Published:Updated:

`` `பகவதி' படம் பண்றதுல விஜய்க்கு உடன்பாடே இல்லை..!'' - எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

`அவள் ஒரு பச்சை குழந்தை' படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 69 படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது இப்போ அந்தப் பொண்ணு ஃபீல் பண்ணும்!'' - ஐஷ்வர்யா ராஜேஷ்

இப்போது ஜெய், அதுல்யா ரவி, வைபவி ஆகியோரை வைத்து `கேப்மாரி' படத்தை இயக்கிவருகிறார். இந்த வயதிலும் இயக்குநராக பிஸியாக இருப்பவரை ஓர் ஓய்வு நேரத்தில் சந்தித்தேன்.

உங்களது ஆஸ்தான நடிகர் விஜயகாந்த்துக்கு இன்று பிறந்தநாள்; அவரைப் பற்றி..?

``தொழிலைத் தாண்டி எங்க குடும்பத்துக்கும் விஜய்காந்த் ரொம்ப நெருக்கம். விஜய் நடிச்ச முதல் படம் `நாளைய தீர்ப்பு' சரியா போகலை. அதனால அவருடைய அடுத்த படம் பெரிய ஹீரோக்கூட இருந்தால் சரியா இருக்கும்னு நினைச்சு விஜயகாந்த்கிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன். `உங்களை பார்க்கணும். அரை மணி நேரத்துல வீட்டுக்கு வர்றேன்'னு சொல்லிட்டு குளிக்கப் போயிட்டேன். குளிச்சிட்டு வெளியே வந்தா, என் பெட்ரூம்ல உட்காந்திருக்கார், விஜய்காந்த். `நீங்க ஏன் சார் என்னைப் பார்க்க வந்துக்கிட்டு, நான்தான் உங்களைத் தேடி வரணும். என்ன சார் சொல்லுங்க?'னு கேட்டார். `விஜய் நடிக்க ஆசைப்படுறார். முதல் படம் சரியா போகலை. அதான் உங்ககூட நடிச்சா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்'னு சொன்னேன். `எப்போ வரணும், எங்கே வரணும்'னு மட்டும் சொல்லுங்க சார்' என்றார். நான் சம்பளம், கதைனு ஆரம்பிச்சேன். `அதெல்லாம் வேண்டாம் சார். தம்பிக்காகதானே இந்தப் படம் பண்றோம். அப்புறம் என்ன? எப்போனு சொல்லுங்க நான் வந்திடுறேன்'னு சொன்னார். படத்துலயும் விஜய்க்கு பர்ஃபார்ம் பண்ண இடம் கொடுத்தார். மத்த ஹீரோக்கள்லாம் இதை பண்ணுவாங்களானு தெரியாது. விஜய் வளரணும்னு விஜயகாந்த்துக்கு ரொம்ப ஆசை.’’

`` ‘பிகில்’ல 100 நாள் விஜய் சார்க்கூட நடிச்சேன்; அடுத்து ‘பொன்னியின் செல்வன்'..!’’ - நடிகர் ஆத்மா

உங்கள் மனைவிக்குள் இருந்த இயக்குநரை எப்படி வெளியில் கொண்டு வந்தீங்க..?

S.A.Chandrasekar - Shobha
S.A.Chandrasekar - Shobha

``நான் எழுதின `நண்பர்கள்' படம் ரொம்ப சாஃப்டா இருந்தது. நீ டைரக்ட் பண்ணு'னு என் மனைவி ஷோபாகிட்ட சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப தயக்கமா இருந்தது. `நான் உனக்கு அசோஸியேட் டைரக்டரா வொர்க் பண்றேன்'னு சொல்லி எடுத்தோம். ஷங்கர் உதவி இயக்குநரா இருந்த கடைசி படம் இதுதான். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அப்புறம், `இன்னிசை மழை' படம் பண்ணோம். அது சரியா போகலை. என்னுடைய நிறைய படங்கள்ல `கதை - ஷோபா'னுதான் வரும். நான் மட்டும் பாப்புலரா இருக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. நான் பாப்புலராக எனக்கு உறுதுணையா இருக்கிற என் மனைவியும் வெளியே தெரியணும்னு நினைச்சேன். அமிதாப் பச்சன் நடிச்ச `சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் இந்தி ரீமேக்ல கதைனு அவங்க பெயர்தான் வரும். என்னை நம்பி வந்து எனக்காகவே இருந்தாங்க, என் மனைவி. அவங்களுக்கான விஷயங்களுக்கு மதிப்புக்கொடுத்து அதை நிறைவேத்தணும். அதுல ஒண்ணு இசை. அவங்கள இயக்குநராக்கி பார்க்கணும்னுதான் `நண்பர்கள்' பண்ணோம். என்னோட 69 படங்கள்ல அதிக நாள்கள் ஓடுனது என் மனைவி இயக்கிய `நண்பர்கள்'தான். அவங்க ஜெயிச்சுட்டாங்கன்னு எனக்கு ரொம்பப் பெருமை. நான் அப்போ இருந்து இப்போ வரைக்கும் வேலை முடிச்சு வீட்டுக்கு வரும்போது என் மனைவி இருக்கணும். இது நான் அவங்ககிட்ட வைக்கிற ரெக்வெஸ்ட். அவங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டு இப்போ வர சரியா செஞ்சுக்கிட்டிருக்காங்க. அவங்க முகத்தை பார்த்தா எல்லா டென்ஷனும் போயிடும்.''

ஒரு இயக்குநரா விஜய்யின் சேஞ்ச் ஓவர் பற்றி..?

