Published:Updated:

``ஹீரோக்களைவிட மக்களுக்கு எப்பவும் வில்லனைத்தான் பிடிக்கும்... ஏன்னா?!''- ஷங்கர் - Part 4

Shankar ( Photo: Vikatan / Saravanakumar.P )

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான பிரத்யேக பேட்டியின் 4-வது பகுதி. இன்றைய பகுதியில், தன்னுடைய ஹீரோக்களில் வில்லன் சாயல் தெரிவது முதல் சுஜாதாவின் வசனங்களைப் படித்து வியந்த தருணங்கள்வரை பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் ஷங்கர்.

``ஹீரோக்களைவிட மக்களுக்கு எப்பவும் வில்லனைத்தான் பிடிக்கும்... ஏன்னா?!''- ஷங்கர் - Part 4

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான பிரத்யேக பேட்டியின் 4-வது பகுதி. இன்றைய பகுதியில், தன்னுடைய ஹீரோக்களில் வில்லன் சாயல் தெரிவது முதல் சுஜாதாவின் வசனங்களைப் படித்து வியந்த தருணங்கள்வரை பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் ஷங்கர்.

Published:Updated:
Shankar ( Photo: Vikatan / Saravanakumar.P )

`` `5 கோடி பேர் 5 முறை 5 பைசா திருடுனா தப்பா' இதுதான் அந்நியன் படத்தின் முக்கியமான வசனம்னு நாங்க நினைக்கிறோம். உங்களுக்கு இந்தப்படத்துல ரொம்ப பிடிச்ச வசனம் எது?''

`` `இப்படி சின்னச் சின்ன அலட்சியம் எல்லாமே சேர்ந்து ஒரு மெகா அலட்சியமாகி அதுவே தேசிய குணமாகிடுச்சு', `ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்', `இது படம் போடுறதுக்கு முன்னாடி போடுற நியூஸ் ரீல் இல்லை. இதெல்லாம் இந்தியா தப்பவிட்ட தருணங்களுடைய தொகுப்பு'னு அந்நியன் பேசுற வசனம் இதெல்லாம்தான் எனக்குப் பிடிச்சது."

``சுஜாதா கூட வொர்க் பண்ணும்போது நீங்க அவரைப் பார்த்து பிரமிச்ச தருணம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ரொம்ப கேஷுவலா இருப்பார். பாசாங்கே இருக்காது. பெரிய எழுத்தாளர்னு காட்டிக்கவே மாட்டார். ஒரு புரொஃபசர் மாதிரி என்னை வழிநடத்துற அதே சமயம், சக மாணவன் மாதிரி தோள்ல கைபோட்டுட்டு ஜாலியாவும் பேசுவார். சில நேரங்கள்ல அவர்கிட்ட இருந்து வர்ற வசனம் ரொம்ப சர்ப்ரைஸிங்கா இருக்கும். உதாரணத்துக்கு, `தப்பு என்ன பனியன் சைஸா ஸ்மால், மீடியம், லார்ஜ்னு இருக்கிறதுக்கு? எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்', அம்பிகிட்ட நந்தினி சொல்ற `இதெல்லாம் பார்த்தா இன்குபேட்டர்லதான் காலேஜ் போகமுடியும்'னு சொல்ற வசனம். அம்பி சொல்ற `ஒரு கால் இன்ச் கருணை எதிர்பார்க்கிறது தப்பாப்பா?' இந்த வசனங்களை எல்லாம் படிச்சி வியந்திருக்கேன்."

Shankar, Prashanth and Aishwarya Rai
Shankar, Prashanth and Aishwarya Rai
Photo: Vikatan

``அம்பி மார்ஜின் போட்டு லவ் லெட்டர் எழுதுற சீனை எடுக்கும்போது எப்படி இருந்தது?''

``அம்பி ரொம்ப பர்ஃபெக்டா இருக்குற நபர். அதனால லவ் லெட்டர்ல கூட மார்ஜின் எல்லாம் போட்டு எழுதுறான்னு நான் எழுதும்போதே சிரிப்பு வந்திடுச்சு. அது சுஜாதா சார்கிட்ட போகும்போது அடுத்த லெவலுக்கு போச்சு. அவர் உபயகுசலோபரினு சொல்லும்போதே செம சிரிப்பு. `அதென்ன சார்?'னு கேட்டேன். `நான் நல்லாயிருக்கேன். நீ நல்லாயிருக்கியா? நலம். நலம் அறிய ஆவல்.. இதுடைய சுருக்கம்தான் உபயகுசலோபரி'னு சொன்னார். அந்த வார்த்தையை ரொம்ப ரசிச்சேன். `எக்ஸ்ட்ரா பேப்பர் எல்லாம் கேப்பான் போலயே'ன்னு விவேக் சார் ஸ்பாட்ல சேர்த்தார். அந்த சீனே ரொம்ப அழகா வந்தது."

``இந்தப் படத்துல மூணு குரல்ல விக்ரம் பேசணும். அவருடைய டப்பிங் செஷன் எப்படி இருந்தது?''

``என் படங்களுக்கு எடிட்டிங், டப்பிங் ரெண்டுமே ஒரே நேரத்துல போகும். நான் எடிட்டிங்ல இருப்பேன். என் அசிஸ்டென்ட்ஸ்தான் டப்பிங்ல இருப்பாங்க. அப்புறம் நான் எங்கெல்லாம் மறுபடியும் டப் பண்ணணுமோ அதை நோட் பண்ணி கடைசியா ஃபைனல் டப்பிங்குக்கு மட்டும் போவேன். விக்ரம் நடிக்கும்போதே அவர் பெஸ்ட்டை கொடுத்துட்டார். டப்பிங்ல அவர் ரொம்ப ஸ்ட்ராங். அதுலயும் அவர் எனக்கு பெருசா வேலை வைக்கலை. அந்நியன் கேரக்டருக்கு மட்டும் காலையில எழுந்தவுடன் வந்து பேஸ் வாய்ஸ்ல பேசிட்டு போவார். மத்ததெல்லாம் விக்ரமுடைய ஃபுல் எஃபர்ட்தான்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``மணிகண்டன், ரவிவர்மன்னு ரெண்டு ஒளிப்பதிவாளர்கள் `அந்நியன்'ல வொர்க் பண்ணியிருக்காங்க. ரெண்டு ஒளிப்பதிவாளர்கள் கூட வொர்க் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?''

Rajinikanth, Kamal Haasan, Shankar and Manisha Koirala
Rajinikanth, Kamal Haasan, Shankar and Manisha Koirala
Photo: Vikatan

``எனக்கு முதல்ல ஒளிப்பதிவு பி.சி ஶ்ரீராம் சார்தான் பண்ணணும்னு மைண்ட்ல இருந்தது. காரணம் மூணு கேரக்டர்கள். அம்பி கேரக்டருக்கான லென்ஸிங் எல்லாம் ரொம்ப சமத்தா இருக்கணும். அதுக்கு ஒரு டோன் வரணும். அந்நியன் கேரக்டருக்கு லென்ஸிங், கலர் டோன் எல்லாமே டெரரா இருக்கணும். ரெமோவுக்கு பயங்கர ஸ்டைலிஷா இருக்கணும். இந்த மூணும் ஒண்ணொண்ண உறுத்தாம ஒட்டியிருக்கணும்னு நினைக்கும்போது பி.சி சாரை வெச்சு பண்ணலாம்னு முயற்சி பண்ணேன். அவருடைய டேட்ஸ் பிரச்னையால பண்ணமுடியாம போச்சு. அதனால முதல்ல மணிகண்டனை வெச்சு பண்ணேன். அப்புறம் ரவிவர்மன்தான் எனக்கு உதவி பண்ணார். அவருக்கு என் மேல பிரியமுண்டு. நான் கூப்பிட்டேன்னு வந்து வொர்க்கைப் பண்ணிக்கொடுத்தார். நான் மனசுல வெச்சிருந்த மாதிரி எந்த கேரக்டருடைய கலர் டோனும் துறுத்தாமல், கிரேடிங்ல இருந்து எனக்கு நிறையவே சப்போர்ட் பண்ணார்."

``ஹீரோக்களைத் தாண்டி வில்லன்களை மக்களுக்குப் பிடிக்குது. என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறீங்க?''

``ஹீரோக்களுக்கு ஒரு சில ரூல்ஸ் இருக்கு. அதைத் தாண்டி அவன் ஒண்ணும் பண்ணமுடியாது. ஆனா, வில்லனுக்கு ரூல்ஸே கிடையாது என்னவேணாலும் பண்ணுவான். எல்லோருக்குமே ஷாக்கும் பயமும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் வில்லன் சுவாரஸ்யமுள்ளவனா இருப்பான். பேய் படம் பார்க்குறது பயம்தான். ஆனா, சின்னக் குழந்தைகள்ல இருந்து எல்லோரும் அதை விரும்பி பார்க்குறாங்கல்ல. அது மாதிரிதான்."

``உங்க படங்கள்ல வர்ற ஹீரோக்களுக்குள்ள ஒரு வில்லத்தனம் இருந்துட்டே இருக்கே?

``என் முதல் படம் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக்ல பண்ணனும்னு நினைச்சு எல்லோர்கிட்டேயும் கதை சொல்லப்போனேன். அப்போ அதுக்கு யாரும் ரெஸ்பாண்ட் பண்ணலை. அப்போ ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்தான் ஃபேமஸா இருந்தது. அதனால, என்கிட்ட எல்லோரும் அது மாதிரி கதையைத்தான் கேட்டாங்க. `உங்களுக்கு ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்தானே வேணும். நான் ரெடி பண்றேன்'னு நினைச்சு `ஜென்டில்மேன்' ஆரம்பிச்சேன். அதுல ரொம்ப சின்சியரா சில பொழுதுபோக்கு விஷயங்கள், மெசேஜ் எல்லாம் சேர்த்து பண்ணதுனால அது வொர்க் அவுட்டாச்சு."

Shankar, Balaji Sakthivel, Simbudevan and Vasantha Balan
Shankar, Balaji Sakthivel, Simbudevan and Vasantha Balan
Photo: Vikatan

`` `காதலன்'ல வர்றா ஜில் ஜங் ஜக், `ஜென்டில்மேன்'ல வர்ற ஜலபுலஜங்ஸ், சப்ளிங் ஆட்டம்... இந்த மாதிரியான வார்த்தைகள் உங்களுக்கு எப்படி கிடைக்குது?''

``அதெல்லாம் நம்ம சேஷ்டைதான். `ஜலபுலஜங்ஸ்'க்கு அர்த்தமே கிடையாது. சவுண்டுக்காக வெச்சது. சிரிப்பு வர்ற சவுண்டு மேல எனக்கு ஆர்வமா இருக்கும். அதனால அந்த மாதிரி சேஷ்டை எல்லாம் அங்கங்க வெச்சிவிடுறது."

``உங்களுக்கு ஒரு சவால். `படத்துடைய பட்ஜெட் அதிகபட்சமே 5 கோடி ரூபாய்தான்'ன்னு சொன்னால், அந்த பட்ஜெட்டுக்குள் இயக்குநர் ஷங்கரை எப்படி பார்க்கலாம், அந்தப் படம் எப்படியிருக்கும்?''

``இதை நான் சுஜாதா சார்கிட்டேயே சொன்னேன். `அவசியம் என்ன?'ன்னார். இப்படி ஒரு விஷயம் பண்ணலாம்னு சொன்னா எங்க வீட்லயே படம் பார்க்கமாட்டேன்னு சொல்றாங்க. அப்படி ஒரு கட்டாயம் வரும்போது பண்ணலாம். இப்போதைக்கு அப்படியொரு கட்டாயம் இல்லை. தவிர, அந்த பட்ஜெட்டுக்காக ஒரு கதையை பண்ணக் கூடாது. ஒரு கதை இவ்ளோ பட்ஜெட் கேட்குதுனா அதுக்குத்தான் படம் பண்ணணும்."

``இயக்குநரா 25 வருஷ பயணம். அப்டேட்டாவும் அட்வான்ஸ்டாவும் இருக்கிறது எவ்வளவு பெரிய சவால்?''

``அது சவால் கிடையாது; அவசியம். எப்பவும் அட்வான்ஸ்டா யோசிக்கிறது நல்லதுதானே. அப்போதான் புதுப்புது விஷயங்கள் வரும். ஒரு திருப்தி கிடைக்கும்."

`` `சங்கர் முதல் ஷங்கர் வரை' புத்தகத்துல நீங்க ஸ்கூல் படிக்கும்போது மதிய சாப்பாட்டுக்கு உப்புமா எடுத்துட்டு போனதைப் பத்தி எழுதியிருப்பீங்க. இப்போ உங்க வீட்ல காலை உணவா உப்புமா சாப்பிடும்போது என்ன தோணும்?''

``நிச்சயமா ஞாபகம் வரும். டிராமாவுல ஒருத்தன் முகம் சுருங்கிடுச்சுனா `என்னடா லன்சுக்கு டிபன் பாக்ஸ்ல உப்புமாவை பார்த்த மாதிரி இருக்கு உன் மூஞ்சி'னு டயலாக் எல்லாம் போடுவேன். இப்போ வீட்ல நல்லா உப்புமா பண்றாங்க. அப்போ போரடிச்ச விஷயங்கள் இப்போ பிடிச்ச விஷயங்களா மாறுறதை பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கு."

``துருவ் விக்ரம் நடிப்பு எப்படியிருக்கு?'', ``பிரீயட் படங்கள் பண்ணுவீங்களா?'', ``நல்ல கமர்ஷியல் படம்னா என்ன?'', ``பிடித்த நடிகை யார்?'', ``ரோடு, மலை, ரயில்னு எல்லாத்துக்கும் ஏன் பெயின்ட் அடிக்கிறீங்க?'' ... இயக்குநரின் ஷங்கரின் சுவாரஸ்யமான பதில்கள் நாளை காலை 11 மணிக்கு விகடன் இணையதளத்தில்