Published:Updated:

கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!

ஆர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா

ஹீரோ – ஹீரோயினுக்குள்ள காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.

கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!

ஹீரோ – ஹீரோயினுக்குள்ள காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.

Published:Updated:
ஆர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா
``கொரோனாவால் இப்போ சினிமா எப்படி முடங்கிக்கிடக்கோ இதே மாதிரிதான் போன வருஷம் சினிமா ஸ்டிரைக் நடக்கும்போதும் கோலிவுட் முடங்குச்சு.

அதனால என் படம் ‘டிக் டிக் டிக்’ ரிலீஸாக லேட்டாச்சு. அப்போ எழுதுன கதைதான் டெடி. ‘டிக் டிக் டிக்’ முடிச்சதுக்கு அப்புறம் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண வாய்ப்பு வந்தும், அதைப் பண்ணாமல் இந்தக் கதை மேல இருந்த நம்பிக்கையினால இதைப் பண்ணியிருக்கேன்...’’ - என நம்பிக்கையோடு பேச ஆரம்பித்தார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்.

ஆர்யா - சாயிஷா
ஆர்யா - சாயிஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“டெடியோட கேரக்டரைப் பற்றிச் சொல்லுங்க?”

“இந்த கேரக்டர்தான் முக்கியமானது. அதனாலதான் படத்துக்கே ‘டெடி’னு பெயர் வச்சிருக்கோம். டெக்னிக்கலாகவும் ரொம்பவே நல்லா வந்திருக்கு. ‘கோச்சடையான்’ படத்துக்கு அப்புறம் மோஷன் கேப்சர் டெக்னாலஜியைப் பயன்படுத்திருக்கோம். ஆனால், சி.ஜி வொர்க் முழுக்க சாலிகிராமத்துக்குள்ளேயே பண்ணியாச்சு. இதுவரைக்கும் நான் எடுத்த படங்களுக்கு, ‘ஹாலிவுட் விஷயங்களை வெச்சு தமிழ்ப்படம் பண்ணியிருக்காங்க; சி.ஜி நல்லா பண்ணியிருக்காங்க’ன்னுதான் விமர்சனங்கள் வந்திருக்கு. நான் எழுதிய திரைக்கதையைப் பற்றிப் பலரும் சொன்னதேயில்லை. அந்தக் குறை இந்தப் படம் மூலம் தீர்ந்திடும்னு நம்புறேன். நான் திண்டுக்கல் மாவட்டத்துல பாச்சலூர்ங்கிற கிராமத்தில் பிறந்தவன். அங்க இருந்து நான் வந்ததால, என் படங்களில் ஜாம்பி களைப் பற்றிச் சொன்னாலும், விண்வெளியைப் பற்றிச் சொன்னாலும் எல்லாருக்கும் புரியுற மாதிரி எளிமையா சொல்லணும்னு நினைப்பேன். அதுக்கு ஏற்ற மாதிரியான திரைக்கதை அமைக்கிறதுதான் எனக்கான சவால். அதை நான் பண்ணிட்டேன்னா, ஷூட்டிங் பண்ணுறதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸியான விஷயம். டக் டக்குனு முடிச்சிடுவேன்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆர்யா - சாயிஷா திருமணத்துக்கு அப்புறம் சேர்ந்து நடிக்கிற முதல் படம் இது. அவங்களுக்கு இது எவ்வளவு ஸ்பெஷலா இருக்கும்.?”

“படத்துல பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், ஹீரோ – ஹீரோயினுக்குள்ள காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். அதுக்கு ஒரு ரியல் ஜோடி நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் ஆர்யா, – சாயிஷாவுக்குக் கதை சொன்னேன். கதை சொல்லும்போது, அவங்க லவ்வர்ஸ்தான். ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ கணவன் -–மனைவி. எனக்கு வசதியா இருந்துச்சு. சில பேர், ‘ஆர்யா– சாயிஷா கல்யாணத்துக்கு அப்புறம் சேர்ந்து நடிக்கிற முதல் படம், ஆனா படத்தோட ஃபர்ஸ்ட் லுக்ல சாயிஷா இல்ல; ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘என் இனிய தனிமையே’ன்னு இருக்கு; டீசர்லேயும் ஒரு ஷாட்லதான் சாயிஷா வர்றாங்க. அவங்களுக்கு லவ் போர்ஷன் இருக்கா’ன்னு டவுட்டா கேட்கிறாங்க. படத்துல லவ் போர்ஷன்ஸ் நிறைய இருக்கு. அதான் ஹைலைட். எல்லாமே செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு. சாயிஷாவோட சினிமா கரியரில் இது முக்கியமான படமா இருக்கும்.”

கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!
கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!

“இயக்குநர் மகிழ் திருமேனியை எப்படி நடிக்க வெச்சீங்க?”

