"பொய் செய்தி... நீதிமன்ற வழக்குகள் பதிவேற்றுதலில் நிகழ்ந்த தவறு அது!" – ஷங்கர் அறிக்கை

பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இந்த பிடிவாரன்ட் பிறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது.
எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இந்த பிடிவாரன்ட் பிறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது.

"எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரன்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது'' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
ஆனால், இயக்குநர் ஷங்கரின் அறிக்கையில் ’எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கு என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.