Published:Updated:

``நானே காலை உடைச்சுக்கிறேன், காதுல அடி வாங்குறேன், காதலையும் இழக்குறேன்னார் அந்த ஹீரோ!'' #10YearsOfNaadodigal

நாடோடிகள்

`` `நாடோடிகள்' படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆச்சுனு நினைச்சா, ஆச்சர்யமா இருக்கு. நாள்கள் வேகமா ஓடுது. நாமும் அதுக்குச் சமமா ஓடணும். இந்த வருடத்துல இன்னொரு ஸ்பெஷல், `நாடோடிகள் 2' ரிலீஸுக்கு ரெடியா இருக்கிறதுதான்!" மகிழ்ச்சியாகப் பேசுகிறார், சமுத்திரக்கனி.

``நானே காலை உடைச்சுக்கிறேன், காதுல அடி வாங்குறேன், காதலையும் இழக்குறேன்னார் அந்த ஹீரோ!'' #10YearsOfNaadodigal

`` `நாடோடிகள்' படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆச்சுனு நினைச்சா, ஆச்சர்யமா இருக்கு. நாள்கள் வேகமா ஓடுது. நாமும் அதுக்குச் சமமா ஓடணும். இந்த வருடத்துல இன்னொரு ஸ்பெஷல், `நாடோடிகள் 2' ரிலீஸுக்கு ரெடியா இருக்கிறதுதான்!" மகிழ்ச்சியாகப் பேசுகிறார், சமுத்திரக்கனி.

Published:Updated:
நாடோடிகள்

`` `உன்னைச் சரணடைந்தேன்' கதையும், `நாடோடிகள்' கதையும் என்கிட்ட 2003-ம் ஆண்டே இருந்தது. தயாரிப்பாளர் சரண்கிட்ட ரெண்டு கதையையும் சொன்னேன். அவர் `உன்னைச் சரணடைந்தேன்' கதையை டிக் அடிச்சார். ஆனா, மிகப்பெரிய வெற்றி `நாடோடிகள்' கதையில்தான் இருந்திருக்கு. என்னோட முதல் படத்தை முடிச்சுட்டு `நாடோடிகள்' கதையை எடுக்கலாம்னு எல்லோர்கிட்டேயும் கதையைச் சொன்னேன். யாருமே இந்தக் கதையைப் படமா எடுக்கத் தயாரா இல்லை.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

கிட்டத்தட்ட ஆறு வருடம் போராட்டத்துக்குப் பிறகுதான், `நாடோடிகள்' வந்தது. படத்துக்கு முதல்ல `நாடகம்'னு டைட்டில் வெச்சிருந்தேன். ஷூட்டிங் போனப்பதான் ராவான ஒரு டைட்டிலை வைக்கலாம்னு தோணுச்சு. நான் கவிதையாதான் டைட்டிலை யோசிப்பேன். அமீர் சார்கூட வேலை பார்த்த பிறகு அந்த நினைப்பு மாறி, `நிமிர்ந்து நில்' `தொண்டன்'னு டைட்டில் வைக்க ஆரம்பிச்சேன். ஆனா, `நாடகம்'ங்கிற தலைப்புக்கு வேறொரு கதை வெச்சிருக்கேன். அதுவும் சீக்கிரம் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மனிதனுக்கு மட்டும் தலையெழுத்து கிடையாது. ஒவ்வொரு கதைக்கும் தலையெழுத்து இருக்கு. ஒரு நல்ல கதை அதற்கான ஆள்களை அதுவே தேடி எடுக்கும்னு சொல்வாங்க.
சமுத்திரக்கனி

`நாடோடிகள்' கதையைக் கேட்ட ஒரு ஹீரோ, `நானே காலை உடைச்சுக்கிறேன், நானே காதுல அடி வாங்குறேன், நானே காதலையும் இழக்குறேன்'னு மூணு ரோலையும் ஒருத்தரே பண்றதா சொன்னார். ஆனா, இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு இதை மிஸ் பண்ணவங்க எல்லோரும் என்கிட்ட `கதையைச் சொல்லுங்க, படம் பண்ணலாம்'னு பேசுனாங்க. மனிதனுக்கு மட்டும் தலையெழுத்து கிடையாது. ஒவ்வொரு கதைக்கும் தலையெழுத்து இருக்கு. ஒரு நல்ல கதை அதற்கான ஆள்களை அதுவே தேடி எடுக்கும்னு சொல்வாங்க. அப்படி `நாடோடிகள்' கதை தேர்ந்தெடுத்துக்கிட்ட நபர், சசிகுமார். காத்திருந்து, காத்திருந்து சசிகுமார்கிட்ட போன கதை அது." என்றவர், தொடர்ந்தார்.

Naadodigal
Naadodigal

`` `சுப்ரமணியபுரம்' பட வேலைகள் போய்க்கிட்டிருந்தப்போ இந்தக் கதையைப் பலபேர்கிட்ட சொல்லி நான் சோர்வாகிப் போயிருந்தேன். சசி கேட்டார். `என்கிட்ட கதையைச் சொல்லமாட்டீங்களா'னு உட்கார்ந்தார். `யார் எது சொன்னாலும் மாத்த வேண்டாம். இதை இப்படியே படமா எடுப்போம். நானே தயாரிக்கிறேன்'னு சொன்னார். `ஒரு ஹீரோ இருக்கார். அவர்கிட்ட கதையைச் சொல்லுங்க'னு சொன்னார். அவர்கிட்ட போனா, `மூணு படத்துல கமிட் ஆகியிருக்கேன். மாசத்துல பத்து நாள் மட்டும்தான் கால்ஷீட் தருவேன்'னு சொன்னார். நான் சசிகிட்ட வந்து, `நீ நடிக்கிறியா'னு வந்து நின்னேன். சரினு இறங்கிட்டார்.

அதேமாதிரி, `சென்னை 28' பார்க்கும்போதே விஜய் வசந்த் என் மனசுல பதிஞ்சுட்டார். அவர்மேல நான் பெரிய கண்ணு வெச்சிருந்தேன். பரணி என்னோட ஒரிஜினல் கேரக்டர் மாதிரியே இருப்பான். அவனுடைய ஹேர் ஸ்டைல், டிரெஸிங் எல்லாம் என்னை மாதிரியே இருக்கும். என்னை அப்படியே அவன்மூலமா பிரதிபலிச்சிருப்பேன்.

சசிகுமார்
சசிகுமார்

அபிநயா கமிட் ஆனதும் ரொம்ப சுவாரஸ்யமான ஒண்ணு. விஜய் வசந்துக்கு ஜோடியா மும்பை பொண்ணு ஒருத்தவங்களைக் கமிட் பண்ணியிருந்தேன். அந்தப் பொண்ணு, 'சசிகுமாருக்குத்தான் ஜோடியா நடிப்பேன்னு சொன்னாங்க. 'சரி, கெளம்புங்க'னு அனுப்பி வெச்சுட்டு, ஆடிஷனுக்கு வந்த அபிநயாவோட போட்டோவைப் பார்த்தோம். அவங்க வாய் பேசமுடியாதவங்கனு தெரிஞ்சு, அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னோம். ரொம்ப அழகா, நல்ல எனர்ஜியோடு வந்தாங்க. படத்துல கமிட் பண்ணிட்டேன். அபிநயாவுக்கு இருக்கிற பிரச்னை ஷூட்டிங் ஸ்பாட்ல யாருக்கும் தெரியாது. எனக்கு, சசிகுமார், கேமராமேன் மூணுபேருக்கு மட்டும்தான் தெரியும். ரிலீஸுக்குப் பிறகுதான், 'இப்படியொரு பிரச்னை படத்தோட ரெண்டு ஹீரோயின்ஸ்ல ஒருத்தருக்கு இருக்கு, யாருக்குனு கண்டுபிடிங்க'னு சொன்னேன். அந்தளவுக்குத் திறமையா நடிச்சாங்க, அபி.

கதை, 'நாடோடிகள்' படத்துக்கு ரொம்பவே ஸ்பெஷல். நானும் ஒரு சிவ பக்தன். அதனால, 'சம்போ சிவ சம்போ' பாட்டு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இப்படிப் பல பாசிட்டிவ் வைப்ரேஷன், இப்போ உருவாகியிருக்கிற 'நாடோடிகள் 2' படத்திலும் இருக்கு. இதோட நிற்காது. 'நாடோடிகள் 3, 4, 5'னு வரிசையா வரும். எல்லாக் கதையையும் சசிகுமார்கிட்ட சொல்லிட்டேன்.

``நானே காலை உடைச்சுக்கிறேன், காதுல அடி வாங்குறேன், காதலையும் இழக்குறேன்னார் அந்த ஹீரோ!'' #10YearsOfNaadodigal

'நாடோடிகள்' படத்துக்கு முன்னாடி சினிமாவுல நான் வாங்குன அடி பெருசு. அதனால, தமிழ்ல மட்டும் இந்த வெற்றி போதாதுனு 'நாடோடிகள்' படத்தைத் தெலுங்கிலும் ரீமேக் பண்ணேன். அங்கேயும் செம ஹிட். இப்போ, இன்னும் அந்த வெற்றி போதமாட்டேங்குது. அதுக்குத்தான் இந்த ஓட்டம்!" என்கிறார், சமுத்திரக்கனி.

வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்ட 'நாடோடிகள்' படத்துக்கும் அதன் படக்குழுவுக்கும் நாமும் வாழ்த்துகள் சொல்வோம்!