Published:Updated:

சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!

குலுகுலு படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
குலுகுலு படத்தில்...

கதையைக் கேட்ட பத்தாவது நிமிஷத்துல இருந்து சிரிக்க ஆரம்பிச்சவர், சொல்லி முடிக்கறவரை சிரிச்சுக்கிட்டே இருந்தார்.

சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!

கதையைக் கேட்ட பத்தாவது நிமிஷத்துல இருந்து சிரிக்க ஆரம்பிச்சவர், சொல்லி முடிக்கறவரை சிரிச்சுக்கிட்டே இருந்தார்.

Published:Updated:
குலுகுலு படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
குலுகுலு படத்தில்...

கலர்ஃபுல்லாகக் குளுகுளுக்கிறார் ‘குலுகுலு' சந்தானம். ‘சபாபதி'யை அடுத்து கெட்டப் செட்டப்பை மாற்றி சிக்ஸர் அடிக்க வருகிறார். இந்த ‘குலுகுலு'வை அமலாபால் நடித்த ‘ஆடை' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ரைட்டராக மாறிவிட்ட ரத்னகுமாரிடம் பேசினோம். ‘‘ ‘ஆடை'க்குப் பிறகு சின்ன இடைவெளி ஆச்சு. ‘இவங்க கால்ஷீட் இருக்கு. அவங்க கால்ஷீட் இருக்கு... படம் பண்ணுங்க’ன்னு கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் பண்ணல. ஏன்னா, என்னை பாதிக்கற மாதிரி கதைகள் அமையல'' - பரபரவெனப் பேசுகிறார் ரத்னகுமார்.

சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!

``டைட்டிலே ஜில்லுனு இருக்கு... லாரி பேக் ட்ராப் வேற... இதென்ன ரோடு மூவியா..?’’

‘‘ இது பயணங்களை நேசிக்கறவனோட கதை. ரோடுகள்ல நேஷனல் பர்மிட் லாரி டிரைவர்களைப் பார்த்திருப்பீங்க. எங்கேயாவது பாலத்துக்குக் கீழேயே துணி காயப் போடுறது, சமைக்கிறதுன்னு அவங்க வாழ்க்கையே விநோதமா இருக்கும். வேறவேற மாநிலங்களைக் கடந்துகூட வந்திருப்பாங்க. அந்தப் பின்னணியில் உள்ள ஒருத்தரோட வாழ்க்கையை ஜனரஞ்சகமா சொல்லியிருக்கேன். ஹீரோவுக்கு அவங்க அம்மா வச்ச பெயர் ‘கூகுள்.' அதை அவங்க ‘குலுகுலு’ன்னு யதார்த்தமா சொல்ல, அதையே ஹீரோவும் பதார்த்தமா தன் பெயரா வச்சுக்குவார்.

சார்லி சாப்ளின் மத்தவங்கள சிரிக்க வைப்பார். ஆனா, சீரியஸான சமூக மெசேஜை சத்தமில்லாமல் சொல்வார். அப்படி ஒரு கேரக்டர்தான் குலுகுலு. அவர் பல மொழிகள் தெரிஞ்சவர். தமிழ்நாடு வந்தப்ப, இங்கே நம்ம ஊர்மீது காதலாகி கூடுதலா கொஞ்ச நாள்கள் இங்கே தங்கிடுவார். கூகுளில் தட்டினா நிறைய விஷயங்கள் சொல்லும். அந்த மாதிரி இவரும் தனது அனுபவத்துல இருந்து எதைக் கேட்டாலும் சொல்வார். இப்படி ஒருத்தர்கூட வெவ்வேறு லட்சியங்கள் கொண்டவர்கள் ஒண்ணா பயணிக்க நேருது. அந்த டிராவல்தான் படம்.

சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
ரத்னகுமார்
ரத்னகுமார்

சந்தானம் தவிர, அதுல்யா சந்திரா நடிக்கறாங்க. தமிழுக்கு இப்பத்தான் வந்திருக்காங்க. முன்னாடி மலையாளம், தெலுங்கில் நடிச்சிருக்காங்க. நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் மரியான், ‘கஜினி' வில்லன் பிரதீப் ராவத், ‘லொல்லு சபா’ மாறன், சேசு, பிபின், ஸ்டன்ட் தீனா இப்படி கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் சார் சந்தானம் சாருக்கும் நண்பர் என்பதால் கேட்ட லொகேஷன்களைக் கொடுத் திருக்கார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ஜாக்கி சார் கலை இயக்கம்னு ஸ்ட்ராங் டீம். எடிட்டிங்கை ‘விக்ரம்' பிலோமின் செய்திருக்கார்.

என் படங்கள்ல இப்பதான் ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் ஷூட் பண்றேன். இங்கே மிதிச்சா அங்கே போய் விழுவாங்கன்னு ஃபிரேம்ல ரெண்டு செகண்ட்ல வந்துட்டுப் போற காட்சிக்கு ரெண்டு மணி நேரம் எடுக்கும்னு இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன்.''

சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!
சந்தானத்தை தேடிய லோகேஷ் கனகராஜ்!

``என்ன சொல்றார் சந்தானம்? அவரது லுக்கே காமெடியா இருக்கே..?’’

‘‘சந்தானம் சார் மாதிரி பொறுப்பும் ரசனையுமா கதை கேட்கிறவரை நான் பார்த்ததில்லை. கதையைக் கேட்ட பத்தாவது நிமிஷத்துல இருந்து சிரிக்க ஆரம்பிச்சவர், சொல்லி முடிக்கறவரை சிரிச்சுக்கிட்டே இருந்தார். ‘இந்தப் படத்துல நான் இருக்கணும். இந்தக் கதைக்கு சந்தோஷ் நாராயணன் சார் இசைதான் கரெக்ட்டா இருக்கும்'னு சொன்னார். அவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கும்போது, ஒரு விஷயம் சொன்னார். ‘எந்த லுக் போட்டாலும் சரி, நான்தான் அந்த லுக்ல இருக்கேன்னு ஆடியன்ஸுக்குப் புரியணும்'னு சொன்னார். அப்படி ஒரு லுக்ல அவர் இருந்தப்ப லோகேஷ் கனகராஜ் என்னைப் பார்க்க வந்திருந்தார். சந்தானம் சாரை அவர் கவனிக்காமல் ‘சந்தானம் எங்கே?'ன்னு தேட, டீமே சிரிச்சுட்டோம். கடைசியில பட்டினம் ரஷீத் சார்தான் லுக்கை செட் பண்ணிக் கொடுத்தார்.

சந்தானம் சார் நிஜத்துல வேற மாதிரி மனுஷன். நாம பொறாமைப்படக்கூடிய அளவுக்கு ஹேப்பியா இருக்கிறவர். ஒரு காமெடியனா உச்சத்துல இருக்கும்போது ஒரே நாள்ல மூணு நாடுகளுக்குப் பறந்து பறந்து போய் நடிச்சவர் அவர். ‘ஒரு கட்டத்துல நாம எதுக்காக ஓடுறோம்னு நினைச்சப்பதான் அமைதி யானேன்’னு அவரே சொன்னார். அந்த அமைதி அவரை அழகாக்கியிருக்கு.''