Published:Updated:

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள் ஆசை!"

செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
செல்வராகவன்

தமிழ் சினிமாவில் செல்வராகவன் வழி எப்போதுமே தனி வழி.

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள் ஆசை!"

தமிழ் சினிமாவில் செல்வராகவன் வழி எப்போதுமே தனி வழி.

Published:Updated:
செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
செல்வராகவன்
#18YearsOfSelvaragavan - சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ்டேகைத் தேடிப் படித்தால், அத்தனையும் தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்துக்கான சான்றுகள்தான்.

தமிழ் சினிமாவில் செல்வராகவன் வழி எப்போதுமே தனி வழி. இசையும் காதலுமாய் அவர் படங்கள் தந்த நினைவுகள் காலத்தால் மட்டுமல்ல; எவையாலும் அழிக்க முடியாதவை. செல்வாவிடம் பேசியதிலிருந்து...

செல்வராகவன்
செல்வராகவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`இதெல்லாம் எனக்கு ரொம்பப் புதுசா இருக்கு. என்னோட ஒவ்வொரு படத்தையும் பாராட்டிப் பேசுறதைப் பார்க்குறப்போ சந்தோஷத்தையும் தாண்டி என்னமோ புதுசா ஃபீல் பண்ணுறேன். நாம இப்ப ஒரு சினிமா பார்த்துட்டிருக்கோம். ரெண்டரை மணிநேரம் கழிச்சு, ‘டேய் எந்திரிடா... இது சினிமாடா’ன்னு யாராவது தட்டி எழுப்புறதுதான் நல்ல சினிமா. அப்படிப் பார்க்கும்போது நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை. அதுக்காகத்தான் போராடிட்டிருக்கேன். சீக்கிரம் சாதிக்கணும்னு ஓடிக்கிட்டே இருக்கேன்.’’

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"

‘` ‘7/ஜி ரெயின்போ காலனி’ படத்துல வர்ற கதிர் நீங்கதான்னு ஒரு பேச்சு இருக்கு. உண்மையா?’’

“ஒரு படம் பண்ணுறப்போ நம்ம சாயல் கொஞ்சம்கூட இல்லாமப் படம் பண்ண முடியாது. காலனில நான் வசிச்ச அனுபவத்தை வெச்சிக்கிட்டுத் திரைக்கதை அமைச்சேனே தவிர, கதிர் நான் கிடையாது. நான் கொஞ்சம் நல்லாப் படிக்குற பையன். கதிர் கேரக்டருக்கு படிப்பு சுத்தமா வராது. கதிர் மாதிரி நான் யார் பின்னாடியும் சுத்தினதில்ல. ‘காதல் கொண்டேன்’ வினோத்தும் முழுசா நான் கிடையாது. ஆனா, என்னுடைய குணாதிசயம் அதுக்குள்ள இருக்கும். படத்துல வர்ற மாதிரி ரொம்ப பயந்துகிட்டேதான் காலேஜுக்குள்ள நுழைஞ்சேன். ஆறாவது வரைக்கும் நான் படிச்சது தமிழ் மீடியம். இங்கிலீஷை முழுசாத் தெரிஞ்சுக்குறதுக்குள்ளயே காலேஜ் வந்திருச்சு. வினோத் மாதிரி பேன்ட் ஷர்ட் போட்டுக்கிட்டுதான் நானும் காலேஜுக்குப் போனேன். தாழ்வுமனப்பான்மை எனக்குள்ள எப்பவும் அதிகமா இருக்கும். காரணம், என்னோட தோற்றம். டாக்டர்க்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்த்து விட்டுட்டாங்க. கஷ்டப்பட்டுப் படிச்சேன். பசி வந்திருச்சுனா உடனே லன்ச் பாக்ஸ் எடுத்து சாப்பிட்டிருவேன். நிறைய புக்ஸ் படிச்சிக்கிட்டே இருப்பேன். இன்ஜினீயரிங்குக்குப் போனதுக்குப் பிறகுதான் ரைட்டிங்ல விருப்பமிருக்குன்னு எனக்கே தெரிய வந்தது. பாதியில காலேஜை விடலாம்னு நினைசேன். ஆனா, அப்பா அடிச்சே காலேஜ் முடிக்க வெச்சிட்டார். இதான் செல்வராகவன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`ஓர் இயக்குநரா உங்களுக்கான சவாலா நீங்க நினைக்கிறது என்ன?’’

“நல்ல திரைக்கதை எழுதுறதுதான். என் படங்கள்ல ‘7/ஜி’ திரைக்கதையை ஈஸியா எழுதிமுடிச்சிட்டேன். ஏன்னா, நான் பார்த்த மனிதர்கள், அனுபவங்களை வெச்சு எழுதுன கதைனால அது சரியா வந்துடுச்சு. ஆனா, மற்ற படங்கள் அப்படி இல்லை. திரைக்கதை எழுத மிகப்பெரிய டிஸிப்ளின் வேணும். எழுதுனதையே திரும்பத் திரும்ப மாத்தி மாத்தி எழுத வேண்டியிருக்கும். ரீரைட்டிங் பெரிய ப்ராசஸ். டக்குனு முடியுற வேலையில்லை. பலமுறை எழுதி முடிச்சதுக்குப் பிறகும்கூட அதுல கொஞ்சம் குறை இருக்கும். அது நம்ம கண்ணுக்குத் தெரியாமப் போயிடும். எழுதுனதையே திரும்பத் திரும்பப் படிக்குறப்போ கொஞ்சம் காண்டாகும். ஆனாலும் வேற வழியில்லை. நிறைய பொறுமையும் வேணும்.’’

“இது ஓடிடி காலம். சென்சார் இல்லை... நேரக்கட்டுப்பாடு இல்லை என, படைப்பாளிகளுக்குக் கட்டற்ற சுதந்திரம். இந்த நேரத்தில் என்னுடைய இந்தப் படம் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கும் படம் எது?’’

‘` ‘ஆயிரத்தில் ஒருவன்.’ நான் எடுத்ததை இதுல முழுசா காட்டியிருக்க முடியும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல நீளம் காரணமா நிறைய காட்சிகளைத் தூக்கவேண்டியிருந்தது. எவ்வளவு நல்ல காட்சியா இருந்தாலும், சரியா வரலைன்னா மனசைத் திடமாக்கிட்டுத் தூக்கிடணும்னு சொல்லுவாங்க. இது ஒரு அடிப்படை விதி. ஆனா, நான் கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளையும் எப்படியாவது படத்துக்குள்ள கொண்டுவந்துடுவேன். ஆனா, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல பல காட்சிகளைத் தூக்கவேண்டியிருந்தது. என்னென்ன காட்சிகள்னு இப்போ சரியா ஞாபகமில்ல. இந்தப் படம் தியேட்டர் ரிலீஸுக்கு வந்தபிறகும் எடிட் ஆச்சு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"
" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"

‘`சீக்வெல்களின் சீசன்... நீங்களும் ‘புதுப்பேட்டை -2’, ‘ஆயிரத்தில் ஒருவன் -2’ பண்ணப்போறீங்க எனப் பேச்சுகள் இருக்கு. சீக்வெல்கள் உங்களுக்கு செட் ஆகுமா?’’

“ ‘காட்ஃபாதர்’ படத்தின் சீக்வெல்களைப் பார்த்தா சில விஷயங்கள் புரியும். முதல் பார்ட் மாதிரி வரணும்னு அவ்வளவு மெனக்கெட்டுப் பண்ணியிருப்பாங்க. கிட்டத்தட்ட ‘காட்ஃபாதர்’ லெவலுக்கு அதன் சீக்வெல்களும் பர்ஃபெக்ட்டா இருந்தது. ஆனா, சீக்வெல்ல ஒரு பெரிய சவால் இருக்கு. அந்தப் படத்தைப் பார்க்க வர்ற ரசிகர்கள் புதுசா ஒரு படத்தைப் பார்க்குற மைண்ட்செட்ல வரமாட்டாங்க. ஏற்கெனவே இருக்கும் எதிர்பார்ப்புடன் வருவாங்க. அதனால சீக்வெல்களுக்கு மிகப்பெரிய உழைப்பு, மெனக்கெடல் தேவை. என்னோட படத்துக்கான சீக்வெல் பண்ணுறப்போதான் காட்சிகள் எப்படி வரும்னு தெரியும். I will do my best.’’

