Published:Updated:

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ரோஜாவின் மகள்! உண்மை என்ன?

அன்ஷுமாலிகா ( Sarpana B. )

'அன்ஷு மாலிகா ஹீரோயினாக அறிமுகமாகிறாரா? துருவ் விக்ரமுடன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?' என்ற கேள்விகளை இயக்குநர் ஆர்.கே செல்வமணியை தொடர்புகொண்டு கேட்டோம்.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ரோஜாவின் மகள்! உண்மை என்ன?

'அன்ஷு மாலிகா ஹீரோயினாக அறிமுகமாகிறாரா? துருவ் விக்ரமுடன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?' என்ற கேள்விகளை இயக்குநர் ஆர்.கே செல்வமணியை தொடர்புகொண்டு கேட்டோம்.

Published:Updated:
அன்ஷுமாலிகா ( Sarpana B. )

ஸ்டார் தம்பதியான ஆர்.கே செல்வமணி - ரோஜா மகள் அன்ஷுமாலிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் டாபிக். சினிமா ப்ளஸ் அரசியல் குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும் தனது திறமைக்காக இளம் வயதிலேயே ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளார் அன்ஷுமாலிகா. இந்த நிலையில், 'அன்ஷு மாலிகா ஹீரோயினாக அறிமுகமாகிறாரா? துருவ் விக்ரமுடன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?' என்ற கேள்விகளை இயக்குநர் ஆர்.கே செல்வமணியை தொடர்புகொண்டு கேட்டோம்.

விருதுகளுடன் அன்ஷுமாலிகா
விருதுகளுடன் அன்ஷுமாலிகா
Sarpana B.

``சிறுவயதிலிருந்தே மகள் அனுஷுமாலிகாதான், எப்போதும் கிளாஸ் டாப்பர். இதுவரை 500 விருதுகள் வரை வாங்கியிருக்கா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியிருக்கா, அப்படியொரு பெரிய படிப்பாளி. சயின்டிஸ்ட் ஆகவேண்டும் என்பதுதான் அன்ஷுவின் விருப்பம்; ஆசை எல்லாமே. எப்போதுமே இன்னோவேட்டிவாதான் பேசுவாள்; சிந்திப்பாள். மகள், மகன் மீது எங்கள் விருப்பத்தைத் திணிக்கும் பெற்றோராக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது. அப்படித் திணித்ததும் கிடையாது.

ஆர்.கே. செல்வமணி - ரோஜா குடும்பம்
ஆர்.கே. செல்வமணி - ரோஜா குடும்பம்

எல்லாமே பிள்ளைகளின் விருப்பம்தான். ப்ளஸ் டூ முடித்துவிட்டு அன்ஷுமாலிகா மேற்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்றதையும் நிறைவேற்றி வைத்தோம். தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க, அமெரிக்கா போயிருக்கா. இன்னும் நாலு வருஷம் அமெரிக்காலதான் இருப்பாள்.

அதனால, படத்துல நடிக்கப்போறா, இந்த ஹீரோவுக்கு ஹீரோயினா அறிமுகமாகப்போறா என்பதெல்லாமே வதந்திதான். எந்த செய்தியிலும் உண்மையே இல்லை" என்கிறவரிடம் 'நான்கு வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்க விருப்பப்பட்டால் ஓகேவா?' என்றோம், "நானும் எனது மனைவியும் சினிமாவில் இருந்தவர்கள்; இருப்பவர்கள். அப்படி, அவள் நடிக்க விருப்பப்பட்டால் நாங்கள் நடிக்க அனுமதிப்போம். ஆனால், இப்போதைக்கு அவளுக்கு நடிப்பதில் விருப்பமே இல்லை. படிப்பதில்தான் விருப்பம். அவளது கனவு சயின்டிஸ்ட்தான்" என்கிறார்.