``முதல் படத்துல அவரை ரொம்ப சீரியஸா நடிக்க வெச்சது தப்புனு பின்னாடிதான் தெரிஞ்சது. ரெண்டாவது படத்துல இருந்து அவர் கேரக்டருக்கு ஹியூமர் சேர்க்க ஆரம்பிச்சேன். அது `காதலுக்கு மரியாதை', `பூவே உனக்காக', `துள்ளாத மனமும் துள்ளும்'னு அடுத்தடுத்த படங்களில் அவருக்கு ஹியூமர் இருந்தது. அப்புறம்தான் மக்களுக்கு விருப்பமானார். அடுத்த பரிணாமத்துக்குப் போகணும்னா, நாட்டுல நடக்கிற தவறுகளை தட்டிக் கேட்கிறவன்தான் ஹீரோ. அது தொடர்பான படங்கள் பண்ண ஆரம்பிச்சார். ஆக்‌ஷன்ல டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு நினைச்சது `பகவதி'. அதை பண்றதுல அவருக்கு உடன்பாடே இல்லை. ஆனா, அது வொர்க் அவுட் ஆகியிருச்சு. விஜய்க்கு முதல் பத்து படங்களுக்கு நான் வழிகாட்டியா இருந்தேன். அப்புறம் அவரே தனியா நிக்க ஆரம்பிச்சுட்டார். முதல்ல நான்தான் கதை கேட்பேன்; அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து கதை கேட்போம். இப்ப அவர் படம் ரிலீஸானாதான் என்ன கதைனே எனக்குத் தெரியும்.’’

பிரச்னையினு வந்தா அஜித், விஜய் ஒண்ணு சேர்ந்திடுவாங்க- சிற்றரசு

விஜய்யின் அரசியல் எண்ட்ரி எப்போ..?

S.A.Chandrasekar - Vijay
S.A.Chandrasekar - Vijay

``அரசியல் பத்தி நான் பேசலை. பொதுவா, தன்னுடைய மகனுக்கு புகழ் கிடைச்சுக்கிட்டே இருக்கணும்னுதான் எல்லா அம்மா அப்பாவும் ஆசைப்படுவாங்க. என் மகன் இன்னும் வளர்ந்துக்கிட்டே இருக்கணும்; மக்கள் அன்பு அவருக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கணும்னு ஒரு அப்பாவா நான் ஆசைப்படுறேன்"

தல - தளபதி ரசிகர்களின் சண்டையை எப்படிப் பார்க்கிறீங்க..?

``இது நல்லதல்ல. நீங்க சொல்ற தலயும் தளபதியும் நெருங்கிய நண்பர்கள். இவங்க அவங்க வீட்டுக்குப் போவாங்க. அவங்க இவங்க வீட்டுக்கு வருவாங்க. எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து இந்த பிரச்னை இருக்கு. ஒரு நடிகரை பிடிச்சதுனா, அவங்களை கடவுளா பார்க்கிற மாநிலம் தமிழ்நாடும், ஆந்திராவும். தனக்கு பிடிச்ச நடிகரை யாராவது தவறா பேசினா அவங்களால தாங்கிக்க முடியலை. அந்த உணர்வுலதான் இப்படி நடந்துக்கிறாங்க. ஆனால், இது தேவையில்லங்கிறது என் கருத்து. என் மனைவிக்கு அஜித்தை ரொம்பப் பிடிக்கும். `ராஜாவின் பார்வையிலே' படத்துல விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும்போது, என் மனைவிதான் அவருக்கு சாப்பாடு கொடுப்பார். அஜித் படம் வந்தால் முதல் நாள் முதல் ஷோ பார்த்திடுவார். சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்த்துட்டு, என்கிட்ட சூப்பரா இருக்குனு சொன்னார். அப்புறம் நான் போய்ப் பார்த்தேன். அந்தப் படத்துல அவர் இமேஜை எல்லாம் மறந்துட்டு சமூகத்துக்காக இந்தப் படத்துல நடிச்சிருக்கார். அஜித் பண்ண மாதிரி ஒவ்வொரு நடிகர்களும் வாழ்நாள்ல இப்படியொரு முயற்சி பண்ணணும்.’’

``அரசியல் சாயம் வந்திடுமோனு அஜித் யோசிச்சிருப்பார்..!’’ - ரங்கராஜ் பாண்டே

`விஸ்வாசம்' படம் பார்த்துட்டு ரொம்ப எமோஷனாகிட்டிங்கன்னு கேள்விப்பட்டோமே..?

Viswasam
Viswasam

``நான் ஒரு இயக்குநரா படம் பார்க்கமாட்டேன். தியேட்டருக்குப் போனால் ஆடியன்ஸ் மனநிலையிலதான் இருப்பேன். எந்தப் படம் பார்த்தாலும் அந்தக் கதைக்குள்ள போயிடுவேன். அது மாதிரி `விஸ்வாசம்' படம் பார்த்து ரொம்ப எமோஷனாகி அழுதுட்டேன். அப்பா - மகள் உறவை ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க. எனக்கு என் மகள் வித்யா ஞாபகம் வந்திடுச்சு. என் மகளை நினைச்சு ரொம்ப அழுதுட்டேன். படம் பார்க்குறவங்களை சிரிக்கவைக்கிறது ஈஸி. ஆனா, அழ வைக்கிறது ரொம்பக் கஷ்டம். இந்தப் படத்தை பார்த்துட்டு நிறைய பேர் கண்கலங்கிட்டாங்க.’’

அடுத்த கட்டுரைக்கு