #10YearsofSura

சுறா
சுறா

இன்றோடு சுறா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதால் படத்தின் இயக்குநர் ராஜ்குமாரிடம் பேசினேன்.

'சுறா'... சினிமா கேரியரில் விஜய்யாலும் விஜய் ரசிகர்களாலும் மறக்க முடியாத படம். காரணம் அது விஜய்யின் 50-வது படம். தியேட்டரில் சுமாராகவே ஓடியிருந்தாலும் டிவியில் பலமுறை ஒளிபரப்பப்பட்டு ரெகார்ட் அடித்தப்படம் 'சுறா'. இன்றோடு சுறா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதால் படத்தின் இயக்குநர் ராஜ்குமாரிடம் பேசினேன்.

எஸ்.பி.ராஜ்குமார்
எஸ்.பி.ராஜ்குமார்
``முதல்ல உங்ககிட்டலாம் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். 'சுறா' ரிலீஸ் டைம்ல பத்திரிகையாளர்கள்கிட்டலாம் பேச முடியாமப் போயிடுச்சு. இருந்தாலும் நீங்கலாம் 'சுறா' படத்துக்கு நல்ல விமர்சனங்கள் எழுதியிருந்தீங்க. ரொம்ப நன்றி."
இயக்குநர் ராஜ்குமார்
``பிரபாகரனை நல்லாவே தெரியும்... துல்கர் மனநிலை என்னன்னா?!'' - `வரனே அவஷ்யமுண்டு' இயக்குநர்

"விஜய் சாரை 'ரசிகன்' படத்துல இருந்தே எனக்கு நல்லா தெரியும். ஏன்னா, நான்தான் எஸ்.ஏ.சி சார் - விஜய் காம்பினேஷன் படங்களுக்கு காமெடி ட்ராக் ரைட்டர். 'ஒன்ஸ்மோர்', 'நெஞ்சிருக்கும் வரை' படங்களுக்கு நான் எழுதின காமெடி டிராக்கைத்தான் பயன்படுத்துனாங்க. இப்படித்தான் விஜய் சார் எனக்குப் பழக்கமானர். அந்த நேரத்துலயே எஸ்.ஏ.சி சார் 'நல்ல கதையிருந்தா சொல்லுங்க தம்பி'னு கேட்டார். அப்பதான் 'சுறா' படத்தோட கதையைச் சொன்னேன். சார்க்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, அப்ப எதுவும் மூவ் ஆகல. நானும் தனியா படம் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். அப்ப, என்னோட 'அழகர் மலை' படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருந்த நேரம். தயாரிப்பாளர் சங்கலி முருகன் சார்கிட்ட இருந்து போன் வந்தது. 'விஜய் சார்க்கு கதை சொல்லணும்'னு கூப்பிட்டாங்க. போய் நேர்ல பார்த்தேன். அப்பாகிட்ட சொன்னக் கதையைச் சொல்லச் சொன்னார். சொல்லி முடிச்சவுடனே விஜய் சார் ரொம்ப உற்சாகமாகிட்டார். 'இந்தப் படம்தான் என்னோட 50-வது படம்'னு சொன்னார். முதல்ல படத்துக்கான கதை, வசனம் எழுத மட்டும் சொல்லியிருந்தாங்க. நானும் இந்தப் படத்தோட கதையை டைரக்‌ஷன் பண்றதுக்காக சிலர்கிட்ட சொல்லியிருந்தேன். அந்த நேரத்துல விஜய் சார், 'நீங்களே படத்தை டைரக்‌ஷன் பண்ணிருங்க'னு சொன்னார். நகைசுவை நடிகர் வடிவேல் அண்ணாவும், 'நான் டைரக்‌ஷன் பண்ணா நல்லாயிருக்கும்'னு ஃபீல் பண்ணார்.

சுறா
சுறா

கொஞ்சமும் நான் எதிர்பாராத வாய்ப்பு. விஜய்க்கு இப்படியொரு படம் பண்ணுவேன்னு நான் கனவுலகூட நினைக்கல. விஜய்யோட பிரமாண்ட வளர்ச்சிக்கு அப்புறம் அவரை இந்தப் படத்துக்காகத்தான் சந்திச்சேன். அவர் பெரிய வெல்கம் எனக்குக் கொடுத்தார். ரொம்ப நம்பினார். விஜய் சொல்லித்தான் இது அவரோட 50 வது படம்னுகூட எனக்குத் தெரியும். மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு கொடுத்திருக்காங்கனு நானும் பெரிய சிரத்தையோட படத்தை டைரக்‌ஷன் பண்ணேன்.

படத்துக்கு முதல்ல 'கடல்', 'உரிமைக்குரல்', 'எங்க வீட்டுப் பிள்ளை'னு பேர் செலக்ட் பண்ணோம். 'எங்க வீட்டுப் பிள்ளை' டைட்டில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்தப் பெயரை விட்டுக்கொடுக்க அந்தத் தயாரிப்பு நிறுவனம் ரெடியா இல்லை. விஜய் சார்தான் படத்துக்கு 'சுறா'னு பேர் வைக்கலாம்னு சொன்னார். படத்தோட ஷூட்டிங் முழுக்கவும் முதல்ல கேரளாவுலதான் நடக்குறதா இருந்தது. ஆனா, அங்கே விஜய் சார்க்கு ரசிகர்கள் அதிகம். அதனால, ஷூட்டிங் சரியா நடத்த முடியாதுனு கொஞ்சம் மட்டும் கேரளாவுல ஷூட் பண்ணிட்டு. மிச்சத்தை பாண்டிச்சேரில செட் போட்டு எடுத்தோம். கிட்டத்தட்ட 115 நாள் வரைக்கும் ஷூட்டிங் நடந்தது.

இப்போகூட சமீபத்துல கேராளவுல 'சுறா' ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது.

படத்தோட காஸ்ட் அண்ட் க்ரூ உட்பட எல்லாமே என் சாய்ஸுக்கு விட்டுட்டாங்க. எதுலயும் விஜய் சாரோட தலையீடு இல்லை. சொல்லப்போனா ஒவ்வொரு காட்சியும் எடுத்ததுக்குப் பிறகு, 'இது சூப்பரா வந்திருக்கு. டயலாக்ஸ் நல்லாயிருக்கு'னு கேரவன்ல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பார் விஜய். ரொம்ப ஃப்ரெண்ட்லியான சூழல்ல படத்தோட ஷூட்டிங் நடந்துச்சு. அவரோட அண்ணன் மாதிரிதான் என்னை ட்ரீட் பண்ணார். படம் முதல்ல மலேசியாவுலதான் ரிலீஸ் ஆச்சு. நிறைய பேர் அங்க இருந்து போன் பண்ணி, 'நல்ல வரவேற்பு படத்துக்கு இருக்கு'னு பாராட்டினாங்க. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுனு தெரியல. நெகட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. விஜய் சார்க்கு எதிரா ஒரு பெரிய குரூப் அப்ப வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதுல என்னையும் சேர்த்து காலி பண்ணிட்டாங்க. படத்தை ஃப்ளாப்பாக்கணும்னே வேலைபார்த்தாங்க. படத்தோட தோல்விக்கு அந்த டீமும் ஒரு காரணம். சொல்லப்போனா தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் படம் பார்த்துட்டு 'ரொம்ப நல்லாயிருக்கு'னு சொன்னார். ஆனா, இப்படியொரு ரிசல்ட் வரும்னு யாருமே எதிர்பார்க்கல. சன் பிக்சர்ஸ்கூட படம் பார்க்காமலேயே படத்தை வாங்கி வெளியிட்டாங்க. நிறைய புரோமோஷன் பண்ணாங்க.

தேவ்
தேவ்
sinatphotography

விஜய் சார் படம் பார்த்துட்டு கட்டிப் பிடிச்சிக்கிட்டு, 'நல்லாயிருக்குணே'ன்னு சொன்னார். அவரைப் பொறுத்தவரைக்கும் படத்து மேல பெரிய நம்பிக்கை வெச்சிருந்தார். படம் தோல்வினு பேச்சு வந்தப்போ, 'விஜய் தலையீடு நிறைய இருந்திருக்கும்'னு கமென்ட்ஸ் வந்தது. ஆனா, அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. பெரிய சுதந்திரம் எனக்கு கொடுத்திருந்தார் விஜய் சார் என்பதுதான் உண்மை. என்னைவிட இந்தப் படத்தை அதிகமா கொண்டாடுனது விஜய் சார்தான். அவருக்கு எந்தளவுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்னு நினைக்குறப்போதான் கஷ்டமா இருக்கு. ஏன்னா, இது அவரோட 50வது படம். 'சாதாரண சின்ன இயக்குநர்கிட்ட படத்தை கொடுத்துட்டோமே'னு ஃபீல் பண்ணியிருக்கலாம்.