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"

‘`இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷை எப்படிப் பார்க்கிறார்?’’

‘`நாங்க ரெண்டு பேருமே அண்ணன், தம்பிங்குற விஷயத்தை மீறி வேற மாதிரி எப்பவும் பார்த்துக்கிட்டதில்லை. எல்லார் வீட்டிலும் அண்ணன், தம்பி எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் நானும் பிரபுவும் இருப்போம். வீட்ல தனுஷ்னு அவனை யாருமே கூப்பிடுறது இல்ல. எல்லாருக்குமே பிரபுதான். வாடா போடான்னுதான் பேசிக்குவோம். அவன் நடிகன், நான் இயக்குநர் அப்படிங்குற விஷயமே எங்களுக்குள்ள ஞாபகம் இருக்காது. நாங்க நாலு பசங்க ஒண்ணா வளர்ந்தவங்க. அடிச்சிப்பிடிச்சு விளையாடிக்கிட்டிருப்போம்.’’

" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"

‘`தமிழ் சினிமாவில் நீங்கள் யாருடைய தீவிர ரசிகர்?’’

‘`கவுண்டமணியோட வெறிபிடிச்ச ரசிகன். இதுவரைக்கும் அவரைப் பார்த்தது இல்லை. வாழ்க்கையில ஒரு தடவையாவது அவரைப் பார்த்திருவேன்னு நினைச்சு வாழ்ந்துட்டிருக்கேன். அவரோட நடிப்புல பார்க்காத காமெடியே இல்ல. அவரோட மேனரிசம், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்துலயும் அவருக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சிருப்பார். அவரை என் படத்துல நடிக்க வைக்கணும்னு ஆசையிருக்கு. அதுக்கு நான் கொடுத்துவெச்சிருக்கணும். கடவுள் புண்ணியத்துல நடந்தா நல்லாருக்கும். பார்ப்போம்.’’

‘`உங்களுடைய கனவு புராஜெக்ட் ‘உடையார்’ என்னாச்சு?’’

‘`இந்தப் படம் பண்ணுறது சாதாரண விஷயமில்ல. இதுக்கு மட்டுமே நாலு வருஷம் வரைக்கும் ஆகும். அதுக்கு ஏற்ற பொருளாதாரம், காலம், ஆர்ட்டிஸ்ட்னு எல்லாமே சரியா வரணும்.’’

‘` ‘மன்னவன் வந்தானடி’ என்ன கதை?’’

‘`சந்தானம் இருக்கறதனால இது காமெடி ஸ்க்ரிப்ட் கிடையாது. முழுக்க முழுக்க ஹியூமர் இருக்கற மாதிரியான படம் எடுக்கிறது ரொம்பவே கஷ்டம்.’’

‘`இந்த லாக்டெளன் நாள்களில் ரொம்பவே மிஸ் பண்ணுற விஷயம்னா என்ன சொல்லுவீங்க?’’

‘`முன்ன வீட்டுல இருந்து பழக்கமில்ல. இப்போ வீட்டுலயே முழு நேரமும் இருக்க வேண்டிய சூழல். கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டிருக்கேன். நான் அம்மாவின் செல்லப்பிள்ளை. இப்பவும் அம்மாவோட முந்தானையைப் பிடிச்சிக்கிட்டு சுத்துறேன்னு எல்லாரும் சொல்லுவாங்க. காலையில் எழுந்தவுடனே அம்மாகூட போன்ல பேசலைனா பொழுதே விடியாது. லாக்டெளனால அம்மாவை நேர்ல பார்க்க முடியல. அவங்களை சீக்கிரம் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism