Published:Updated:

“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு!”

ரவிமரியா
பிரீமியம் ஸ்டோரி
ரவிமரியா

ஆசை ஆசையாய்'ல முதல்ல நடிக்க வேண்டியவர் பிரசாந்த். அப்ப `நீ நான் காதல்'னு டைட்டில் வச்சிருந்தேன். பிரசாந்த் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்துவச்சிருந்தோம்

“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு!”

ஆசை ஆசையாய்'ல முதல்ல நடிக்க வேண்டியவர் பிரசாந்த். அப்ப `நீ நான் காதல்'னு டைட்டில் வச்சிருந்தேன். பிரசாந்த் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்துவச்சிருந்தோம்

Published:Updated:
ரவிமரியா
பிரீமியம் ஸ்டோரி
ரவிமரியா
இயக்குநராக இருந்து நடிகரானவர் ரவிமரியா. இயக்குநர் எழிலின் கண்பட்டு காமெடி வில்லனாக கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டிருக்கிறார். சமீபத்திய ‘இடியட்'டில் காமெடியில் கலக்கின மகிழ்வில் இருந்த ரவிமரியாவிடம் பேசினேன்.

``நீங்க இயக்குநராகி 20 வருஷம் ஆச்சு... சினிமாப் பயணம் எப்படி ஆரம்பித்தது?’’

“நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கல்லூரியில் ஒரு இலக்கிய அமைப்பு வச்சிருந்தோம். அங்கேதான் நண்பர் வசந்தபாலன் நட்பு கிடைச்சது. நாங்க ஒரே காலேஜ். அவர் பி.எஸ்ஸி தாவரவியல். நான் பி.காம். எங்களை இணைச்சது இலக்கியம்தான். எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்துட்டார் அவர். நான் முதுகலை டிகிரியையும் முடிச்சிட்டு சென்னை வந்தேன். இடையே அகில இந்திய வானொலியில அறிவிப்பாளரா இருந்திருக்கேன். இன்னிக்கு வாய்ஸ் மாடுலேஷன்ல நான் பெயர் வாங்குறதுக்கு அந்த அனுபவம்தான் காரணம். ஒரு உதவி இயக்குநரா காந்தி கிருஷ்ணா சார்கிட்ட `என்ஜீனியர்'ல சேர்ந்தேன். அந்தப் படம் ட்ராப் ஆகிடுச்சு. அதன்பிறகுதான் எஸ்.ஜே.சூர்யா சார்கிட்ட `குஷி'யில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். என் காலேஜ் லைஃப்ல என் திறமையை வசந்தபாலன் பார்த்ததால, `வெயில்'ல நடிக்க வச்சிட்டார். என் ஒரிஜினல் பெயர் ரவி. மனைவி பெயர் மரியா. நான் கும்பிடுற வேளாங்கண்ணி மாதாவையும் மரியான்னு ஜெபிப்பாங்க. என் பெயரோடு மரியாவையும் சேர்த்துக்கிட்டேன்.”

“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு!”

``உங்க முதல் படத்துல ஜீவாவை அறிமுகப்படுத்தினது எப்படி?’’

