சினிமா
Published:Updated:

“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”

கசட தபற படக்குழுவினர்
பிரீமியம் ஸ்டோரி
News
கசட தபற படக்குழுவினர்

அடிப்படையில் நான் கார்ட்டூனிஸ்ட். அதனால் எல்லா விஷயங்களையும் கனமா சேர்த்து வைக்கிற மாதிரி மனசு அமைஞ்சிடுச்சு.

“சந்திச்சு நாளாச்சுல்ல..!’’ அழுத்தமாகக் கை குலுக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ‘‘ `கசட தபற’ எப்படியிருக்கு டைட்டில்...!’’ தலைமுடி கோதி, சீரமைக்கப்பட்ட தாடியைத் தடவியபடி சிரிக்கிறார். ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ என சிம்புதேவனின் கிளாசிக் மேஜிக்கில் அடுத்த களம் இது.

“அடிப்படையில் நான் கார்ட்டூனிஸ்ட். அதனால் எல்லா விஷயங்களையும் கனமா சேர்த்து வைக்கிற மாதிரி மனசு அமைஞ்சிடுச்சு. நான் எல்லாத்தையும் புதுசா செய்யணும்னு ஆசைப்படுவேன். ‘புலிகேசி-2’ பண்றதுக்கு முன்னாடி அந்த இடைவெளியில் ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. ஒரு படம்னா என்னங்க, அது ஒரு லைஃப்.

“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”
“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”

காமெடி, காதல், சென்டிமென்ட், ஆட்டம், பாட்டம், எமோஷன் எல்லாம் சேர்ந்ததுதானே நம்ம லைஃப். அதையே சினிமாவா பார்க்கிறப்ப எல்லோருக்கும் பிடிச்சுப் போகுது. அதைத்தான் இதில் செய்திருக்கேன். நண்பர் இயக்குநர் வெங்கட்பிரபு கிட்டே சொன்னபோது ஆர்வமா முன்வந்தார்.

ஆறு கதைகள் ஆந்தாலஜி மாதிரி இருக்கும். ஆனால் படம் பார்த்து முடிக்கும்போது ஒரே படம் பார்த்த ஃபீலிங்தான் வரும். லவ், த்ரில்லர்னு ஆரம்பிச்சு எல்லா வகையிலும் கதை போகும். தனித்தனிக் கதைகளாக இருந்தாலும் மொத்தமாக ஒரே படமாகத் தெரியும். எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இப்ப சகலமும் வேறயா மாறி நிக்குது சினிமா. அதன் சகல ரகசியங்களும் வெளியே தெரியுது. படம் புதுசா இருந்தால் யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. வித்தியாசமாகச் செய்ய நினைக்கிறவங்களுக்கு இதுதான் அருமையான நேரம். இந்தச் சமயத்தில் ‘கசட தபற’ வர்றது பெரிய பிளஸ்! எனக்கு சௌகரியமான படங்களையே பண்றேன். இதுவரை தமிழ் சினிமா பார்க்காததுன்னு எதையும் நான் சொல்றது கிடையாது. என் பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியரே...” அமைதியாகப் பேச ஆரம்பிக்கிறார் சிம்புதேவன்.

“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”
“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”

``நிறைய நடிகர்கள் கூட்டமா இருக்காங்க...’’

“சந்திப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினான்னு இன்னைக்கு தனித்தனியா நல்ல லைன்அப் வச்சிருக்காங்க. ஒவ்வொரு கதையும் பிடிச்சுப்போய் நடிக்க முன் வந்தாங்க. ‘படத்தின் ஒரு பகுதியில்தான் வர்றோம்ன்னு நெனச்சுக்கிட்டு ‘ஸாரி’’ன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம். ஆனால் ரசனை அறிந்து நடிச்சுக் கொடுத்தாங்க. வெங்கட்பிரபுவை இதுக்கு முன்னாடி பார்த்ததைவிட வேறு கோணத்துல பார்க்கலாம். இது அவருடைய படம்கிறதால சொல்லலை. படம் பார்த்த உடன் வந்த அபிப்பிராயத்துல சொல்றேன். பிரியா பவானி சங்கர், ரெஜினா என் படத்தில் ரொம்பப் பொருந்தியிருக்காங்க. விஜயலட்சுமிக்கு முக்கியமான ரோல். தெருவுல தலைதெறிக்க ஓடி வந்து சண்டை போடுகிற சீன். பிரமாதமாக நடிச்சிருக்காங்க. என் படங்களில் எப்போதும் பெண்களைத் தவறாகக் காட்ட மாட்டேன். இது முழுக்க தென்சென்னைக் கதைகள். நாம் அதிகமாக வடசென்னைக் கதைகள்தான் பார்த்திருக்கிறோம். இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை. மயிலாப்பூரில் ஆரம்பித்து மாமல்லபுரம் வரை கதை போயிருக்கு.

எளிய மனிதர்களின் கதைதான். நாம் தேடிக்கிற வாழ்க்கை, வந்து சேர்கிற காதல், கிடைக்கிற சந்தோஷம்னு நம்ம உலகம் எல்லாமே அழகா இருக்கும். ஆனால் வாழ்க்கை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறுமா... சீராகுமா, கத்துக்கிட்ட பாடம் என்னன்னு இந்தக் கதைகள் சொல்லும். மினி மீல்ஸ்னு சாப்பிடப் போய் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி வரும்.”

“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”
“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”

``ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு இசை அமைப்பாளர்கள்... விளம்பரங்கள் ஆச்சரியப்படுத்துதே?’’

“சும்மா ஒரு ஐடியா செய்து பார்ப்போமான்னு கேட்டதும் வெங்கட்பிரபு பச்சைக்கொடி காட்டினார். இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். எம்.எஸ்.பிரபு, எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன்னு ஆறு பேர் ஆறு கதைகளை ஒளிப்பதிவு செய்தாங்க. எனக்கு ரொம்பத் திருப்தி. ஒவ்வொருத்தர் ஸ்டைலையும் பார்த்து வியந்து நிற்கும்போதே அவங்க போர்ஷன் முடிஞ்சிருக்கும். அப்படியொரு நல்ல அனுபவம். யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், சாம் சி. எஸ், பிரேம்ஜி, ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன்னு பிஸியாக இருக்கிற அத்தனை இசையமைப்பாளர்களும் ஒவ்வொரு கதைக்கு மியூசிக் செய்தும் பாடியும் கொடுத்திருக்காங்க. ரூபன், ஆண்டனி, காசி விசுவநாதன், விவேக் தர்ஷன், பிரவீன் கே.எல், ராஜாமுகமதுன்னு ஆறு எடிட்டர்கள். அனேகமாக இந்திய அளவில் இப்படியொரு முயற்சி நடந்திருக்குமான்னு தெரியல.”

“பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கரியர்!”

`` ‘23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம்’ - எல்லோருடைய எதிர்பார்ப்பு. அதற்கான சாத்தியங்கள் இருக்கா?’’

“சுமுகமாக பிரச்னைகள் தீர்ந்து தடங்கல்கள் நீங்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கு. நல்லது நடக்கும்னு நம்புவோம்.”