Published:Updated:

"ஃபேமிலி சென்டிமென்ட்னாலும் பேய் கேட்கறாங்க. பேய்னா மினிமம் கேரண்டி!"- `தில்லுக்கு துட்டு' ராம்பாலா

தில்லுக்கு துட்டு

"ஃபேமிலி சென்டிமென்ட் கதை ரெடி பண்ணினா கூட அதிலும் பேய் வருமானு கேட்குறாங்க... ஏன்னா, பேய்னா மினிமம் கேரண்டியா பாக்குறாங்க." - `தில்லுக்கு துட்டு' வெளியாகி 5 வருடங்களானது குறித்து இயக்குநர் ராம்பாலா.

"ஃபேமிலி சென்டிமென்ட்னாலும் பேய் கேட்கறாங்க. பேய்னா மினிமம் கேரண்டி!"- `தில்லுக்கு துட்டு' ராம்பாலா

"ஃபேமிலி சென்டிமென்ட் கதை ரெடி பண்ணினா கூட அதிலும் பேய் வருமானு கேட்குறாங்க... ஏன்னா, பேய்னா மினிமம் கேரண்டியா பாக்குறாங்க." - `தில்லுக்கு துட்டு' வெளியாகி 5 வருடங்களானது குறித்து இயக்குநர் ராம்பாலா.

Published:Updated:
தில்லுக்கு துட்டு
சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரின் கரியரில் ஒரு முக்கியமான படமான அமைந்த இதை 'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா இயக்கியிருந்தார். இதன் வெற்றியால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 'தில்லுக்கு துட்டு 2'வும் வெளியானது. தற்போது இயக்குநர் ராம்பாலா, சிவாவை வைத்து 'இடியட்' என்ற காமெடி பேய்ப் படத்தை இயக்கியுள்ளார். 'தில்லுக்கு துட்டு' குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...

"அடுத்தடுத்த படங்களுக்கான வேலை போயிட்டு இருக்கறதால ஏற்கெனவே இயக்கின படம் ரிலீஸாகி எத்தனை வருஷம் ஆச்சுனு கணக்கு வச்சுக்கறது இல்ல. இப்ப நீங்க சொல்லித்தான் 'தில்லுக்குத் துட்டு' வந்து அஞ்சு வருஷம் ஆச்சுனு தெரிஞ்சுக்க முடியுது. அதுக்காக உங்களுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்" குஷியாக ஆரம்பிக்கிறார் ராம்பாலா.

ராம்பாலா
ராம்பாலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எங்கிட்ட பலரும், 'இந்த கொரோனா டைம்ல வீட்ல எப்படிங்க தனியா இருந்தீங்க'னு கேட்பாங்க. நான் இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி பல மாசமா வேலையில்லாம வீட்ல தனியா இருந்திருக்கேன். அதனால இது புது விஷயமா தெரியல. ரெண்டாயிரத்துலேயே ஃபீல்டுக்கு வந்துட்டேன். இராமநாராயணன் சார், கே.பாக்யராஜ் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்திருக்கேன். அதன் பிறகு சினிமா தவிர்த்து வேண்டாத வேலைகள்னு சொல்வாங்களே... அப்படிப் பல வேலைகளைப் பாத்திருக்கேன். அதுக்குனு கள்ளக்கடத்தல், போதை வஸ்து கடத்தல் பண்ணியிருப்பேன்னு நினைச்சுக்காதீங்க. கிரியேட்டிக்குத் தொடர்பில்லாத வேலைகளில் இருந்தேன். அப்புறம்தான் 'லொள்ளு சபா' பண்ணினேன்.

அந்த டைம்ல எனக்கு விஜய் டிவி-யில் இருந்து மாச சம்பளம் வந்திட்டிருந்தது. அப்படியான சூழல்ல அங்கிருந்து வெளியே வந்து ஒரு படம் பண்ணும் முயற்சியில் இருந்தேன். படம் எதுவும் அமையல. அப்ப என் கூட இருந்த நண்பர்கள், 'சந்தானம்தான் நல்லா இருக்காரே அவர்கிட்ட பேச வேண்டியதுதானே'னு உசுப்பிவிட்டாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நானும் சந்தானம்கிட்ட பேசினேன். உடனே வரச் சொன்னார். அங்கேயே ஒரு லைனை உருவாக்கி, அதுக்கு நட்டு போல்ட்டெல்லாம் போட்டு ஒரு கதையைச் சொன்னேன். எல்லாருமே பேயைப் பார்த்து பயப்படுவாங்க. அப்படித்தான் ஹாரர் படங்களும் வந்திட்டிருந்தது. நாம பேயைக் கலாய்க்கறதை பண்ணுவோம்னு சொன்னேன். இப்படித்தான் 'தில்லுக்கு துட்டு' உருவாச்சு. ஒரு கதைனா ஒரு பேய் இருக்கும். அந்ப்த பேய் எல்லாரையும் பழிவாங்கும். அந்தப் பேய்க்கும் ஒரு கதை இருக்கும். நாம அரைச்ச மாவையே அரைக்காம, டெக்னிக்கலா கையில எடுப்போம்னு மேக்கிங்ல கவனம் செலுத்தினோம். அதோட வெற்றிதான் 'தில்லுக்கு துட்டு 2' உருவாகக் காரணம்.

தில்லுக்கு துட்டு 2
தில்லுக்கு துட்டு 2

சினிமால எல்லாமே ஒரு டீம் ஒர்க்தான். ஒரு காமெடி எழுதும் போது, ப்ளான் பண்ணி மண்டையை உடைச்சு எழுத மாட்டேன். ஒரு வரி தோணினா, அதை ஸ்பாட்ல இம்ப்ரூவ் பண்ணுவேன். அங்கே ஒருத்தன் உளறுறது இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமா அமையும். நான் ஒரு லூஸ் டெலிவரி கொடுத்ததால்தான் அவனால கவுன்டர் அடிக்க முடியுது. அதை அப்படியே மெருகேத்தின பிறகு படத்துல வச்சிடுவேன். உதாரணதுக்கு 'தில்லுக்குத் துட்டு 2'ல மொட்டை ராஜேந்திரனும் விபினும் உள்ளே வருவது... பேயை பயமுறுத்துவதுனு மட்டும்தான் சீன் பேப்பர்ல எழுதியிருந்தேன். ஆனா ஸ்பாட்டுக்கு போன பிறகு அங்கே உள்ள இடத்தைப் பார்த்ததும் இங்கே ஒளிஞ்சா எப்படிக் காமெடியா கொண்டு போகமுடியும்னு ஐடியாஸ் வந்திடும். படமா பார்க்கும் போது சீன்ல அவ்ளோ மேஜிக் நடந்திருக்கும்.

என்னோட மூணாவது படத்திலும் சந்தானம்தான் ஹீரோனு ரெடியானேன். ஆனா, அவர் பிஸியாகிட்டார். அதனால இப்ப சிவாவை வச்சு 'இடியட்' பண்ணியிருக்கேன். எந்த தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப் போனாலும், 'இந்தக் கதையில பேய் வருமா, பேயைக் கலாய்ப்பீங்களா?'னு தான் பேயை கேட்குறாங்க. ஃபேமிலி சென்டிமென்ட் கதை ரெடி பண்ணினா கூட அதிலும் பேய் வருமானு கேட்குறாங்க... ஏன்னா, பேய்னா மினிமம் கேரண்டியா பாக்குறாங்க. இன்னொரு விஷயம் ராம்பாலானா பேய்ப்படம்தான் பண்ணுவார்னு எதிர்பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்க!" - அதிரச் சிரிக்கிறார் ராம்பாலா.