Published:Updated:

மீண்டும் `மாயாபஜார்'... சுந்தர்.சி சினிமாவில் என்ன ஸ்பெஷல்?

சுந்தர்.சி
சுந்தர்.சி

`மாயாபஜார்' படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர்.சி.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் இயக்குநர் சுந்தர் சி. குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் வகையில் ஃபேமிலி டிராமா படங்களை காமெடி ஜானரில் கொடுப்பவர்.

மேலும், இவரது பேய் படங்களான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை2' ஹிட் அடித்த நிலையில் மூன்றாவது பாகத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மாயாபஜார்'
மாயாபஜார்'
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா vs போட்டோஷூட் ஷிவானி... எல்லை மீறும் வார்த்தைகள், பிரச்னை என்ன?!
கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற 'மாயாபஜார்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர் சி. இராதகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் க்ரைம் காமெடி வகையை சேர்ந்தது இந்தப் படம்.
சுந்தர் சி
சுந்தர் சி

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசன்னா, யோகி பாபு, அஷ்வின், சிங்கம் புலி, எனப்பல நடிகர்கள் நடிக்கயிருக்கின்றனர். மேலும், படத்தின் நாயகிகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். அவரின் முன்னாள் உதவி இயக்குநர் பத்ரி இயக்குகிறார்.

அடுத்த கட்டுரைக்கு