“கதை எழுதி முடிச்சதும், வில்லன் கேரக்டருக்கு மகிழ் சாரைக் கேட்கலாம்னு போன் பண்ணினப்போ, ‘என்னை நடிக்க வைக்க செல்வராகவன் சார், கெளதம் மேனன் சார் ரெண்டு பேருமே கேட்டாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும் நான் கதை கேட்க வரேன். ஏன்னா நீங்க எனக்கு பிரதர் மாதிரி’ன்னு சொல்லிட்டுத்தான் கதை கேட்கவே வந்தார். எனக்கு செம பயம். ஏன்னா, செல்வராகவன் சார், கெளதம் மேனன் சார்கிட்டேயும் மகிழ் சார் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கார். அவங்களுக்கே நோ சொன்னவர், எப்படி நம்ம படத்துக்கு ஓகே சொல்லுவார்னு பயமா இருந்துச்சு. என் ஃபிரெண்டுக்குக் கதை சொல்ற மாதிரி, கேஷுவலா சொன்னேன். கேட்டதும், ‘நான் பண்றேன்’னு சொல்லிட்டார். எனக்கு செம சந்தோஷம். மகிழ் சார் நடிக்கும்போது செட்டு ரொம்ப ஜாலியா இருக்கும். ஆர்யாவும் மகிழ் சாரோட ‘மீகாமன்’ நடிச்சதால, அவங்களுக்கும் நல்ல பழக்கம் இருந்துச்சு. நான் ஆர்யாகிட்ட கதை சொன்னப்போ அவர் பேச்சிலர்; ஷூட்டிங்கிற்கு வரும்போது கல்யாணம் ஆன ஆண். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கரியர் மேல ஆர்யாவுக்கு ஃபோகஸ் அதிகமாகிடுச்சு. மகிழ் சாரும் இதை நோட் பண்ணிச் சொன்னார்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!

“தொடர்ந்து மூன்றாவது முறையாக டி.இமான் - மதன் கார்க்கியோடு வொர்க் பண்ண என்ன காரணம்?”

“ரெண்டு பேருக்குமே எனக்கு என்ன வேணும்னு தெளிவா தெரியும். மதன் கார்க்கி பாடல்கள் எழுதும்போது, நான் எப்படி அதை விஷூவல் பண்ணுவேன்னு நினைச்சு எழுதுறாரோ, அதை அப்படியே விஷூவல் பண்ணியிருப்பேன். அந்த அளவுக்கு எங்களுக்குள்ள புரிதல் இருக்கு. கார்க்கிக்கு நான் முழுக்கதையையும் சொல்லிடுவேன். அதில் எங்கெங்கே பாடல்கள் வரணும்னும் சொல்லிடுவேன். இந்தப் படத்தோட கதையை நான் சொல்லி முடிச்சதும் அவர் எழுதிக்கொடுத்த முதல் பாட்டு, ‘என் இனிய தனிமையே’தான். உலகம் இப்ப இருக்கிற தனிமைப்படுத்தலுக்கு ஏற்ற பாடல். இமானும் இப்படித்தான். என் படத்தோட பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் தனியா நாள்கள் ஒதுக்கி வெச்சிடுவார். பொறுமையா அவரோட பெஸ்ட்டைத் தருவார். நானும் அவர் வேலை பார்க்கிறதுக்கு ஏதுவா நேரத்தைப் பிரிச்சுக் கொடுப்பேன். இப்படி பேலன்ஸா வொர்க் பண்ணுறதனாலதான், எங்க காம்போ தொடருது.”

கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்!
ஆர்யா, சக்தி செளந்தர் ராஜன்
ஆர்யா, சக்தி செளந்தர் ராஜன்

“தமிழின் முதல் ஜாம்பி படம்; முதல் ஸ்பேஸ் படம்; இப்போ டெடி பியர் பொம்மை நடிக்கும் படம்னு உங்க படங்களில் ஒரு புதுமையான விஷயம் இருக்கணும்னு மெனக்கெடுறது உங்களுக்கு பிரஷரா இருக்கா..?”

“குடும்பத்தோடு டூர் போகப்போறோம்னா எங்கே போகலாம்னு கிட்டத்தட்ட ரெண்டு வாரம் யோசிச்சு ஒரு இடத்தை செலக்ட் பண்ணுவோம். ஏன்னா, அங்கே போய் அந்த இடம் நமக்குப் பிடிக்கலைன்னா ஹாலிடேஸ் வேஸ்ட்டாகிடும்னு நினைப்போம். அதே மாதிரி குடும்பத்தோடு டின்னர் போகணும்னாலும் எங்கே சாப்பாடு நல்லா இருக்கும்னு ஃபுட் ரிவியூ பார்த்துட்டுப் போறோம். டின்னர் சரியில்லைன்னா பணம் வேஸ்ட்டாகிடும்னு பார்த்து, பார்த்துப் பண்றோம். அந்த மாதிரிதான் ஒரு இயக்குநருக்குப் படம். அந்த ஒரு படத்தில்தான் அந்த இயக்குநர் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் பயணிக்கப்போறார். அந்த மாதிரியான ஒரு கதைக்காக இஷ்டப்பட்டு மெனக்கெடும்போது, அது எப்படி பிரஷரா தெரியும்? ரெண்டு வருஷம் வேலை பார்க்க வைக்கிற மாதிரியான ஒரு கதையை நான் தேடுறேன். அது கிடைச்சதும் படம் பண்ண ஆரம்பிப்பேன். இப்படிப் பண்ணுறதனாலதான், நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷமாகியும் அஞ்சு படங்கள் மட்டுமே பண்ணியிருக்கிறேன். இதை நான் பிடிச்சுதான் பண்ணுறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism