தொடர்கள்
Published:Updated:

“இது இந்திய சினிமா!”

பிரபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாஸ்

“முதல் படமான ‘ரன் ராஜா ரன்’ பண்ணுனதுக்குப் பிறகு கிடைச்ச ஒரு சின்ன ஐடியா இது. கதையை சில பேர்கிட்ட சொன்னப்போ, ‘நல்லா ருக்கு’ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான், ‘சாஹோ’வுக்கு முழு வடிவத்தை உருவாக்கினேன்.

ஏதாவது ஒரு புத்தகம் படிக்கும்போதோ, யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருக்கும்போதோ திடீர்னு ஒரு நல்ல ஐடியா தோணும்ல... ‘சாஹோ’ அப்படித்தான் தோணுச்சு’’ என்கிறார் சுஜித். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது, ‘சாஹோ’ திரைப்படம். இயக்குநர் சுஜித்திடம் பேசினேன்.

“சாஹோ ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது?”

“இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படம். அதோடு, நிறைய உணர்வுகளும் இருக்கும். ஆக்‌ஷன்ல நிறைய விஷயங்களைப் புதுசா முயற்சி பண்ணியிருக்கோம். ஆக்‌ஷனும் திரைக்கதையும் படத்துக்குப் பெரிய பலமா இருக்கும். மூணு நாள் ஷூட்டிங் நடத்த, கிட்டத்தட்ட பதினஞ்சு நாள் வரைக்கும் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் பார்க்க வேண்டியிருந்தது. அதனாலதான், படத்துக்கு ரொம்பநாள் ஷூட்டிங் நடந்த மாதிரி தெரியுது.’’

“ஹீரோவாக பிரபாஸைத் தேர்ந்தெடுத்த காரணம்?”

“இது இந்திய சினிமா!”

“முதல் படம் பண்ணும்போதே பிரபாஸ் சாரை எனக்குத் தெரியும். என் முதல் படத்தோட தயாரிப்பாளர், என் குறும்படங்களைப் பார்த்துட்டு, ‘இந்தப் பையன் நல்லா வருவான்’னு பிரபாஸ்கிட்ட சொன்னார். அதுக்குப் பிறகு, பிரபாஸ் சாரை அவர் வீட்டுல சந்திச்சுக் கதை சொன்னேன். நான் அவருக்குக் கதை சொன்ன சமயத்துல ‘பாகுபலி’ ரிலீஸ் ஆகல. ‘பாகுபலி’க்குப் பிறகு, பிரபாஸின் மார்க்கெட் ரொம்பப் பெருசாகிடுச்சு. ‘சாஹோ’ கதையை அவர்கிட்ட சொன்னப்பவே, மூணு மொழிகளில் எடுக்கிற ஐடியா இருந்தது. ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு அது சாத்தியமாகிடுச்சு.”

“படத்துல இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் இருக்காங்க. எல்லோரையும் எப்படி இணைச்சீங்க?”

“இது இந்திய சினிமா!”

“இந்தப் படத்துல தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு முடிந்தளவுக்கு நான்கு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களையும் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ‘சாஹோ’ படத்துல மலையாள நடிகர் லால் நடிச்சிருக்கார். அருண் விஜய்யோட நடிப்பு எனக்குப் பிடிக்கும். படத்துல ஒரு கேரக்டரை அவர் பண்ணினா நல்லாருக்கும்னு தோணுச்சு. நடிக்க வெச்சுட் டேன். ஜாக்கி ஷெராப் சாரை ‘ஆரண்ய காண்டம்’ல ஏற்கெனவே பார்த்திருப்பீங்க. இதிலும் கலக்கியிருக்கார். அதேமாதிரி, பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷை ‘கத்தி’ படத்திலும், மந்த்ரா பேடியை ‘மன்மதன்’ படத்திலும் பார்த்திருப்பீங்க.

அதாவது, கதை ஒரே இடத்துலதான் நடக்கும். காட்டுற லொக்கேஷன் புதுசு புதுசா இருக்கும். நான் ஷங்கர் சாரோட தீவிர ரசிகன்.

அதனால, அவங்களையும் இந்தப் படத்துல நடிக்கவைக்கத் தேர்ந்தெடுத்தேன். புதுசா ஒரு நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி, அவங்களை மனசுல பதியவைக்கிறது கஷ்டம். அதனாலதான் இப்படி ஒரு முடிவு. ஹீரோயின் ஷரத்தா கபூர் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கும். பாலிவுட்ல பிஸியா நடிச்சுக் கிட்டிருந்தாலும், கதை பிடிச்சதால இந்தப் படத்துல நடிக்க ஓகே சொன்னாங்க.”

“உங்க முதல் படத்துக்கு ஜிப்ரான் இசை. ‘சாஹோ’ படத்துக்கும் அவர்தான் பின்னணி இசை. அவரைப் பற்றி?”

“இது இந்திய சினிமா!”

“ஜிப்ரானை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு என்ன வேணும், வேண்டாம்னு ஜிப்ரானுக்கு நல்லா தெரியும். எப்பவும் என்னோட பெஸ்ட் சாய்ஸ் ஜிப்ரான் மட்டும் தான். படத்துல நான்கு பாடல்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளரைப் பயன்படுத்தியிருக்கோம். ‘காதல் சைக்கோ’ சிங்கிள் டிராக்கை ரிலீஸ் பண்ணியிருந்தோம். அனிருத் பாடினா நல்லாருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டேன்; அவரும் சந்தோஷமா பாடிக் கொடுத்தார். மத்த மொழிகள்ல கேட்டதைவிட, தமிழ் வெர்ஷன் ரொம்ப நல்லா இருந்தது.”

“பல வெளிநாடுகளில் ‘சாஹோ’ படப்பிடிப்பு நடந்திருக்கு. பிரமாண்டமான படம்னு காட்டுறதுக்காக இதெல்லாம் பண்ணீங்களா?”

“ஒரு படத்துல வெளிநாடுகளைப் பச்சைப் பசேல்னு காட்டுவாங்க; அது எனக்குப் பிடிக்காது. அந்தமாதிரி காட்சிகளை நான் விரும்பவும் மாட்டேன். ஹாலிவுட் படம் மாதிரி இருக்கணும்னு நினைச்சுக்கிட்டு, இப்படிப் பண்ணுவாங்க. ஹாலிவுட் படங்கள் இருக்கும்போது, அதோட மாதிரி எதுக்கு?! நம்ம மொழியிலும் அதேமாதிரி படங்களை ஏன் பண்ணணும். இந்தியப் படங்கள்ல நம்மளால முடிஞ்ச திறமையைக் காட்டினா போதும். கதைக்களம் இந்திய மக்களுக்கு ஏற்றமாதிரி இருந்தாலும், வித்தியாசமான லொக்கேஷன்களில் படமாக்கலாம்னுதான் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தினேன். அதாவது, கதை ஒரே இடத்துலதான் நடக்கும். காட்டுற லொக்கேஷன் புதுசு புதுசா இருக்கும். நான் ஷங்கர் சாரோட தீவிர ரசிகன். அவர் பாடல்களைப் படமாக்குகிற விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும், அவரை மாதிரி ஒரு பாடலை ஷூட் பண்ணிப் படத்துல வெச்சிருக்கேன்.”

“சண்டைக் காட்சிகளுக்குப் படத்துல முக்கியத்துவம் அதிகம்னு சொல்றீங்க. பிரபாஸ் அதுக்கு எப்படித் தயாரானார்?”

“படத்துல ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் மட்டும் இருந்தா, படம் முழுக்க ஒரேமாதிரியான ஆக்‌ஷன் சீக்வென்ஸ் வரும். அதனால, ஒவ்வொரு ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கும் ஒவ்வொரு ஸ்டன்ட் மாஸ்டரைப் பயன்படுத்தியிருக்கோம். ‘பாகுபலி’க்கு முன்னாடியே ஆக்‌ஷன்ல அசத்தியவர் பிரபாஸ். இந்தப் படத்துக்காகத் தண்ணீருக்குள்ள ஸ்கூபா டைவிங்லாம் பண்ணியிருக்கார்.”