நினைச்ச மாதிரி படம் ஹிட் ஆகலையேன்னு வருத்தப்பட்டு இருக்கலாம். என்னோட ஏமாற்றத்தைவிட விஜய் சார் என்ன நினைப்பார்னு நினைக்கும்போதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு.
படத்தோட வில்லனா தெலுங்கு நடிகர் தேவ் நடிச்சிருந்தார். இவருக்குப் பதிலா பிரகாஷ்ராஜ், பசுபதி சார்னு யாராவது நடிச்சிருந்தா படம் ஓடியிருக்கும்னு நான் நம்புறேன்.
- இயக்குநர் ராஜ்குமார்
`ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை! இர்ஃபான் கானுக்கு அஞ்சலி #RIP

வில்லன் செலக்‌ஷன் தப்பா போயிருச்சு. விஜய் சார்க்கு சமமான வில்லனை படத்துல நடிக்க வெச்சிருக்கலாம். இது நான் பண்ணுன தப்பு. ஆனா, விஜய் சார் எந்தக் காரணமும் இதுவரைக்கும் சொன்னதில்லை. இந்தப் படம் ஹிட் ஆகியிருந்தா பெரிய பெரிய படங்கள் பண்ற வாய்ப்புகள் வந்திருக்கும். லைஃப் ஸ்டைல் கொஞ்சம் மாறியிருக்கும். சொல்லப்போனா எங்கப் படத்தோட ஷூட்டிங்கின்போது அஜித் சாரின் 'அசல்' படம் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டு இருந்தது. அப்போ அஜித் சார் எங்க ஸ்பாட்டுக்கு வந்தார். என்னை அஜித் சார்கிட்ட 'அண்ணா நிறைய கதை வெச்சிருக்கார். நல்லா படம் எடுக்குறார்'னு விஜய் சார் அறிமுகப்படுத்தினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்தப் படம் முடிச்சிட்டு அஜித் சார்க்கு ஒரு கதை பண்ணுவோம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, எல்லாம் கனவாவே போய்டுச்சு.'சுறா' பட ரிலீஸூக்குப் பிறகு நிறைய ஏமாற்றங்கள் கிடைச்சிருந்தாலும் 'திடீர்னு வந்த வாய்ப்பு வந்த வேகத்தில் போயிருச்சு'னு என்னை நானே தேத்திக்கிட்டேன்.

இதுக்கு அப்புறம் நான் எந்தப் பெரிய ஹீரோகிட்டயும் கதை சொல்லப் போகல. போனா என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு தெரியும். அதனால என் போக்குல படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அடுத்ததா ஆர்.கே சார்கூட படம் பண்ணலாம்னு இருக்கேன். தவிர, சன் டிவிக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கேன். 'சுறா' படத்தைப் பொறுத்தவரைக்கும் படம் தோல்வியைத் தழுவியிருந்தாலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைச்சிருச்சு. இன்னுமே சன் டிவி நிறுவனத்துல பேசுறப்போ, 'சேனலுக்கு இந்தப் படம் லாபம் கொடுத்திருக்கு. எப்போ படத்தை டிவி-ல போட்டாலும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருக்கு'னு சொல்றாங்க. படம் ஜெயிச்சிருந்தா நான்தான் பொறுப்புனு எப்படி காலரை தூக்கிட்டு சொல்லிருப்பேனோ அதேமாதிரி இந்த தோல்விக்கும் முழு பொறுப்பு நான்தான்.

சுறா
சுறா

இப்போ வரைக்கும் யாரைப் பார்த்தாலும், 'சுறா இப்படி போயிருச்சே'னு சொல்லித்தான் பேச ஆரம்பிக்கிறாங்க. இதை கேக்குறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும். எல்லோரும் ரசிக்கிற மாதிரியான ஒரு நல்ல படம் கொடுத்து இந்தப் பேரை நிச்சயம் மாத்திடுவேன்கிற நம்பிக்கை இருக்கு. இப்போ என் சொந்த ஊர்ல கொரோனா தடுப்பு பணிகள்ல இருக்கேன். நீங்களும் பத்திரமா இருங்க'' என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார்.

அடுத்த கட்டுரைக்கு