`` `ஆசை ஆசையாய்'ல முதல்ல நடிக்க வேண்டியவர் பிரசாந்த். அப்ப `நீ நான் காதல்'னு டைட்டில் வச்சிருந்தேன். பிரசாந்த் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்துவச்சிருந்தோம். அப்ப, `வின்னர்' பட ஷூட்டிங்கினால் கால்ல அடிபட்டு ட்ரீட்மென்ட்ல இருந்தார். பிரசாந்த் சாரும் கதையைக் கேட்டுட்டு, `தப்பா எடுத்துக்காதீங்க பிரதர், ஃபேமிலி சப்ஜெக்ட் பண்ணறதில்ல. ஆக்‌ஷன்ல போலாம்னு இருக்கேன். இப்ப ஹரி சார் இயக்கத்துல `தமிழ்'னு ஒரு படம் பண்றேன். தொடர்ந்து ஆக்‌ஷன் ரோல் பண்ண விரும்புறேன்’னு சொன்னார். அவரோட நேர்மையான பதில் பிடிச்சிருந்தது. சௌத்ரி சார்கிட்ட சொன்னதும், `அப்ப வேற ஹீரோ பாருங்க'ன்னார். அவர் ஆபீஸ்ல எனக்கு டிஸ்கஷன் பண்ண ஒரு அறை கொடுத்திருந்தாங்க. அங்கே ஜீவாவைப் பார்ப்பேன். அப்ப அவர் பெயர் அமர். அவர் வெளிநாடு போற ஐடியாவுல இருந்தார். அவர் யார்னு விசாரிச்சேன். `சௌத்ரி சார் பையன்'னு சொன்னாங்க. சௌத்ரிசார்கிட்ட ஹீரோ கிடைச்சிட்டார் சார்னு சொன்னேன். `யாருய்யா? எவ்ளோ சம்பளம் கேட்குறார்?'ன்னார். அப்புறம் ஜீவானதும், சௌத்ரி சாருக்கும் ஆச்சரியம்.”

“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு!”

``காமெடி ரோல்கள் பண்ணுவீங்கன்னு நினைச்சுப்பார்த்தீங்களா?’’

``இன்னிக்கு வில்லன்கள்ல நிறைய பேர் காமெடி பண்றாங்க. ஆனா, இதைத் தொடங்கி வச்ச பெருமை எழில் சாருக்கு உண்டு. வசந்தபாலனுக்குப் பிறகு என் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வச்சது எழில் சார்தான். வெறுமன வில்லனா நடிச்சிட்டு இருந்திருந்தா, இவ்வளவு பெரிய ரீச்ல இருந்திருக்க மாட்டேன். `மனம் கொத்திப் பறவை', `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', `தேசிங்கு ராஜா'ன்னு காமெடி வில்லனா ஆனதாலதான் இன்னிக்கு என்னைக் கொண்டாடுறாங்க. இதுக்காகவே எழில் சாருக்கு நன்றி சொல்லிக்கறேன். இயக்குநர் ஆகணும்னு வந்தேன். அந்த லட்சியம் இப்ப பாதை மாறி நடிகர் ஆகிட்டேன். சினிமாவை விட்டு எங்கேயும் போகக்கூடாதுங்கற லட்சியம் இப்ப வந்திடுச்சு. மறுபடியும் இப்ப வசந்தபாலன் கூப்பிட்டு, `நீங்க `வெயில்'ல பண்ணின மாதிரி ஒரு சீரியஸ் வில்லனா `ஜெயில்'ல பண்ணுங்க'ன்னார். பண்ணியிருக்கேன்.''

“இந்த கிருதாவுக்கு ஒரு காரணம் இருக்கு!”

``உங்க கிருதாவைப் பார்த்தா டெர்ரரா இருக்கே..?’’

‘‘இந்த கிருதாவுக்குப் பின்னாடி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு. வசந்தபாலன் என்னை `வெயில்'ல நடிகரா அறிமுகப்படுத்தும்போது, இப்படி கிருதா கெட்டப் கொண்டு வரவச்சார். அதுக்கப்புறம் வந்த படங்கள்ல ஒரு முரட்டுத்தன லுக்கிற்காக இந்த கிருதாவைத் தொடர வேண்டியதாகிடுச்சு. ஒரு கட்டத்துக்குப் பிறகு, என்னாலேயும் இந்த கிருதாவை விட முடியல. இதை எடுத்துட்டு என் முகத்தைக் கண்ணாடியில பார்த்தா, லுக்ல ஏதோ ஒண்ணை இழந்த ஃபீல் ஆகிடுது. கிருதா இல்லாமல் படப்பிடிப்பு போனா, அங்கே இருக்கறங்கவங்க, `எங்கே சார் உங்க கிருதா?'ன்னு நலம் விசாரிக்க ஆரம்பிச்சிடுறாங்க. இப்ப நடிக்கற ஒரு படத்துக்காக கிருதாவை கொஞ்சம் குறைச்சிருக்கேன்.''