Election bannerElection banner
Published:Updated:

`` `இமயமலையில் என்கொடி பறந்தால் உனக்கென்ன' பாடல் எழுதின விஷயமே அஜித்துக்குத் தெரியாது!'' - சரண்

சரண்
சரண்

``முதுகுத்தண்டுல ஆபரேஷன் பண்ணிட்டு பெட்ல படுத்திருந்தார். அவர்னால எதுவும் சரியாப் பேசக்கூட முடியல. அப்பவும் `ஆக்‌ஷன் சப்ஜெக்ட் கதை ஒண்ணு சொன்னீங்களே. அதை ரெடி பண்ணுங்க. சீக்கிரம் ஷூட்டிங் வந்துடுவேன்'னு சொன்னார். அதுதான் அவர் தன்னம்பிக்கை."

நடிகர் அஜித்துக்கு நெருக்கமான இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் சரண். `காதல் மன்னன்', `அமர்க்களம்', `அட்டகாசம்', `அசல்' என அஜித்தின் கரியரில் நான்கு முக்கியமான படங்களை இயக்கியவர் இவர். சரணிடம் பேசினேன்.

``நாளைக்கான நேரம் என்னிடம் இல்லை. ஏனென்றால் என் வாழ்க்கையே பெரும்போதை!"- மீண்டும் சந்திப்போம் ரிஷி கபூர்!

``கூலித் தொழிலாளிகள் முதல் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் வரை என்கிட்ட கேட்குற கேள்வி, `அடுத்து அஜித்கூட எப்போ படம் பண்ணப்போறீங்க?'னுதான். என்னோட முதல் படம் `காதல் மன்னன்'. அவர்கூடதான் நான் என் சினிமா பயணத்தைத் தொடங்கினேன். என்னை இயக்குநரா தேர்ந்தெடுத்தது அவர்தான்.

முதல் படத்துக்குப் பிறகு அவரை ஹாஸ்பிட்டல்லதான் பார்த்தேன். அப்போ, முதுகுத்தண்டுல ஆபரேஷன் பண்ணிட்டு பெட்ல படுத்திருந்தார். அவர்னால எதுவும் சரியாப் பேசக்கூட முடியல. அப்பவும் `ஆக்‌ஷன் சப்ஜெக்ட் கதை ஒண்ணு சொன்னீங்களே. அதை ரெடி பண்ணுங்க. சீக்கிரம் ஷூட்டிங் வந்துடுவேன்'னு சொன்னார். அதுதான் அவர் தன்னம்பிக்கை. அப்படித்தான் `அமர்க்களம்' உருவாச்சு.

அஜித்தோட படங்கள், பாடல்களைவிட அவரோட வாழ்க்கை முறைதான் நிறையபேருக்குப் பிடிக்கும்.

அமர்க்களம்
அமர்க்களம்

அஜித் சாரோட ஸ்டார் வேல்யூ அதிகமாகியிருந்தாலும், அவர் அப்படியேதான் இருக்கார். அவரோட அன்பு மாறவே இல்லை. புதுசா படம் பண்ற இயக்குநர்கள்கிட்ட கூட அப்படித்தான். மெச்சூரிட்டி லெவல் பற்றி சொல்லணும்னா, தன்னைச் சுத்தி நடக்குற விஷயங்களைப் பார்க்குற விதத்துல நிச்சயமா அவருக்கு ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கு. முன்னாடிலாம் எப்பவுமே ஒரு வேகத்துடன் இருப்பார். ஏதாவதொரு அபிப்ராயம் சொல்லணும்னா வெளிப்படையா பேசிடுவார். எதையும் மூடி மறைச்சிக்கிட்டு பேசத் தெரியாது. இதனாலயே பெரிய சர்ச்சை உருவாகும். இப்ப ரொம்பவே பக்குவப்பட்டுட்டார்.''

தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்குறதுக்காகத்தான் அஜித் மீடியாக்களிடமோ, மேடைகளிலோ பேசுவதைத் தவர்க்கிறாரா?

காதல் மன்னன்
காதல் மன்னன்

``அப்படிச் சொல்ல முடியாது. இப்போ அவர் சொல்ற விஷயங்களை ரொம்பவே புரிஞ்சிக்கிட்டு பேசுறார். ஆனா, பொதுவாவே அவரோட கேரக்டரைப் பொறுத்தவரைக்கும் நம்மளைவிட அஜித் சோஷியல் டிஸ்டன்ஸ் ரொம்ப நாளாவே ஃபாலோ பண்ணிட்டு இருக்கார். அவர்கூட நெருங்கிப் பழகுற நபர்கள்கிட்ட அவர் எப்போவும் உண்மையா, வெளிப்படையாதான் இருப்பார்.''

நீங்களும், அஜித்தும் சேர்ந்து செய்த படங்களின் பாடல்களில் சில குறியீடுகள் இருக்குமே?

இயக்குநர் சரண்
இயக்குநர் சரண்

``என்னோட படங்களுக்குப் பெரும்பாலும் பரத்வாஜ் சார்தான் இசை. `அமர்க்களம்' படத்துல வர்ற `காதல் கலிகாலம் ஆகி போச்சுடா' பாட்டுல 'அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே'னு வரிகள் போட வெச்சேன். அவர்மேல ஹீரோ வெர்ஷன் இருக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் அப்படி வெச்சிருந்தேன். தமிழ் சினிமாவுல பாடல்களுக்கு எப்பவும் தனியிடம் உண்டு. ஒரு பாட்டை கண்ணதாசன், டி.எம்.எஸ் பாட்டுனு சொல்ல மாட்டாங்க. எம்.ஜி.ஆர் பாட்டுனுதான் சொல்லுவாங்க. இப்படியிருக்குற பட்சத்தில் `அட்டகாசம்' படம் பண்றப்போ தீம் பாடல் உருவாக்கணும்னு நினைச்சுதான் 'தல போல வருமா'னு வரிகள் வெச்சேன். நானும் பரத்வாஜ் சாரும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தப்போ அவர் ட்யூன் போட்டவுடனே டம்மியா இந்த வரிகளை நான் முதல்ல எழுத ஆரம்பிச்சேன். ஆடியன்ஸூடைய குரலை இதுல சொல்லியிருப்பேன். இதுதவிர அவரோட பெர்சனல் கேரக்டர் பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும். அதுக்காகத்தான் இந்த வரிகள்.

அப்படித்தான் `தெக்கு சீமையில என்னைப் பத்தி கேளு' பாட்டுல அவரோட பரிணாமம் இருக்கும். இது வெறும் ஹீரோக்காக எழுதுன பாட்டு கிடையாது. அவரைப் பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்ங்குறதால அதோட வெளிப்பாடுதான். உயர்வா பாட்டு எழுதி மட்டும் யாரையும் பெரியாள் ஆக்கிட முடியாது. அதற்குரிய தகுதி இருந்தால் மட்டுமே பாடல்கள் எடுபடும். இல்லைனா காமெடி ஆகிடும். அஜித் சாரைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே பொருந்தி வந்தது. விஜய்க்கும் பாடல்கள் அப்படித்தான். ரெண்டு பேருக்குமே அந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரியான பாடல் வரிகள் அமைஞ்சது.

சொல்லப்போனா `இமயமலையில் என் கொடி பறந்தா உனக்கென்ன?' பாட்டு விஜய்க்கு எதிரா எழுதுனதா சர்ச்சையெல்லாம் வந்தது. அஜித் பாட்டு விஷயத்துல எப்பவும் தலையிடவேமாட்டர். இப்படி ஒரு பாட்டு நாங்க எழுதுறதே அவருக்குத் தெரியாது. இந்த பாட்டு ட்யூனுக்காக `உனக்கென்ன'ன்னு முதல்ல டம்மி வரிகளை நான்தான் போட்டு வெச்சிருந்தேன். அவர் வளர்ந்துவர நேரத்துல அவரை அவமானப்படுத்துன சில ஹீரோக்களை மனசுல வெச்சுதான் அதை எழுதியிருந்தேன். அது ஒரு குறியீடு அவ்ளோதான். விஜய்க்காக எழுதப்பட்டது இல்லை. என் டம்மி வரிகளுக்கு ஏத்த மாதிரி வைரமுத்து சாரும் பாடலுக்கான வரிகளை முழுசா `உனக்கென்ன'னு வெச்சிட்டே எழுதிக் கொடுத்தார்.''

இந்தப் பாடல் வரிகளைப் பார்த்ததும் அஜித்தோட ரியாக்‌ஷன் என்னவா இருந்தது?

``அவருக்குள்ள எப்பவுமே ஜெயிக்கணும்கிற வெறி இருக்கும். அதனால அப்போ வருஷத்துக்கு மூணு, நாலு படங்கள் வரைக்கும் பண்ணிட்டு இருந்தார். அதனால இதையும் ஒரு பாட்டா நினைச்சிக்கிட்டு கடந்து போயிட்டார். ஏதாவது ஆட்சேனைகள் இருந்தா சொல்லியிருப்பார்.''

``அஜித் தரப்புல ஏன் அப்படி சொன்னாங்க?'' - ஆதவ் கண்ணதாசன் பதில்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு