Published:Updated:

`` `சத்தமில்லாத தனிமை கேட்டேன்' பாட்டை மூச்சுவிடாம பாடணும்னு எஸ்.பி.பி சார்கிட்ட சொன்னதும்..."- சரண்

சத்தமில்லாத தனிமை

'''மண்ணில் இந்தக் காதலன்றி' மாதிரி ட்ரை பண்ணலாம்னு நினைச்சோம். அதுவும், இந்தப் பாட்டுல சரணம் மட்டுமே மூச்சு விடமா பாடியிருப்பார். ஆனா, 'சத்தமில்லாத தனிமை' கேட்டேன் பாடல் முழுக்க ஒரே மூச்சில் பாடிக் கொடுத்தார்.''

`` `சத்தமில்லாத தனிமை கேட்டேன்' பாட்டை மூச்சுவிடாம பாடணும்னு எஸ்.பி.பி சார்கிட்ட சொன்னதும்..."- சரண்

'''மண்ணில் இந்தக் காதலன்றி' மாதிரி ட்ரை பண்ணலாம்னு நினைச்சோம். அதுவும், இந்தப் பாட்டுல சரணம் மட்டுமே மூச்சு விடமா பாடியிருப்பார். ஆனா, 'சத்தமில்லாத தனிமை' கேட்டேன் பாடல் முழுக்க ஒரே மூச்சில் பாடிக் கொடுத்தார்.''

Published:Updated:
சத்தமில்லாத தனிமை

எஸ்.பி.பி குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சரண். ''கே.பி. சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே எஸ்.பி.பி சார் பழக்கம். பாட்டு ரெக்கார்டிங்கின்போது எஸ்.பி.பி சார்கூட எப்பவும் இருப்பேன். வைரமுத்து வரிகளை சொல்ல சொல்ல சார் எழுதிக்குவார். சாரோட பக்கத்துல இருந்து இந்த வேலையெல்லாம் செய்யும் போது பெரிய பிரமிப்பா இருக்கும். சொல்லப்போனா, இரவு முழுக்க தூக்கமே வராது. 'பெரிய லெஜண்ட் பக்கத்துலயா உட்கார்ந்துட்டு வந்தோம்'னு இரவு முழுக்க நினைச்சிக்கிட்டே இருப்பேன்.

இயக்குநர் சரண்
இயக்குநர் சரண்

'சிகரம்' படத்துல அனந்து சார்க்கு உதவி இயக்குநரா வேலைப் பார்த்தேன். கவிதாலயா பேனர்ஸ்ல உருவான படம். இந்தப் படத்துல நடிச்சிட்டு, இசையும் அமைச்சு கொடுத்தார் எஸ்.பி.பி. இந்தப் படம் நேரத்துல க்ளாப் போர்ட் அடிப்பேன். எஸ்.பி.பி சார் நடிக்குற படத்துல க்ளாப் போர்ட் அடிச்சது நினைச்சு சந்தோஷப்படுவேன். தவிர, சாரே மியூசிக் டைரக்டராவும் இருந்ததனால ரெக்கார்டிங்கின்போது எப்பவும் பக்கத்துலயே நின்னுட்டு இருப்பேன். 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே', 'இதோ இதோ என் பல்லவி' பாட்டெல்லாம் பாக்குறப்போ எவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இவர்னு ஃபீல் ஆகும். எல்லாத்தையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் படத்துக்கு ரேடியோ விளம்பரங்கள் பண்ணோம். இது என்னோட பொறுப்புக்கு கீழே வந்துச்சு. வார வாரம் இதுக்காக சிறப்பு நிகழ்ச்சி பண்ணோம். ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சிட்டு சாரோட வாய்ஸூக்காக காத்துட்டு இருப்பேன். ரொம்ப பிஸியா இருப்பார். எந்த ஸ்டுடியோவுல என்ன பாட்டு பாடிக்கிட்டு இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிஸி. அவரோட மேனேஜர் மூலமா எஸ்.பி.பி சாரை பிடிச்சிட்டு முன்னாடி போய் நிற்பேன். இரவு எவ்வளவு நேரமானாலும் ஸ்க்ரிப்ட் பேப்பர் வாங்கி பேசி ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்துட்டுதான் போவார். கொஞ்சமும் சலிப்பு இருக்காது. தட்டிகொடுத்து, 'ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க'னு உற்சாகப்படுத்துவார்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

என்னோட முதல் படம் 'காதல் மன்னன்' டைரக்‌ஷன் பண்ணும் போது, 'உன்னை பார்த்த பின்பு' பாட்டு பாடிக் கொடுத்தார். படம் ரிலீஸூக்கு முன்பே பாட்டு செம ஹிட்டாகிருச்சு. இந்தப் பாட்டு ரெக்கார்டிங் போதுதான், 'என் பெயர் சரவணனை சுருக்கி சரண்'னு வெச்சிருக்கேன்னு சொன்னேன். 'இந்தப் பேரை என்னால எப்படி மறக்க முடியும். ஏன்னா, என்னோட பையன் பேராச்சே'னு சொன்னார். காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனேன். இதுக்கு பிறகு, 'அமர்க்களம்' படத்துக்காக 'சத்தமில்லாத தனிமை' பாட்டு பாடிக் கொடுத்தார்.

இந்தப் பாட்டை 'மண்ணில் இன்றி இந்த காதலின்றி' மாதிரி ட்ரை பண்ணலாம்னு நினைச்சோம். அதுவும், இந்தப் பாட்டுல சரணம் மட்டுமே மூச்சு விடமா பாடியிருப்பார். ஆனா, 'சத்தமில்லாத தனிமை' கேட்டேன் பாடல் முழுக்க ஒரே மூச்சுல பாடிக் கொடுத்தார். மியூசிக் டைரக்டர் பரத்வாஜ் மற்றும் நான் மட்டுமே இந்த முடிவை எடுத்தோம். இதைப் பற்றி எஸ்.பி.பி சார்கிட்ட கேட்கக்கூட இல்ல. வழக்கமா ஒரு பாட்டு 20 வரிகள் வரைக்கும்தான் இருக்கும். ரெக்கார்டிங் செக்‌ஷன் வர்றப்போ பாட்டு வரிகளை கேட்டு அவர் வெச்சிருக்குற நோட்ல எழுதிக்குவார். நோட்ல கடைசி ஒரு பக்கம் இருந்தது. 'இந்த பக்கத்துல எழுதிக்குறேன், வரிகள் சொல்லுங்க'னார். 'இல்ல சார், இந்தப் பாட்டுக்கு எட்டு பக்கம் தேவைப்படும்'னேன். 'என்ன சொல்றீங்க'னார். 96 வரிகள் மொத்தமா இருந்தன. அப்புறம் பரத்வாஜ், 'மூச்சு விடமா பாடணும்'னார். 'கங்கணம் கட்டிட்டு என்ன கூப்பிட்டீங்களானு' எஸ்.பி.பி கேட்டார். 'இல்ல சார், உங்களால் முடியும்'னார்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

'சரி, கொஞ்சம் டைம் கொடுங்கனு'னார். எஸ்.பி.பி சாரோட அசிஸ்டென்ட் கூப்பிட்டு, 'இந்தப் பாட்டு முடியுற வரைக்கும். வேற ஸ்டூடியோவுக்கு பாட வரேன்னு சொல்ல வேண்டாம்'னார். முதல்ல, பாட்டை பிராக்டீஸ் பண்ணி பார்த்தார். உடனே, பாட்டோட தன்மை புரிஞ்சிட்டு அரைமணி நேரத்துல ரெடியாகிட்டார். ஒரு முறை பாடி பார்த்தார். ரெக்கார்டிங் போறதுக்கு முன்னாடி, 'ஒரு முறை மூச்சு வாங்கிக்கிறேன்'னு சொல்லிட்டு மூச்சு வாங்குனார். தன்னை தயார்படுத்திக்கிட்டு, ஒரே மூச்சுல பாடிக் கொடுத்தார். இயக்குநரா ஆனதுக்கு பிறகு இன்ஜினீயர் ரூம்ல உட்கார்ந்திருப்பேன். ஆனா, இந்தப் பாட்டுக்கு என்னால இப்படி உட்கார முடியல. ரெக்கார்டிங் ரூம்ல சார் பாடிக்கிட்டு இருக்குறப்போ பக்கத்துலயே சமனகால் போட்டுட்டு உட்கார்ந்துட்டேன். சார் பாடி முடிச்சவுடனே பெரிய சந்தோஷம். நம்ம படத்துல இப்படியொரு பாட்டு பாடியிருக்கார்னு சந்தோஷம் தாங்கல. எப்பவும், முக்கியமான பாடல்களுக்கு மட்டும்தான் சார்கிட்ட போவேன். நினைச்சதை விட நல்ல பாடிக் கொடுத்திருவார். இந்த சினிமா இன்டஸ்ட்ரியில் உண்மையான ஜெம் எஸ்.பி.பி சார்'' என்றார் சரண்.