Published:Updated:

“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”

குழலி
பிரீமியம் ஸ்டோரி
குழலி

கிராமத்துல படிச்சு வருங்காலத்துல பெரிய பதவியில அமரணும்னு கனவோட வாழ்ந்துக்கிட்டிருக்கிற பொண்ணுதான் குழலி.

“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”

கிராமத்துல படிச்சு வருங்காலத்துல பெரிய பதவியில அமரணும்னு கனவோட வாழ்ந்துக்கிட்டிருக்கிற பொண்ணுதான் குழலி.

Published:Updated:
குழலி
பிரீமியம் ஸ்டோரி
குழலி

பாரதிராஜா சார், மணிரத்னம் சார் இவங்ககிட்ட உதவி இயக்குநரா சேரணும்னு ஊர்ல இருந்து கிளம்பி சென்னைக்கு வந்தேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையலை. பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை சொல்லிட்டு, சொல்லிட்டு வருவேன். சில இடங்களில் ‘கதையை மட்டும் தாங்க, நாங்க படம் பண்ணிக்குறோம்’னு கேட்டாங்க. நான் தரமாட்டேன்னு சொல்லிட்டேன். சின்னச்சின்ன படங்கள்ல உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். ஆனா, எதுவும் ரிலீஸாகலை. கொஞ்ச காலம் பட விநியோகம் பத்தித் தெரிஞ்சுக்கலாம்னு இங்கிலீஷ் படங்கள், மற்ற மொழிப் படங்களை வாங்கி டப் பண்ணி வெளியிட்டேன். இப்படியே காலம் கடந்தது. ‘சரி, நாம எதுக்காக சினிமாவுக்கு வந்தோம்? அதைப் பண்ணாம சுத்திட்டு இருக்கோமே’ன்னு நினைச்சு மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சேன். எங்கேயும் செட்டாகலை. ஒரு தயாரிப்பு நிறுவனத்துல கதை சொல்லி இளையராஜா சாரை கமிட் பண்ணினோம். மறுநாள் கம்போஸிங்னா, முதல் நாள் படம் டிராப் ஆகிடுச்சு. இப்படிப் பல துயரச் சம்பவங்களுக்குப் பிறகு, ஒரு படத்தை எடுத்திருக்கேன்” எனப் பேச ஆரம்பித்தார், ‘குழலி’ படத்தின் இயக்குநர் செரா.கலையரசன்.

“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”
“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”

`` ‘குழலி’ என்ன மாதிரியான படம்?’’

“கிராமத்துல படிச்சு வருங்காலத்துல பெரிய பதவியில அமரணும்னு கனவோட வாழ்ந்துக்கிட்டிருக்கிற பொண்ணுதான் குழலி. அவளுடைய கனவை நனவாக்க இந்தச் சமூகம் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்குதுங்கிறது தான் படம். ட்ரெய்லர் பார்த்துட்டு நிறைய பேர் இது சாதியை எதிர்க்கிற காதல் கதைன்னு நினைக்கிறாங்க. சாதி மூலமா கல்வியை அழிக்க நினைக்கிற ஒரு சமூகத்தைப் பத்தின கதை. தான் பெத்த பொண்ணு செத்தாலும் பரவாயில்லை, என் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாதுங்கிற மனநிலைதான் கொடூரமானது. இந்த நிலை மாறணும். கல்வி உயர்ந்த இடத்துல இருந்தால்தான் சாதியை ஒழிக்க முடியும்னு சொல்லிருக்கேன். பள்ளியில பையனும் பொண்ணும் பேசினாலே தப்புன்னா, கல்வியே தப்புன்னுதானே நினைக்கிறாங்க. அப்படிப் பார்த்துப் பார்த்து, எத்தனையோ பெண் குழந்தைகளோட கல்வி பாதியிலேயே நின்னுபோயிருக்கு. கல்விதான் முக்கியம். நான் படிச்சுட்டா, பேனாவைப் பிடிச்சுடுவேன். அப்படிப் பிடிச்சுட்டா உன் ஆணவத்தை அழிச்சிடுவேன்னு நினைச்ச பொண்ணை இவங்க என்ன பண்ணுனாங்க அப்படிங்கிறதுதான் க்ளைமாக்ஸ்.”

“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”
“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”

`` ‘காக்கா முட்டை’ விக்னேஷை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?’’

“எனக்கு புதுமுகங்களை வெச்சு இந்தக் கதையைப் பண்ணினாதான் சரியா இருக்கும்னு தோணுச்சு. அப்போ எனக்கு ‘காக்கா முட்டை’ விக்னேஷ் மைண்டுக்கு வந்தாப்ல. இவர் உள்ள வரும்போது, இவர் நடிச்ச படம்னு வெளியே தெரியும். ஆனா, விக்கி வடசென்னையைச் சார்ந்தவன். அவனை தென் மாவட்டத்து இளைஞனா மாத்தினேன். அதுக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது. ஒரு கட்டத்துல பயங்கரமா செட்டாகிட்டாப்ல. ‘பாபநாசம்’ படத்துல ரெண்டாவது பொண்ணா நடிச்ச எஸ்தர் அனில்தான் முதல்ல கமிட்டாகியிருந்தாங்க. அவங்களை வெச்சு கம்பத்துல ரெண்டு நாள் ஷூட்டிங் பண்ணினோம். அப்புறம், படம் டிராப் ஆகிடுச்சு. அப்புறம், நண்பர் ஒருவர் மூலமா வேறொரு தயாரிப்பாளர் கிடைச்சார். அப்போ எஸ்தர் நடிக்கமாட்டேன்னு சொல்லிட் டாங்க. அப்புறம், `ஆரா’ன்னு ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினோம். விக்னேஷ் - ஆரா ரெண்டு பேரும் சூப்பரா நடிச்சிருக்காங்க, மத்தபடி அந்த கிராமத்துல இருக்கிற மக்களைத்தான் நடிக்க வெச்சிருக்கேன்.”

“சாதியை விட்டுக்கொடுக்காத மனநிலை துயரமானது!”
செரா.கலையரசன்
செரா.கலையரசன்

``மற்ற படங்களிலிருந்து ‘குழலி’ எந்த வகையில் வித்தியாசப்படுது?’’

“என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவம்தான் இந்தக் கதை எழுதத் தூண்டுதலா இருந்தது. ஆனா, அந்தச் சம்பவம் மட்டுமே படம் கிடையாது. எத்தனையோ ஆணவக் கொலைக்குக் கத்தியைத் தூக்கிட்டுப் போய் வெட்டுனவங்க இருக்காங்க. அப்படி சாதிக்காக தன் மகனையோ மகளையோ இழந்த குடும்பம், ஒரு சூழல்ல நம்ம குழந்தையை இழந்துட்டோமேன்னு நிச்சயம் நினைக்கும். ஆனா, அவங்களைத் தூண்டிவிட்ட யாருக்கும் இந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையில்லை. அதுக்குப் பிறகு, இந்தக் குடும்பத்தை அவங்க திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. அப்படியான எத்தனையோ வாழ்க்கைப்பதிவைத் தூக்கிப் போடணும்னுதான் ‘குழலி’ வந்திருக்கா. இந்தப் படத்துடைய க்ளைமக்ஸை வித்தியாசமா அணுகியிருக்கேன். அது நிச்சயமாப் பேசப்படும். இந்தப் படத்தைப் பார்க்கிற எல்லோரும் குழலியின் அம்மாவா பார்த்தாங்கன்னா, நிச்சயம் மாற்றங்கள் உருவாகும்னு நம்புறேன்.”