Published:Updated:

``இல்லாததைத் தேடுகிறார் கமல்... ரஜினி வரமாட்டார்!'' - எஸ்.பி.ஜனநாதன் பேட்டி

"லாக்டௌன் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுருச்சு... சம்பாதிச்ச காசைக்கூட எடுத்துச் செலவு பண்ணமுடியாத நிலை... நண்பர்கள் செய்ற உதவியாலதான் நாள்கள் ஓடுது" என்னும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடனான பேட்டியிலிருந்து...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"விவசாயிகள் பிரச்னையைப் படமா எடுத்து சினிமாக்காரங்க லாபம் பார்த்திடறாங்கன்னு ஒரு குமுறல் இருக்கே?"

"என்னை மட்டும் வச்சு பதில் சொல்றேன். லாபம் சம்பாதிக்குறதுக்குன்னா என்னால வேற மாதிரி படங்கள் எடுக்கமுடியும். என் பூர்வீகம் தஞ்சை மாவட்டமா இருந்தாலும் சென்னையிலேயே வளர்ந்தவன். விவசாயத்தைப் பத்தி எதுவுமே தெரியாது. சின்ன வயசுல இருந்து நிறைய படங்கள் பாக்குறேன். சாதி, பங்காளிச்சண்டைன்னு நிறைய பிரச்னைகளை எடுக்கிறாங்க. விவசாயத்தைப் பத்தி ஒரு படமும் வரலே. விவசாயி கஷ்டப்படுறான்னு சில படங்கள் வந்துச்சு. சிலபேர் விவசாயிகளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. இதைத்தாண்டி பெரிசா எதுவும் பேசப்படலே. இப்போ நான் அதைச் செஞ்சிருக்கேன்.

காலையில இருந்து கரும்பு வெட்டுற விவசாயி, வேலை முடிச்சுட்டு உடம்பு வலியைப் போக்குறதுக்காக ஒரு குவார்டர் குடிக்கிறார். ஆனா, அது கரும்புல இருந்து எடுத்ததுன்னு அவருக்குத் தெரியலே. பருத்திக்கொட்டையில இருந்துதான் வனஸ்பதி வருதுன்னு ராஜபாளையத்துக்காரங்களுக்கே தெரியலே. உணவு மட்டுமல்ல... உலகத்துக்குமான எல்லா மூலப் பொருள்களும் கிராமத்துக்குள்ள இருந்துதான் வருது. ஆனா இதையெல்லாம் கொடுக்கிற விவசாயிக்கு என்ன கிடைக்குது? அந்தக் கேள்வியைத்தான் நான் 'லாபம்' படத்துல எழுப்புறேன்."

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

" 'வலதும் இல்லை, இடதும் இல்லை, மய்யம்'ன்னு கமல் சொல்றதையும், ரஜினி அரசியலுக்கு வரப்போறதா உலவும் பேச்சுகள் குறித்தும் உங்கள் கருத்து?"

"மய்யம்னு ஒண்ணு கிடையவே கிடையாது. இல்லாததைத் தேடுற வேலை எப்போதும் நடந்துகிட்டே இருக்கும். அதைத்தான் கமல் இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கார். ரஜினியைப் பொறுத்தவரை கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டார். அவரைத் தேவையில்லாமல் இழுக்கிறாங்க. இங்கே நடந்துட்டு இருக்குற எல்லாமே சந்தைக்கான வணிகம். அவரோட குரலுக்கு வீச்சு அதிகம்கிறதால் அவரைப் பயன்படுத்திக்கப் பார்க்குறாங்க."

> " 'புறம்போக்கு (எ) பொதுவுடைமை'க்குப் பிறகு அஞ்சு வருஷமா அமைதி... `லாபம்' ஸ்கிரிப்டுக்காகத்தானா?"

"விஜய் சேதுபதி எப்படி கதைக்குள்ள வந்தார்?"

"ஜனநாதன் படத்துல ஸ்ருதிஹாசன்னு சொல்றப்பவே சின்ன ஆச்சர்யம் வருதே?"

"டிரைலர்லயே வசனங்கள் தெறிக்குது. படத்துல நிறைய குறியீடுகள் இருக்கும் போலிருக்கே?"

"திரைப்படம் மூலமா மாற்றத்தை உருவாக்கமுடியும்னு நம்புறீங்களா?''

"கிரண்பேடி முதல் அண்ணாமலை வரை ஐ.பி.எஸ் அதிகாரிகளெல்லாம் அரசியலுக்கு வந்துக்கிட்டி ருக்காங்க... எப்படிப் பார்க்கிறீங்க?"

"பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் எடுக்கக்கூடிய படங்களையும் சாதியப் படங்கள்னு முத்திரை குத்தப்படுறதை கம்யூனிச சிந்தனையாளரா எப்படிப் பார்க்கிறீங்க?"

- எப்போதும் பூடகமில்லாமல், வெளிப் படையாக இயல்பாகப் பேசக்கூடியவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். உரையாடல் எங்கிருந்து தொடங்கினாலும் சினிமா, அரசியல், சமூகம், பொருளாதாரம், தத்துவம் எனப் பரந்துபட்ட எல்லைகளைத் தொட்டே நிறைவடையும். மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களுடன் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது!" https://bit.ly/35k1jTT

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு