Published:Updated:

`ஜீனியஸ்' செல்வராகவனின் பெண் கதாபாத்திரங்களும் அவர் மீதான விமர்சனமும்! #MyVikatan

செல்வராகவன்
செல்வராகவன் ( Vikatan Team )

செல்வராகவன் படத்தில் வரும் கதாநாயகர்கள் பெரும்பாலும் திறமையை சரியாக வெளிக்காட்டத் தெரியாமல் வெட்டியாய் இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் மட்டுமே தனித்துவமான கதைசொல்லல் முறை, காட்சியமைப்பு என ஒவ்வொரு படத்திலும் தங்களுக்கென தனி முத்திரை பதிப்பர். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் தனித்துவமானவர். அவரது படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து இன்றும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறது. அவரது திரைப்பட கதாபாத்திரங்களைக் குறிப்பாக, பெண் பாத்திரப் படைப்புகளைப் பற்றிய கட்டுரையே இது.
காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்

செல்வராகவன் படத்தில் வரும் கதாநாயகர்கள் பெரும்பாலும் திறமையை சரியாக வெளிக்காட்டத் தெரியாமல் வெட்டியாய் இருப்பார்கள். நாயகிதான் அவனைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியத்தைச் செய்ய வைத்து அழகு பார்ப்பாள். 'காதல் கொண்டேன்' படத்தில் வினோத் கல்லூரியில் யாருக்கும் பிடிக்காத மாணவனாக இருப்பான். அவனிடம் தானாக வலியச் சென்று பேசி அன்பாக ஆதரித்து தோழனாக்கி அழகு பார்ப்பாள் திவ்யா. அதுமட்டுமன்றி இங்கிலீஷ் பேசத் தெரியாத வினோத்துக்கு தைரியம் கொடுத்து அவனை மேடையில் ஏற்றி இங்கிலீஷ் பேசச் செய்து கைதட்டல் பெற வைத்து அழகு பார்ப்பாள்.

அதே போல '7ஜி ரெயின்போ காலனி' படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் கதிர் எதுக்குமே லாயக்கு இல்லாமல் இருப்பான். அவனுடைய அப்பா தினமும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். அவனிடம் உள்ள திறமை என்ன என்று அவன் நண்பர்களிடம் கேட்டு அவனை ஒரு பைக் கம்பெனிக்கு அழைத்துச் சென்று அவன் திறமையை நிரூபிக்கச் செய்து அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து அவன் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவாள் அனிதா.

அதேபோல 'யாரடி நீ மோகினி' படத்தில் வாசு இன்டர்வியூ காட்சியில் இங்கிலீஷ் பேசத் தெரியாமல் தடுமாற, 'பரவால தமிழ்லயே பேசுங்க' என்று மோட்டிவேட் செய்கிறாள் கீர்த்தி. அதோடு கொஞ்சம் மார்க்கையும் அதிகப்படுத்தி வேலையும் பெற்றுத்தருகிறாள், திறுதிறுவென விழிக்கும் வாசுவுக்கு புத்தகங்களைப் படிக்கக்கொடுத்து தொழிலையும் கற்றுத் தருகிறாள். வாசுவுக்கு அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கித்தர காரணமாகவும் இருக்கிறாள்.

மயக்கம் என்ன
மயக்கம் என்ன

இதேபோல்தான் செல்வராகவனின் 'மயக்கம் என்ன' படமும். அவருடைய வழக்கமான படங்களைப்போல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான அறிமுகம் முட்டலும் மோதலுமாகத் தொடங்குகிறது. யாமினிக்கும் கார்த்திக்குக்குமான உறவு படிப்படியாக வலுப்படும்.

ஒருகட்டத்தில் மனப்பிறழ்வுக்கு ஆளாகும் கார்த்திக் செய்யும் கிறுக்குத்தனங்கள் நிறைய. குடித்துவிட்டு கர்ப்பிணி மனைவியைத் தள்ளிவிட்டு கருவை கொல்கிறார். திருமண வீட்டில் தோழியின் கணவன் மண்டையைப் பாட்டிலால் அடித்து உடைக்கிறான். அப்படி இருந்தும் யாமினி அத்தனையையும் பொறுத்துக்கொள்கிறாள். அவன் எடுத்த போட்டோக்களை பத்திரிகைகளுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கிறாள்.

செல்வராகவன்
செல்வராகவன்

அதில் ஒரு ஃபோட்டோ பத்திரிகையில் தேர்வாகிறது. அந்தப் புத்தகத்தின் வாயிலாக டிஸ்கவரி சேனலில் வேலை கிடைத்து அந்த வேலையின் மூலம் அவனுக்கு உலகப் புகழ்பெற்ற விருது கிடைக்கிறது. எங்கேயோ ரோட்டில் சோர்ந்த முகத்துடன் அலைந்துகொண்டிருந்தவனை உலக மேடையில் அரங்கேற்றி அழகு பார்ப்பாள் யாமினி.

'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள், பெண் இல்லை என்றால் ஆண் இல்லை' என்பதை தனது படங்களின் மூலமாகத் தொடர்ந்து அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.
அப்படிப்பட்ட இயக்குநர் ஒரு பாடலில் 'உதைடா அவள வெட்றா அவள' என்று பாடியதால் பெண்களை மதிக்கத் தெரியாத இயக்குநர் என்ற பிம்பம் இன்றுவரை அவர்மீது உள்ளது.

மயக்கம் என்ன கார்த்திக் 'உதைடா அவள, வெட்றா அவள' என்று பாட காரணம் என்ன?

சுந்தரின் காதலி என்று தெரிந்த பிறகும் கார்த்திக் செய்வது... சுந்தர் தன்னை காதலிக்கிறான் என்று தெரிந்த பிறகும் யாமினி செய்வது... தன்னுடைய வீட்டில் தங்க வைத்து உதவி செய்யும் உயிருக்கு உயிரான நண்பனுக்கு எப்படித் துரோகம் செய்வது? ``எல்லாம் இந்த யாமினி வராதவரைக்கும் நல்லாதான் இருந்துச்சு இவ வந்தனாலதான் எல்லாம்’’ என்ற மனநிலைக்குச் செல்கிறான் கார்த்திக். அந்த இடத்தில் ஒரு சாதாரண தமிழக இளைஞனின் வார்த்தைகள் விரக்தியாகத்தான் இருக்கும் என்று அவரின் ரசிகனாக எனக்குத் தோன்றினாலும், மறுபக்கம் அது தவறு என்று சொல்பவர்கள் பக்கம் இருக்கும் நியாமமும் புரியாமல் இல்லை.

செல்வராகவன்
செல்வராகவன்
ஜர்னலிஸ்ட் டு ஸ்போர்ட்ஸ் ஸ்டார்... விஜய் கரியரில் இத்தனை கேரக்டர்களா?! #VijayFilmography

``டேட் பண்லாம்னு கேட்டதுக்கு ஒரு பொண்ணு ஒத்துக்கிட்டான்னா உடனே அவ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டானு நீங்களே நினைச்சுக்கிட்டா நாங்க என்ன பண்றது’’ என்ற கேள்வி கேட்கும் யாமினியின் பக்கம்தான் நியாயம் என்றாலும் நண்பனுக்குத் துரோகம் நினைக்காத கார்த்திக் மீதும் தவறு இல்லை.

ஒருவர் மீதுள்ள அதீத அன்பு இன்னொருவர் மீது அதீத வெறுப்பாக மாறிவிடுகிறது.

``வெட்றா, உதைடா’’ போன்ற வார்த்தைகளைக் கெத்தான வார்த்தைகளாகப் பயன்படுத்தி பழக்கப்படுத்திய சமூகத்தில், அதுவும் பெண்களை நோக்கி இத்தகைய வார்த்தைகளை பாடல்களாகப் பயன்படுத்தும்போது, அது சமூகத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனிக்க வேண்டும். படத்தில் பெண்ணைத் துணிச்சலான பாத்திரமாகச் சித்திரித்து, தன் காதலனை அவனது இலக்கை அடையச் செய்யும் உயரத்துக்கு அழைத்துச் செல்லும் அந்தப் பெண் பாத்திரப்படைப்பின் வீரியத்தைவிட, இந்தப் பாடல் ஏற்படுத்தும் ஆபத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைச் செல்வராகவன் நிச்சயம் உணர்ந்திருப்பார்.

செல்வராகவன்
செல்வராகவன்

இந்தப் படம் வெளியான சமயத்தில் இந்தப் பாடலுக்காக ஏகப்பட்ட எதிர்ப்புகள். இயக்குநர் செல்வராகவனே ஒரு மேடையில் 'இனி நான் பாடல் எழுத மாட்டேன்' என்றார் கோபமாக. அப்படி இருந்தும் பல வருடங்களாக அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு நீண்டுகொண்டே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான பேட்டிகளில்கூட'உதைடா அவள... வெட்றா அவள...' பாடலைப் பற்றிக் கேட்டால் எதையும் சொல்லி சமாளிக்காமல், "இனி என் படத்துல இந்த மாதிரி பாடல்கள் இருக்காது, அந்தப் பாடலை எழுதியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்’’ என்கிறார் ஒளிவு மறைவின்றி.

ஆனாலும் அந்த ஒற்றைத் தவறு இன்றும் அவரை குற்றவாளியாகக் காட்டிக்கொண்டே இருக்கிறது. `மயக்கம் என்ன’ படத்தில் ஒரு காட்சியில்... மழை பெய்து கொண்டிருக்கும்போது பஸ் ஸ்டாப்பில் யாமினியும் கார்த்திக்கும் முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள். சுந்தர் calling என்ற வாய்ஸ் கேட்டதும் யாமினியிடம் இருந்து விலகி குற்ற உணர்வுடன் அழுதுகொண்டே மழையில் நனைந்தபடி ஓடுகிறான் கார்த்திக். அந்தக் கார்த்திக்தான் செல்வராகவன்.

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு